மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி ’369' என்ற பெயரில் தனது கார் சேகரிப்புகளை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் தற்சமயம் வைரலாக உலாவி வரும் அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

மலையாள பட உலகில் மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மம்முட்டியின் மாஸை பற்றி நான் கூற வேண்டும் என்றில்லை. ஏனெனில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளை எல்லாம் சேர்த்து 300க்கும் அதிகாமான படங்களில் இதுவரை இவர் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

ஆனால் தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பினும் அவரை பற்றி பேச காரணம், மலைக்க வைக்கும் அவரது கார் சேகரிப்பு தான். மம்முட்டியின் கார் கேரேஜ் 369 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவரது கார்கள் அனைத்தும் 369 என்ற எண்ணை கொண்டுள்ளன.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

மற்றப்படி இவரிடம் 369 கார்கள் உள்ளன என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இந்த கார்களில் பிஎம்டபிள்யூ இ46 எம்3, மினி கூப்பர் எஸ், ஜாகுவார் எக்ஸ்ஜே, டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ஆடி ஏ7, மிட்சுபிஷு பஜேரோ ஸ்போர்ட், டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இவை மட்டுமின்றி அவருக்கு மிகவும் பிடித்தமான மாருதி 800 காரும் தற்போதும் உள்ளது. இவற்றில் ஜாகுவார் எக்ஸ்ஜே மம்முட்டியிடம் உள்ள விலையுயர்ந்த கார்களில் முதன்மையானது. இந்த ஜாகுவார் காரை வாங்குபவர்கள் காரை தான் ஓட்டவே அதிகம் விரும்புவார்கள்.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

ஆனால் மம்முட்டியை பின் இருக்கையில் அமர்ந்தப்படி தான் இந்த காரில் பல முறை பார்த்துள்ளோம். எக்ஸ்ஷோரூமில் ரூ.99.56 லட்சத்தை (ஆரம்ப நிலை டீசல் வேரியண்ட்) ஆரம்ப விலையாக விலையாக கொண்டுள்ள இந்த ஜாகுவார் மாடல் அதிகப்பட்சமாக ரூ.1.97 கோடியிலும் (5000சிசி பெட்ரோல், ஆட்டோமேட்டிக் வெர்சன்) விற்பனை செய்யப்படுகிறது.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா விற்பனை செய்துவரும் விலை உயர்ந்த எஸ்யூவிகளுள் ஒன்று. முழுவதும் தயாரிக்கப்பட்டு நேரடியாக ஜப்பானில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்ற இந்த எஸ்யூவி காரில் ஆற்றல்மிக்க 4.5 லிட்டர் டர்போ டீசல் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

இதன் விலை தற்சமயம் ரூ.1.47 கோடி என்ற அளவில் உள்ளது. மம்முட்டியின் சேகரிப்பில் உள்ள ஆடி ஏ7 ஆனது ஆடியின் ஏ6 லக்சரி சலோன் மாடலின் கூபே வெர்சன் ஆகும். இது தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதன் புதிய தலைமுறை ரூ.90.5 லட்சத்தில் விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

டொயோட்டா ஃபார்ச்சூனர், இந்த டொயோட்டா தயாரிப்பை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் பிரபலமான எஸ்யூவி காராக சந்தையில் உலா வந்து கொண்டிருக்கும் இதில் தற்சமயம் பிஎஸ்6 தரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின்களும் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

இதில் ஃபார்ச்சூனர் பெட்ரோல் மாடல்களின் விலைகள் ரூ.28.68 - ரூ.30.27 லட்சத்திலும், டீசல் ட்ரிம்களின் விலைகள் ரூ.30.69 - ரூ.36.90 லட்சம் என்ற அளவிலும் உள்ளன. இதன் பரம போட்டி மாடலான மிட்சுபிஷு பஜேரோ ஸ்போர்ட் காரும் மம்முட்டியிடம் உள்ளது.

அதிகப்பட்சமாக 7 பயணிகள் வரையில் அமரும் வசதி கொண்ட லக்சரி எஸ்யூவி மாடலான இதன் விலையும் ஃபார்ச்சூனரை நேரடியாக தாக்கும் விதமாக ரூ.28 - 30 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. இதன் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

மினி கூப்பர் எஸ், அன்றாட பயன்படுத்தும் வகையிலும் அதேநேரம் ஸ்போர்டியரான தோற்றத்திலும் இருக்கும் ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த மினி தயாரிப்பு காரை மம்முட்டியை காட்டிலும் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் தான் அதிகளவில் பயன்படுத்துகிறார். துல்கரும் ஆட்டோமொபைல் துறை மீது அதிக ஈடுப்பாடு கொண்டவர்.

மலையாள நடிகர் மம்முட்டிக்கு கார்களின் மீது இப்படியொரு பைத்தியமா...! ‘369’ கார்கள் பற்றி தெரியுமா..?

எந்த அளவிற்கு என்றால் சமீபத்தில் இவரும், மற்றொரு மலையாள நடிகர் பிரத்விராஜும் அவர்களது போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை போட்டி போட்டு கொண்டு வேகமாக ஓட்டும் வீடியோ வெளியாகி இருந்தது. அதிவேகத்தின் காரணமாக இது சிறிது சர்ச்சையை ஏற்படுத்தவே, தாங்கள் தெரியாமல் இவ்வாறு செயல்பட்டதாக பிறகு இருவரும் மன்னிப்பு கேட்டுவிட்டனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Collection of ‘369' Cars Owned by Mammootty is New Talk of the Internet
Story first published: Saturday, September 12, 2020, 20:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X