Kovai - Chennai Vande Bharat Express: வெறும் 6 மணி நேரம் 10 நிமிடத்தில் கோவை-சென்னை போலாம்!

இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் தற்போது முக்கியமான நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்கி வருகிறது. இதுவரை பல நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவிற்குச் சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்குக் கடந்த நவம்பர் மாதம் வந்தேபாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்திற்கான இரண்டாவது வந்தேபாரத் ரயில் சேவை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து கோவை வரை வந்தேபாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி முதல் இந்த சேவை துவங்கவுள்ளது. பிரதமர் மோடி இந்த ரயில் சேவையைத் துவங்கி வைக்கிறார்.

Kovai - Chennai Vande Bharat Express: வெறும் 6 மணி நேரம் 10 நிமிடத்தில் கோவை-சென்னை போலாம்!

இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகி வருகிறது. இந்த ரயில் கோவையிலிருந்து கிளம்பி 6 மணி நேரம் 10 நிமிடத்தில் சென்னையை வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மொத்தமே 3 நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தப்படும். வேறு எங்கும் நிறுத்தப்படாது. இந்த ரயில் வாரத்தில் புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் எல்லாம் இயக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் காலை 6 மணிக்கு கோவையிலிருந்து சென்னை நோக்கிப் புறப்படும். சரியாக 6.30 மணிக்குத் திருப்பூர் வந்து அங்கிருந்து 6.40க்கு புறப்பட்டு 7.17க்கு ஈரோடு செல்லும் அங்கிருந்து 7.20க்கு கிளம்பி 8.08க்கு சேலம் செல்லும், பின்னர் அங்கிருந்து 8.10க்கு கிளம்பி 12.10க்கு சென்னையைச் சென்றடையும்.

இதே ரயில் மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதியம் 2.20 மணிக்குக் கிளம்பி சேலத்திற்கு 6.03க்கு வருகிறது. அங்கிருந்து 6.05க்கு கிளம்பி ஈரோட்டிற்கு 7.02க்கு வருகிறது. ஈரோட்டில் 7.05க்கு கிளம்பி திருப்பூருக்கு 7.43க்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 7.45க்கு கிளம்பிச் சரியாக 8.30 மணிக்கு கோவையைச் சென்றடைகிறது.

இந்த ரயில் தனது பயணத்தில் மணிக்கு 80.31 கி.மீ வேகத்தில் சராசரியாகப் பயணிக்கும். இந்த ரயில் கோவை- சென்னை இடையே இயங்கும் இரண்டாவது பகல் நேர ரயிலாகும். ஏற்கனவே கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் காலை 6.15க்கு கிளம்பி சென்னைக்கு மதியம் 1.50க்கு வருகிறது. மீண்டும் சென்னையில் மதியம் 2.30 க்கு கிளம்பி கோவைக்கு இரவு 10.15க்கு சென்றடைகிறது.

இதே போல மறுமார்க்கமாக பகல் நேரத்தில் சென்னை- கோவை இடையே சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் காலை 7.10 மணிக்கு சென்னையில் கிளம்பி மதியம் 2.௧௫ மணிக்குக் கோவையை வந்தடைகிறது. மீண்டும் கோவையிலிருந்து 3.05க்கு கிளம்பி இரவு 10.05க்கு சென்னையைச் சென்றடைகிறது. இந்த ரயிலுக்கு மறுமார்க்கரயிலாக தான் வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன? : இந்தியாவில் வந்தேபாரத் போன்ற ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக மாற வேண்டும். குறிப்பாகப் பெரு நகரங்களுக்கு இடையே அதிகமான இந்த ரயில் இயக்கப்பட்டால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வந்தேபாரத் ரயிலில் சிலீப்பர் கிளாஸ் ரயில்களை இந்திய ரயில்வே நிர்வாகம் விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் அதற்கான தேவை தான் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது.

Article Published On: Saturday, March 25, 2023, 18:30 [IST]
English summary
Coimbatore chennai vande bharat express timings and stops
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+