டீக்கடை மாதிரி முக்குக்கு முக்கு திறக்க போறாங்க! இனி யாரும் பெட்ரோல், டீசல் போட மாட்டாங்க!

இந்தியாவில் சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2030-ம் ஆண்டுக்குள் முக்குக்கு முக்கு டீக்கடை இருப்பது போல சிஎன்ஜி ஸ்டேஷன்களும் அதிகரித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக மக்கள் அதிக மைலேஜ் தரும் வாகனங்களை விரும்பி வருகிறார்கள்.

குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள்தான் ஏற்றதாக இருக்கிறது என்பதால் மக்கள் தற்போது சிஎன்ஜி வாகனங்களை நோக்கி கவனத்தைத் திருப்பி வருகிறார்கள். விலை குறைவாக இருப்பதால் சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் அதிகமான பணம் சேமிக்க முடிகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. விற்பனை எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்தாலும் மறுபக்கம் சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

Tata Nexon iCNG

இது சிஎன்ஜி வாகன உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தாலும், சிஎன்ஜி வாகனங்களில் பெட்ரோலையும் பயன்படுத்த முடியும் என்பதால் ஸ்டேஷன் கிடைக்காத இடங்களில் பெட்ரோல் மூலம் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிஎன்ஜி கிடைக்கும் நிலையங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது வரை இந்தியாவில் 7000 ஸ்டேஷன்களில் சிஎன்ஜி விற்பனை நடந்து வருகிறது. இதில் 80% பெருநகரங்கள் மற்றும் டயர்1 சிட்டிகளில் மட்டுமே இருக்கின்றன. பாக்கியுள்ள 20% மட்டுமே மற்ற பகுதிகளில் உள்ளன. இந்நிலையில் 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் சிஎன்ஜி விநியோகம் செய்யும் நிலையங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Tata Nexon iCNG Twin-cylinder

2030ம் ஆண்டுக்குள் மொத்தம் 17,500 சிஎன்ஜி நிலையங்களில் சிஎன்ஜி விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக துவங்கப்படும் சிஎன்ஜி நிலையங்கள் எல்லாம் பெரும்பாலும் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களை குறிவைத்து துவங்கப்படுகின்றன. அதனால் சிறு,குறு நகரங்களில் கூட இனி சிஎன்ஜி ஸ்டேஷன்கள் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு தகுந்தார் போல் வாகன விற்பனை நிறுவனங்களும் தற்போது சிஎன்ஜி வாகனங்களை அதிகமாக விற்பனை செய்து வருகின்றன. பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் சிஎன்ஜி வாகன விற்பனையில் கணிசமான அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக மாருதி நிறுவனம் கடந்த ஒரு ஆண்டில் 33 சதவீதம் அளவுக்கு தனது சிஎன்சி வாகனங்களின் விற்பனையை அதிகரித்துள்ளது.

அதே நேரம் ஹுண்டாய் நிறுவனமும் தனது சிஎன்ஜி வாகன விற்பனையை 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி முக்கியமான எரிபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி கிடைக்கும் நிலையங்களில் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் நிச்சயம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சிஎன்ஜி எரிபொருள் பெட்ரோல், டீசல் போல அல்லாமல் சுற்றுச்சூழலுக்கு குறைவான மாசு ஏற்படுத்தும் எரிபொருளாக இருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக இந்த எரிபொருளை பயன்படுத்த அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதேநேரம் இது பூமியிலிருந்து எடுக்கப்படும் வாயு கிடையாது. இயற்கையாக கிடைக்கும் வாயு என்பதால் பூமிக்கும் இதனால் எந்த பிரச்சினையும் கிடையாது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய மக்கள் பலர் அதிக மைலேஜ் விரும்பும் வாகனங்களை தான் விரும்புவார்கள். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாச கட்டுப்பாடு விதிகள் காரணமாக அதிக மைலேஜ் தர முடியாத சூழ்நிலையில் சிஎன்ஜி வாகனங்கள் அதற்கு மாற்றாக தற்போது மாறி வருகின்றன. இது எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவு வளர்ச்சி அடையும் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2024, 18:17 [IST]
English summary
Cng station coverage increase small medium cities
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+