கோவில் பிரசாதமாக இருந்தாலும் தேங்காயை விமானத்தில் எடுத்து செல்ல முடியாது! இதுக்கு காரணம் இது தான்!

விமானங்களில் பயணம் செய்யும்போது ஹேண்ட் லக்கேஜில் சில குறிப்பிட்ட பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. முக்கியமாக பவர் பேங்க், இ-சிகரெட் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை இருப்பது நமக்கு தெரியும். இவை எல்லாம் எளிதில் தீப்பற்றக்கூடிய விஷயமாக இருப்பதால் இவை தடை செய்யப்பட்டுள்ளது. இதை செக்கின் லக்கேஜில் போட்டு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் லக்கேஜில் தேங்காய் எடுத்துச் சொல்லக் கூடாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படியான ஒரு விதிமுறை இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

விமானத்தில் பறப்பது என்றால் பலருக்கும் பிடிக்கும். இதனால் பலர் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவை வைத்திருக்கிறார்கள். ஆனால் விமான பயணம் என்பது அதிக ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. இந்த ஆபத்துக்களை குறைப்பதற்காக விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கையில் கொண்டு வரும் லக்கேஜ் குறிப்பிட்ட சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

coconut ban in flight

குறிப்பாக சிகரெட் லைட்டர்கள், இ-சிகரெட், பவர் பேங்க் உள்ளிட்ட பொருட்களை விமானத்திற்குள் பயணிகள் எடுத்து செல்லக்கூடாது. இதை விமான நிலையத்தின் செக்யூரிட்டி செக்கின் போது சோதனை செய்து தான் அனுப்புவார்கள். இதற்கு முக்கியமான காரணம் இவையெல்லாம் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய பொருட்களாக இருக்கின்றன.

இதனால் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, இந்த பொருட்கள் காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக தீ விபத்து ஏற்பட்டால் இது பயணிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கும் என்பதால் இப்படியான பொருட்களை விமானத்திற்குள் பயணிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த பொருட்களை எல்லாம் செக்கிங் லக்கேஜில் போட்டுவிட்டு பத்திரமாக விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும்.

coconut ban in flight

மனித தொடர்புகள் இருந்தால் மட்டுமே இப்படியான பொருட்கள் தீப்பிடிக்கும் என்பதால் செக்கிங் லக்கேஜில் மட்டும் இந்த பொருட்களுக்கு அனுமதி இருக்கிறது. கையில் கொண்டு செல்லும் லக்கேஜில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இப்படியாக கையில் கொண்டு செல்லும் லக்கேஜில் அனுமதி இல்லாத பொருட்கள் பட்டியலில் ஒரு வித்தியாசமான பொருளும் இருக்கிறது.

விமான பயணிகள் தங்கள் கையில் கொண்டு செல்லும் லக்கேஜில் தேங்காயை கொண்டு செல்லவும் அனுமதி இல்லை என்ற விதிமுறை தற்போது அமலில் இருக்கிறது. ஆன்மீக பயணம் சென்று வரும் பயணிகள் பலர் கோவிலில் பிரசாதமாக தேங்காயை வாங்கி விட்டு அதை தங்கள் கைப்பையில் வைத்து கொண்டு வருவார்கள். இப்படியாக கொண்டு வரும்போது விமானத்தில் அவர்கள் இந்த தேங்காயை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

coconut ban in flight

பல பயணிகள் இந்த விசித்திரமான விதிமுறையை கேட்டு ஆச்சரியப்பட்டு உள்ளார்கள். பலருக்கும் தேங்காயை ஏன் கையில் கொண்டு செல்லும் லக்கேஜில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. ஆனால் இதற்குப் பின்னால் சில முக்கியமான அறிவியல் காரணமும் இருக்கிறது. இதன் காரணமாக தான் இந்த விதிமுறை அமலில் இருக்கிறது.

தேங்காய் என்பது எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருள் என்பதால் தேங்காயை கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேங்காய் எந்த வகையில் இருந்தாலும், அதை ஹேண்ட் லக்கேஜில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. முழு தேங்காயாக இருந்தாலும் சரி, உடைத்த தேங்காய் இருந்தாலும் சரி, அல்லது உடைத்து காய வைக்கப்பட்ட தேங்காயாக இருந்தாலும் சரி அதற்கு அனுமதி கிடையாது.

உடைத்து காய வைக்கப்பட்ட தேங்காயை பொருத்தவரை அதிக எண்ணெய் சத்துடன் இருக்கும். இது எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய பொருள் என்பதால் இதற்கும் அனுமதி கிடையாது. ஆனால் இந்த தேங்காய்களை செக்கின் லக்கேஜில் வைத்து எடுத்துச் செல்லலாம். இதில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தேங்காய் விவகாரத்தில் ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் மாறி மாறி கடைபிடிக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில விமான நிலையங்களில் உடைக்கப்பட்ட தேங்காய் வைத்து எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. சில விமான நிலையங்களில் செக்கிங் லக்கேஜில் அனைத்து விதமான தேங்காய்களையும் வைத்து சில அனுமதிக்கப்படுகிறது. சில விமான நிலையங்களில் தேங்காயை எந்த லக்கேஜிலும் அனுபவிக்கப்படுவதில்லை. தேங்காய்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் என்பதால் இந்த தடை இருக்கிறது. நீங்கள் விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்தால் கவனமாக இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 11:22 [IST]
English summary
Coconuts are banned in flights know full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X