கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் திடீர் மாற்றம்! இதை தான் மக்கள் ரொம்ப நாளா எதிர்பார்த்தாங்க!
கோவை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் நேரத்தை மாற்றி ரயில்வே நிர்வாக உத்தரவிட்டுள்ளது. இதன்படி இனி காலை 5 மணிக்கு ரயிலை பிடிப்பதற்காக பரபரப்பாக பயணிகள் எழுந்து செல்ல வேண்டிய தேவை இல்லை. இந்த அதிகாலை 5 மணி என்ற ரயில் கிளம்பும் நேரம் என்பது மாற்றப்பட்டுள்ளது. புதிய நேரம் என்ன? எதற்காக இந்த மாற்றம்? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
வந்தே பாரத் ரயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கோவை- பெங்களூரு இடையே சமீபத்தில் வந்தே பாரத் ரயில் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் தமிழர்கள் பலர் வேலை பார்த்து வருவதால் அவர்கள் கோவைக்கு வந்து செல்ல இந்த ரயில் மிக உபயோகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பும் என அட்டவணை போடப்பட்டு தினமும் காலை 5 மணிக்கு கிளம்பி வந்தது. ஆனால் இதுவரை அந்த ரயிலில் பயணித்த பயணிகள் பலர் அதிகாலையில் இந்த ரயில் கிளம்புவது என்பது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி தருகிறது.
அதிகாலை 5 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வர வேண்டும் என்றால் மூன்று மணிக்கே சிலர் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது என புகார்கள் எழுந்து வந்தன. இது குறித்த தகவல் ரயில்வே நிர்வாகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ரயில்வே நிர்வாகமும் ஆலோசனை நடத்திய பயணிகளிடம் கருத்து கேட்டனர்.

இதன் முடிவில் ரயில்வே நிர்வாகம் தற்போது கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயிலின் நேரத்தை மாற்றியுள்ளது. அதன்படி இதுவரை காலை 5 மணிக்கு கோவையில் இருந்து கிளம்பி வந்தே பாரத் ரயில் இனிக்க காலை 7:25 மணிக்கு தான் கிளம்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயில் பயணிக்க ஆறரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
கோவையில் இருந்து காலை 7:25 மணிக்கு கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதியம் 1.50 மணிக்கு பெங்களூருவிற்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து மதியம் 2:20 மணிக்கு கிளம்பும் இதே வந்தே பாரத் ரயில் மீண்டும் கோவைக்கு இரவு 8:45 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது.
ரயில்வே நிர்வாகம் இந்த கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலில் நேரத்தை மாற்றியது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அதிகாலையில் எழுந்து இந்த ரயிலை பிடிக்க பலர் சிரமப்பட்டு வந்தார்கள். முக்கியமாக முதியவர்கள் காலை ஐந்து மணிக்கு ரயில் நிலையத்திற்கு வர சிரமமாக இருந்தது. தற்போது இது காலை 7:25 மணிக்கு கிளம்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் என்பது கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி முதல் முதலாக துவங்கப்பட்டது. துவங்கப்பட்டது முதலே அதிகாலை நேரம் ரயில் கிளம்புவது தான் மிகப் பிரச்சினையாக பார்க்கப்பட்டது. பகல் நேரத்தில் பெங்களூருக்கு சரியான போக்குவரத்து வசதி கோயம்புத்தூரில் இருந்து இல்லாத நிலையில் இந்த வந்தே பாரத் ரயில் அதை நிறைவேற்றும் வகையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நேரம் மாறுதல் என்பது செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிகாலை நேரத்தில் ரயில் கிளம்பினால் ரயில் நிலையத்திற்கு வரும் பலர் கேப் உள்ளிட்ட சேவைகளில் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அப்பொழுது ரயில்வே நிலையத்திற்கு பொது போக்குவரத்து என்பது குறைவாக இருக்கிறது. இதனால் இந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் கேப்களுக்கான செலவினங்களும் இரவு நேர பயணம் என்பதால் அதிகமாக இருக்கிறது. இது பயணிகளுக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது. தற்போது இந்த தொந்தரவு எல்லாம் ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில் என்பது மக்களை ஈர்க்கும் ஒரு புதிய ரக அனைத்து வசதிகள் கொண்ட ரயிலாக இருக்கிறது. இதனால் மக்கள் வசதி என்பது இதில் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இது போன்று மக்கள் கருத்துக்களை கேட்டு ரயில்வே நிர்வாகம் ரயிலில் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது நேரங்களை மாற்றி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications








