சர்வ சாதாரணமா பேட்டி கொடுக்கும் இந்த பெண்மணி யாரென்று தெரியுமா? எவ்வளவு பெரிய விஷயத்தை செய்து இருக்காங்க!!
முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மிதவை படகு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அத்துடன், எரிபொருள் சக்தி மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மிதவை படகை இந்திய தொழிலதிபர் ஒருவர் தான் உருவாக்கினார் என்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் இந்த மிதவை படகை பற்றி முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொழிலதிபர்கள் உருவாக்கும் வாகனங்கள் தனி சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் அவர்களது அனுபவத்தில் நிறைய வாகனங்களை பார்த்திருப்பார்கள். அத்துடன், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றதினால், அங்குள்ளவர்களின் கை வண்ணங்களை பார்த்து வந்திருப்பார்கள். ஆனால், தொழிலதிபர்கள் அனைவரும் இவ்வாறான கலை நயத்துடன் இருப்பதில்லை, சிலர் மட்டுமே உள்ளனர்.

அத்தகையவர்களுள் ஒருவர் தான் கோயம்புத்தூரை சேர்ந்த சுப்ரிதா சந்திரசேகர். எலக்ட்ரானிக்ஸ் துறையில் தொழில் செய்துவரும் இவர் யூரோடெக் பிவோட் சொல்யூஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர்தான், இந்தியாவின் முதல் உள்நாட்டு உற்பத்தி மிதவை படகையும் உருவாக்கி உள்ளார். இந்த படகின் சிறப்பு என்னவென்றால், இதனை நீரில் இயக்குவது மட்டுமின்றி, தரையிலும் ஓட்டலாமாம்.
சுப்ரிதா சந்திரசேகர் உருவாக்கிய மிதவை படகு கோயம்புத்தூரில் உள்ள சூலூர் ஏரியில் வெற்றிக்கரமாக இயக்கிப் பார்க்கப்பட்டு உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை கீழே காணலாம். 'மேட் இன் இந்தியா' முயற்சியாக இந்த மிதவை படகை உருவாக்கி உள்ளதாக கூறும் சந்திரசேகர் இதனை வெவ்வேறான பாதைகளிலும் ஓட்டிச் செல்லலாம் என தெரிவிக்கிறார்.
மேலும், இந்த மிதவை படகை இந்திய கடற்படை, விமான படை, இராணுவ படை மற்றும் தேசிய மீட்பு பணிகளில் பயன்படுத்துவதோடு, வெவ்வேறான தேசிய சேவைகளிலும் பயன்படுத்த முடியும் என்கிறார் சுப்ரிதா. அந்த அளவிற்கு, இவர் உருவாக்கியுள்ள மிதவை படகு சாலையில் அதிகப்பட்சமாக 100kmph வேகத்திலும், நீரில் 80kmph வேகத்திலும் இயங்கக்கூடியதாக உள்ளது.
இந்த மிதவை படகில் சுமார் 1 டன் வரையிலான சுமைகளை ஏற்றிச் செல்ல முடியும் என கூறும் சுப்ரிதா, இருப்பினும் அடுத்ததாக 16 மீட்டர்கள் நீளத்தில், பெரிய அளவில் மிதவை படகை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்பின்னர் உருவாக்கப்பட உள்ள இந்த நீளமான மிதவை படகில் 24 இருக்கைகள் இருக்கும் என சுப்ரிதா சந்திரசேகர் தெரிவிக்கிறார்.

அளவில் சற்று சிறியதாக இருப்பினும், சுப்ரிதா தற்போது உருவாக்கி உள்ள மிதவை படகும் இந்தியாவின் சிறந்த கண்டுப்பிடிப்பு தான். வெவ்வேறான துறைகளில், பாதுகாப்பில் இருந்து அவசரகாலம் வரையில் அனைத்து விதமான தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடியதாக இந்த மிதவை படகு உள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக முடிந்திருப்பது இந்த படகின் கட்டமைப்பு தரத்தை காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓர் பெரிய நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனராக இருந்தால், எந்த அளவிற்கு வேலை பளு இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. ஆனால், அவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் இப்படியொரு மிதவை படகை வடிவமைத்து இருப்பது உண்மையில் சுப்ரிதா சந்திரசேகரை பாராட்ட வைக்கிறது.



Click it and Unblock the Notifications









