உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி கார்களில் எந்த கார் பெஸ்ட் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. அதற்குத் தீர்வு சொல்லும் வகையில் இந்த செய்தியை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

நீங்கள் கார் வாங்கப்போகிறீர்கள் என்றால் அது குறித்து யோசிக்கப் பல விஷயங்கள் இருக்கிறது. குறிப்பாக உங்கள் பயன்பாடு என்ன? உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனம் எது? உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றதா? பராமரிப்பு செலவுகள் எப்படி இருக்கும்? எவ்வளவு மைலேஜ் தரும் எனப் பல விஷயங்களைப் பார்ப்போம்.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

இதில் பெரும்பாலான மக்கள் குழப்பிப் போகும் பகுதி என்ன எரிபொருளில் ஓடும் வாகனத்தைவாங்கப்போகிறோம் என்பது தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, ஹைபிரிட், எலெக்ட்ரிக் எனப் பல ஆப்ஷன்கள் இருக்கிறது. இதில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் புதிதாக மார்கெட்டிற்கு வந்தது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி பல ஆண்டுகளாக மார்கெட்டில் இருக்கிறது.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

இதில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஒரே மாதிரியான இன்ஜினை கொண்டது.பெட்ரோலை வாங்க வேண்டுமா? சிஎன்ஜி காரை வாங்க வேண்டுமா? எது லாபம்? எது நமது பயன்பாட்டிற்குச் சிறப்பாக இருக்கும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இதைப் பற்றித் தான் தெளிவாகக் காணப்போகிறோம்.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிற்குமான விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. பெட்ரோலை விடப் பாதி விலையில் சிஎன்ஜி கேஸ் விலை இருக்கும். ஆனால் தற்போது அப்படி இல்லை இரண்டிற்கும் இடையேயான விலை வித்தியாசம் குறைந்துவிட்டது.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

இன்று பெட்ரோல் விலை சராசரியாக ரூ100 என்று இருக்கிறது. சிஎன்ஜி கேஸ் விலை ரூ70 என இருக்கிறது. எப்படி இருந்தாலும் பெட்ராலை விட சிஎன்ஜி விலை இன்றும் குறைவாகத் தான் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பலருக்கு சிஎன்ஜி காரை வாங்கலாமா பெட்ரோல் காரை வாங்கலாமா எது லாபம் என யோசிப்பார்கள்.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

நீங்கள் பொருளாதார ரீதியாக யோசித்தாலும் சுற்றுச்சூழல் ரீதியாக யோசித்தாலும் சரி சிஎன்ஜிதான் சிறந்தது. மைலேஜ் ரீதியாக பார்க்கும் போது ஒரு பெட்ரோல் கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 கி.மீ மைலேஜ் தருகிறது என்றால் அதே கார் சிஎன்ஜி காராக மாற்றினால் அது அதே ரூ100 அளவிலான கேஸிற்கு 20-25 கி.மீ வரை மைலேஜ் தரும்.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

அதனால் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்தால் உங்களுக்கு பெட்ரோலை விட சிஎன்ஜி கார் சிறப்பான மைலேஜை தரும். அதனால் பொருளாதார ரீதியில் பெட்ரோல் காரை விட சிஎன்ஜின கார்கள் தான் உங்களது பணத்தை மிச்சப்படுத்தும். காரை உள்ளூருக்குள் மட்டும் பயன்படுத்துபவர்களுக்குப் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாவிட்டாலும் குறைந்த வித்தியாசம் தெரியும்.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

அதே போல சிஎன்ஜி காரை பொருத்தவரை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதிலும் சிறந்த காராக இருக்கிறது. பெட்ரோல் காரில் கம்பஷன் இன்ஜினிலிருந்து எவ்வளவு புகை வெளியேறுகிறதோ அதை விட சிஎன்ஜி காரில் கம்பஷன் மூலம் வெளியேறும் புகையின் அளவு குறைவுதான்.

உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது பெட்ரோலா? சிஎன்ஜியா? எந்த கார் பெஸ்ட்?

அதே நேரத்தில் செயல் திறனை ஒப்பிடும் போது பெட்ரோலில்தான் இன்ஜின் அதன் முழு செயல் திறனைக் காட்டும், சிஎன்ஜிக்கு ஏற்றவாறு இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டிருந்தால் அதே போல அதுவும் சிறப்பான செயல் திறனைக் காட்டும். இனி நீங்கள் எந்த காரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் முன்பு இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Article Published On: Sunday, June 19, 2022, 10:30 [IST]
English summary
Cng is more beneficial than petrol know full details
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+