கொங்கு நாடு மக்களுக்கு வந்தே பாரத் ரயிலை பார்சல் செய்த மத்திய அரசு! பெங்களூருக்கு இனி ஈஸியாக போயிட்டு வரலாம்

கோவையில் இருந்து பெங்களூரு வரை வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் வரிசையாக வந்தே பாரத் ரயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. அதன்படி தற்போது சென்னையில் இருந்து கோவை திருநெல்வேலி பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் விஜயவாடா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Coimbatore Bangalore Vande Bharat

இந்நிலையில் தமிழகத்திற்கு மற்றொரு புதிய வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து பெங்களூருக்கு புதிதாக வந்தே பாரத் ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது துவங்கி உள்ளதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

தற்போது கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே ரயில் பாதையில் பயணிக்க இரண்டு விதமான ரூட்டுகள் உள்ளன. கோவையிலிருந்து சேலம் வந்து ஓசூர் வழியாகவும் பெங்களூருக்கு வர முடியும் சேலத்தில் இருந்து குப்பம் வழியாகவும் பெங்களூருக்கு வர முடியும் ஓசூர் வழியாக வந்தால் சுமார் 379 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டி இருக்கும் குப்பம் வழியாக வந்தால் 420 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.

Coimbatore Bangalore Vande Bharat

இதில் வந்தே பாரத் ரயில் பெரும்பாலும் குப்பம் வழியாக தான் பெங்களூருக்கு இயக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் சேலத்தில் இருந்து ஒசூர் ரூட்டிலும் பையப்பனஹள்ளியிலிருந்து கார்மேலாரம் ரூட்டிலும் ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளனஒற்றை ரயில் பாதை உள்ள ரூட்டில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொள்ளாது.

இதனால் இரட்டை ரயில் பாதை உள்ள குப்பம் வழியாக மட்டுமே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது. சேலம் முதல் ஓசூர் வழியாக ஒற்றை ரயில் பாதையில் வந்தே பாரத் ரயிலை இயக்கினாலும் அந்த பாதையில் அதிகபட்சமாக 80 முதல் 90 கிமீ வேகத்தில் தான் ரயிலை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Coimbatore Bangalore Vande Bharat

அந்த ரயில் பாதை அந்த அளவு வேகத்தை தாங்கும் வகையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பங்காருபேட்டை குப்பம் வழியாக பயணித்தால் அதிகபட்சமாக 130 கிமீ வேகும் வரை பயணிக்க முடியும். இதனால் அந்த பாதையில் தான் வந்தே பாரத் ரயில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேலம், குப்பம், திருப்பத்தூர், கேஆர் புரம், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பெங்களூருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் இருந்து காலையில் கிளம்பும் இந்த ரயில் மதியத்திற்குள் பெங்களூருக்கு செல்லும் என்றும் அங்கிருந்து மதியம் கிளம்பும் ரயில் இரவு கோவைக்கு வந்து சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் எந்த நேரத்தில் இயக்கப்படுகிறது என்ற கால அட்டவணை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ரயிலுக்கான டிக்கெட் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. ரயில் பெட்டியை பொருத்தவரை 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் தான் இந்த ரூட்டில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ரூட்டில் டபுள் டக்கர் ரயில்கள் எல்லாம் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து இந்த ரோட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு இருக்கும்.

பெங்களூரு கோவை இடையே இந்த ரயில் இயக்கப்படுவதால் கோவை ஈரோடு திருப்பூர் சேலம் திருப்பத்தூர் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த மாவட்டங்களுக்கும் கர்நாடக மாநிலத்தில் பங்காருபேட்டை கேஆர் புரம் உள்ள பகுதிகளுக்கும் பலன் தரும் வகையில் இந்த ரயில் சேவை என்பது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த ரயில் சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் பொங்கலுக்கு முன்பே ரயில் சேவை துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கோவை, பெங்களூர் நகரத்தை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ள வந்தே பாரத் ரயில் நிச்சயம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தும். பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்க போதுமான ரயில் வசதிகள் இல்லாததால் அந்த ரூட்டிலும் வந்தே ரயிலை இயக்க மக்கள் மத்தியில் கோரிக்கை இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 19, 2023, 12:45 [IST]
English summary
Coimbatore bangalore vande bharat start december end
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X