மெட்ரோ டிக்கெட்டை மொத்தமா புக் பண்ண சூப்பர் வழி! இனி க்யூல நிக்க வேணாம்!

சென்னை மெட்ரோவில் மொத்தமாக டிக்கெட் புக் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே குழு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மெட்ரோவை பயன்படுத்த மொத்தமாக டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ள முடியும். இதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக க்யூஆர் கோடு டிக்கெட் வழங்கப்படும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையில் மெட்ரோ போக்குவரத்தை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவரவர் அன்றாட வேலைகளை செய்வதற்காகவும், பணி நிமித்தமாகவும் சென்னை நகரங்களுக்குள் பயணிக்க மெட்ரோ வசதியாக இருக்கிறது. சென்னையில் இருக்கும் அதிகமான மக்கள் தொகைக்கு மெட்ரோ மிக அவசியமானவ தேவையாக இருக்கிறது.

chennai metro bulk qr booking

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக டிராபிக் இல்லாமல் பயணிக்க மெட்ரோ சிறந்த ஆப்ஷனாக இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வரை மெட்ரோவில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்கும் முறை தான் அமலில் இருக்கிறது.

உதாரணமாக நீங்கள் குடும்பத்துடன் சென்றாலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்க மெட்ரோவிற்கான டிக்கெட் எடுக்கும் போது ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக டிக்கெட் டோக்கன் வழங்கப்படும். வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆன்லைன் வழிமுறையில் எடுத்தாலும் ஒவ்வொரு டிக்கெட்டும் தனித்தனியாக தான் எடுக்க முடியும்.

chennai metro bulk qr booking

இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக மெட்ரோ டிக்கெட்டை புக்கிங் செய்ய புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் ஜிஃபோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மூலம் மொத்தமாக டிக்கெட்களை விற்பனை செய்கிறது.

அதன்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல மெட்ரோவை பயன்படுத்த விரும்பினால் அவர்கள் மொத்தமாக டிக்கெட்டை புக் செய்யலாம். இப்படியாக டிக்கெட்டை புக் செய்யும் போது தனித்தனி டிக்கெட்டுகளுக்கு தனித்தனிக்கு க்யூஆர் கோடு வழங்கப்படும்.

chennai metro bulk qr booking

இந்தக் கியூஆர் கோடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் இந்த க்யூஆர் கோடையும் சேர்த்த அச்சடித்து வழங்கலாம். அந்த நிகழ்விற்காக குறிப்பிட்ட தேதியில் பயணிக்கும் நபர்கள் தங்களின் அழைப்பிதழில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பம் மெட்ரோ வரலாற்றிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் அறிமுகத்திலேயே 5000 மெட்ரோ டிக்கெட்களை குறிப்பிட்ட நிறுவனம் புக் செய்துள்ளது. இதை முதற்கட்டமாக விநியோகம் செய்யவுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிகழ்விற்காக வரும் நபர்களுக்கு இலவசமாக மெட்ரோ பயணத்தை வழங்க முடியும்.

இந்த தொழில்நுட்பம் மூலம் தடையில்லாத பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பிராண்டிங் மட்டும் இமேஜை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம் கார்பரேட் நிறுவன நிகழ்விற்கு கார் போன்ற தனிப்பட்ட வாகனத்தில் வராமல் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்தவும் முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மெட்ரோ நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்களை புக் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது மொத்தமாக டிக்கெட் புக் செய்யும் ஆப்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் வரவேற்க்க வேண்டியது தான். மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரில் உள்ள டிக்கெட்டை குறைக்க இது நல்ல வழி.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 18:30 [IST]
English summary
Cmrl launched bulk qr pre booking facility
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X