பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரிலும், பல்வேறு வசதிகளுடன் கூடிய சிகப்பு நிற டவுன் பஸ்கள் வெகு விரைவில் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசு பஸ்கள் மிகவும் அவல நிலையில் உள்ளன. இவற்றில் பயணம் செய்ய பயணிகள் விரும்புவதில்லை. அதற்கு மாறாக சொகுசான வசதிகளுடன் இயக்கப்பட்டு வரும் தனியார் பஸ்களையே பயணிகள் நாடி செல்கின்றனர். எனவே தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

அத்துடன் தமிழக அரசு பஸ்களின் 'கண்டிஷன்' நன்றாக இல்லாததால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. தமிழக அரசு பஸ்களால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவது கிடையாது. எனவே தமிழக அரசு பஸ்களை நீதிமன்றங்கள் ஜப்தி செய்யும் நிகழ்வும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்திற்கு இதுபோல் பல்வேறு வழிகளில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து கழகத்தை மிகவும் லாபகரமான முறையில் இயங்க வைக்க தேவையான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தற்போது எடுக்க தொடங்கியுள்ளது.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக தனியார் பஸ்களுக்கு இணையான வசதிகளை கொண்ட பேருந்துகளை தமிழக அரசு தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அத்துடன் சுற்றுச்சூழலை பாதிக்காத அதே சமயம் குறைவான செலவில் இயக்கப்பட கூடிய எலெக்ட்ரிக் பஸ்களை தமிழகத்தில் அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சோதனை அடிப்படையில் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சென்னையில் சிகப்பு நிற டவுன் பஸ்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த சிகப்பு பஸ்கள் வெகு விரைவில் கோவை நகரிலும் இயக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

கோவை மாநகர எல்லையில் இயக்குவதற்காக 50 தாழ் தள பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கரூரில் இவை தயாரிக்கப்படுகின்றன. முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட பஸ்கள் கோவை நகரையும் வந்தடைந்து விட்டன. அவை தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் (Tamil Nadu State Transport Corporation - TNSTC) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

கோவை மாநகரில் இந்த பஸ்களை இயக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வெகு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்தவுடன் கோவை மாநகரை இந்த சிகப்பு பஸ்கள் கலக்க உள்ளன. அனேகமாக தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த பஸ்கள் அனைத்தும் கோவை நகரில் களமிறக்கப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

இதுகுறித்து தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''பழைய மற்றும் சேதமடைந்த டவுன் பஸ்களுக்கு மாற்றாக இந்த பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவற்றில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பஸ்களில் 'பக்கெட்' இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் லைட்டிங் வசதிகளும் சிறப்பாக இருக்கும்.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக பழைய பஸ்களில் ஸ்பிரிங் சஸ்பென்ஸன் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த புதிய பஸ்களில் ஏர் சஸ்பென்ஸன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர் இருக்கைகள் தவிர பயணிகளுக்கு 40 இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பேருந்துக்குள் பயணிகள் எளிதாக நடந்து சென்று வர விசாலமான இட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

எனவே பயணிகள் நெரிசல் இன்றி சௌகரியமாக பயணிக்க முடியும். இதுதவிர இந்த பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வழித்தடம் மற்றும் பேருந்து நிறுத்தத்தை தெரிவிக்கும் எலெக்ட்ரானிக் திரையும் இந்த பஸ்களில் இடம்பெற்றிருக்கும். பயணிகள் குழப்பம் அடைவதை இது தடுக்கும்.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

இந்த பஸ்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஒரு பஸ்ஸின் விலை 28 லட்ச ரூபாய். சிகப்பு நிற பஸ்கள் ஏற்கனவே சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக கோவையிலும் வெகு விரைவில் இந்த சிகப்பு பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. தமிழக அரசிடம் இருந்து என்ஓடி கிடைப்பதற்காக தற்போது காத்து கொண்டிருக்கிறோம்.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த பஸ்களை நீங்கள் கோவை சாலைகளில் பார்க்க முடியும்'' என்றனர். இந்த பஸ்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்த பஸ்களின் சிகப்பு நிறமும் கவனம் ஈர்த்துள்ளது. பொதுவாக தமிழக அரசு பஸ்களின் நிறத்திற்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

ஆனால் தற்போது ஏன் பஸ்கள் சிகப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றன? என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது நமது சந்தேகத்திற்கான பதிலை அவர்கள் வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''விண்டேஜ் லுக்கை மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது.

பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

லண்டன் மாநகரில் சிகப்பு நிற பஸ்கள் இயக்கப்படுகின்றன. மும்பையிலும் கூட உங்களால் சிகப்பு வண்ண பஸ்களை பார்க்க முடியும். எனவே தமிழகத்திலும் பேருந்துகளில் விண்டேஜ் லுக்கை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். அதன் காரணமாகவே பஸ்கள் சிகப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன'' என்றனர்.

Source: Auto Economictimes

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coimbatore Will Soon Get 50 New Low Floor Red Buses. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X