சிஎன்ஜி நிரப்பும் போது இந்த விஷயத்தை செக் பண்ணுங்க! இல்லேன்னா நஷ்டம் தான்!
இன்று இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் எரிபொருளுக்காக அதிக செலவு செய்ய வேண்டியது இருப்பதாக கருதுகின்றனர். இந்நிலையில் புதிதாக வாகனம் வாங்கும் பலர் பெட்ரோலுக்கு பதிலாக சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனத்தை தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் ஏகப்பட்ட பணத்தை நிச்சயம் செய்ய முடியும் என நினைக்கிறார்கள். சிஎன்ஜி எரிபொருள் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? இதன் மூலம் எப்படி காசு மிச்சம் ஆகிறது என்ற விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் எல்லாம் கச்சா எண்ணெய் என்ற மூலப்பொருளில் இருந்து தான் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய் என்பது பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படுகிறது. இப்படியாக பூமிக்கு அடியில் இருந்து இயற்கை வளங்களை சுரண்டி எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு காலத்தில் இது எல்லாம் காலியாக போய்விடும். அதன் பிறகு எரிபொருளுக்கு நாம் அதிக சிரமப்பட வேண்டியது இருக்கும்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படியான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருளை பயன்படுத்த பல்வேறு திட்டங்களை போட்டு வருகின்றனர். இதற்காக தான் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசாங்கங்கள் செய்து வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் போதிய அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி பெறாமல் இருக்கிறது. மேலும் அது முற்றிலுமாக வேறு ஒரு தொழில்நுட்பமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் கம்பஷன் இன்ஜின் வாகனங்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கம்பஷன் இன்ஜினிலேயே பெட்ரோல்,டீசலுக்கு பதிலாக வேறு எரிபொருளை பயன்படுத்தினால் அதன்மூலம் இப்படியான மாசு மற்றும் இயற்கை வள சுரண்டல்களை குறைக்கவும் தடுக்கவும் முடியும் என்ற பேச்சு இருந்து வந்ததை இதற்கு மாற்றாக வந்தது தான் சிஎன்ஜி என்ற எரிபொருள்.

சிஎன்ஜி என்பதற்கு விரிவாக்கம் கம்ப்ரஷர் நேச்சுரல் கேஸ் என்பதாகும். அதாவது இயற்கை எரிவாயுவை கம்பிரஸ் செய்து அதை வாகன இன்ஜினில் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இதை பயன்படுத்த முடியும் என சொல்லப்பட்டு இப்பொழுது இது அதிக அளவில் பயன்பாட்டிற்கு வர துவங்கி விட்டது. நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் அடுப்பில் எல்பிஜி கேஸ் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பெட்ரோல் தயாரிப்புகளில் வரும் விஷயம்தான்.
ஆனால் சிஎன்ஜி என்பது இயற்கையாக விளையும் விவசாய கழிவுகளில் மூலம் எடுக்கப்படும் எரிவாயு ஆகும். இந்த எரிவாயுவை அதிக பிரஷரில் கம்பிரஸ் செய்து அதை வாகனங்களில் பயன்படுத்தினால் வாகனங்களில் எரிபொருளாக இது செயல்படும். அதே நேரத்தில் இதன் விலையும் குறைவாக தான் இருக்கும். இதனால் பெட்ரோலை விட குறைந்த விலையில் இந்த எரிபொருளை பயன்படுத்த முடியும்.
சாதாரணமாக கிடைக்கும் இயற்கை வாயுவை நேரடியாக வாகனங்களை பயன்படுத்த முடியாது. அதை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும். இப்படியாக சாதாரண இயற்கை வாயுவை 200 பார் வரை அழுத்தம் கொடுத்து அதை வாகனங்களில் பயன்படுத்த வேண்டும். இப்படியாக பயன்படுத்தும் போது அதை சுலபமாக வாகனங்களுக்கான எரிபொருள் போன்று பயன்படுத்த முடியும்.
இன்று தமிழகத்தில் சிஎன்ஜி கேஸ் கிலோவிற்கு ரூபாய் 87 வரை விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 100க்கு விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் இயங்கும் வாகனம் சிஎன்ஜியில் இயங்கும் போது பெட்ரோலை விட அதிகமான மைலேஜ் வழங்கும். அப்படியாக கணக்கிட்டு பார்க்கும்போது கிட்டத்தட்ட பெட்ரோல் மூலம் எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதே தூரத்தை சிஎன்ஜி மூலம் பயணித்தால் செலவு பாதியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.
பெட்ரோலைப் போல சிஎன்ஜி கிடையாது சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் பைப் லைனிற்கு அதிக பராமரிப்பு தேவைப்படும். இதனால் சிஎன்ஜி வாகனங்கள் வாங்கும் போது இந்த பராமரிப்பு குறித்த விஷயங்களை எல்லாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரம் சிஎன்ஜி எரிவாயுவை நிரப்பும்போது முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பம்புகளில் எவ்வளவு பிரஷர் இருக்கிறது என்பதை கவனித்த பின்பு எரிவாயுவை ஏற்ற அனுமதிக்க வேண்டும். பொதுவாக 200 பார் வரை பிரஷர் தேவைப்படும். வாகனங்களில் உள்ள சிலிண்டர்கள் இந்த 200 பார் பிரஷரை தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சிஎன்ஜி பம்புகளில் 200 பார்க்கும் குறைவான அளவில் பிரஷர் இருந்தால் உங்களுக்கு போதுமான அளவு சிஎன்ஜி கிடைக்காது. அதனால் எப்பொழுதும் சிஎன்ஜி நிரப்பும்போது 200 ரூபாய் அளவுக்கு பம்புகளில் பிரஷர் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் சிஎன்ஜி அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பது தற்போது உள்ள விற்பனை அளவை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோலுக்கு மாற்றாக இன்று சிஎன்ஜி வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாக துவங்கிவிட்டன. குறைவான எரிபொருள் செலவு மற்றும் அதிக மைலேஜ் காரணமாக மக்கள் இந்த எரிபொருளை அதிகம் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் இது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications








