கோவை டூ பெங்களூரு வெறும் 5:38 மணி நேரம் தான்! வருகிறது புதிய வந்தே பாரத் ரயில்
கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதன் மூலம் விரைவில் இந்த ரூட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது கோவைக்கு இரண்டாவது வந்தே பாரத் ரயில் பெங்களூரு-கோவை வந்தே பாரத் ரயிலாக அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் பாருங்க.
இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பகல் நேர வந்தே வந்தே பாரத் ரயில் அறிமுகமாகி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் எல்லாம் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு மிக விரைவாக பயணிக்க முடிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூர் விற்கும், சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கும், சென்னை விஜயவாடா இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென்னக ரயில்வே தற்போது தமிழகத்திற்கு புதிதாக மற்றவர் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்த செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதன்படி கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் கோவையிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயில் காலை 10:38 மணிக்கு பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்று அடைந்தது.

இதன் மூலம் வந்தே வாரத்தில் இந்த ரூட்டில் அறிமுகப்படுத்தப்பட்டால் வெறும் 5 மணி நேரம் 38 நிமிடங்களில் கோவையிலிருந்து பெங்களூருக்கு பயணிக்க முடியும். இந்த ரூட்டில் ஏற்கனவே செல்லும் ரயில் குறைந்தபட்ச நேரமாக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. தற்போது சுமார் 1 மணி நேரம் 7 நிமிடம் மிச்சமாகும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில் வேகமாக பயணிக்கிறது.
பஸ்களை பொறுத்தவரை தனியார் பஸ்களில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வரை குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆகிறது. அதனால் தற்போது இருக்கும் தரைவழி போக்குவரத்தில் இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூருவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் விரைவில் இந்த ரயிலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புகள் வெளியாகும் போது தான் இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் உள்ள டிக்கெட் விலை என்ன என்ற விபரங்கள் எல்லாம் வெளியாகும். ரயிலை பொறுத்தவரை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எட்டு பெட்டிக்கொண்ட வந்தே பாரத் ரயில் தான் இந்த ரூட்டில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த சோதனை ஓட்டத்தில் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இருந்தாலும் இந்த ரயில் அறிவிக்கும் போது பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையம் வரை இந்த ரயில் செல்லும் படி அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
இப்போது இந்த ரூட்டில் இயங்கி வரும் மற்ற ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது பல ரயில்களின் முன்பதிவுகள் எல்லாம் ஏற்கனவே விட்டு தீர்ந்து வருகின்றன. இதனால் இந்த ரூட்டில் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தினாலும் அதற்கான டிக்கெட் புக்கிங் என்பது நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கணக்கிட்டு தென்னக ரயில்வே இந்த ரூட்டில் வந்தே பாரத் ரயிலை இயக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்திற்கு மற்றொரு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இருந்தாலும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயிலின் தேவை அதிகமாக இருக்கிறது. முக்கியமாக இரவு நேர வந்தே பாரத் என்பதே இந்தியாவிற்கே மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இதை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் துரிதமாக நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








