தனியார் கல்லூரி மீது வட்டமிட்ட ஹெலிகாப்டர்... உள்ளே இருந்து இறங்கி வந்தவரை பார்த்து மிரண்டு போன மாணவர்கள்!

ஓணம் பண்டிகை (Onam Festival), கேரளாவில் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக, நீண்ட நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்த 2025ஆம் வருடத்திற்கான ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 5ஆம் வரையில் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தற்சமயம் ஒட்டுமொத்த கேரளாவுமே விழா கோலம் பூண்டுள்ளது.

குறிப்பாக, கேரளாவில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அலங்காரம் செய்யப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் வண்ண உடைகளில் கலக்கலாக ஒவ்வொரு நாளும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் கேரள புடவை அணிந்தப்படி கல்லூரி மாணவிகள் சிலர் அரசு பேருந்தில் ஜாலியாக பாட்டு பாடியப்படி சென்ற வீடியோவை சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

college onam celebration in kerala

ஓணம் பண்டிகையின் முக்கியமான கதாபாத்திரம், மஹாபலி (Mahabali) ஆகும். மஹாபலி கதாபாத்திரத்தின் உடைமைகளை அணிந்தப்படியும் சிலர் வலம் வருவார்கள். இன்னும் சொல்லப்போனால், மஹாபலி வேடம் அணிந்தவர்களை தான் ஆரம்பத்தில் வெகுவாக விழுந்து விழுந்து மற்றவர்கள் கவனிப்பதை பார்க்க முடியும். இதனால், மஹாபலி வேடமிடுபவர்களும் முடிந்தவரையில் தங்களை கெத்தாக காட்டிக் கொள்ளவே முயற்சிப்பர்.

அந்த வகையில், மஹாபலி வேடம் அணிந்த கேரள கல்லூரி மாணவர் ஒருவர் ஹெலிகாப்டரில் கல்லூரிக்கு வந்து இறங்கியது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பான விபரங்கள் 'நிசார்.ரசக்' (Nizar.Razak) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. பாரம்பரிய உடையில் கல்லூரி மைதானத்தில் மற்ற மாணவர்கள் கூடியிருக்க, அவர்கள் மத்தியில் ஹெலிகாப்டரில் மஹாபலி வேடம் அணிந்தவர் வந்து இறங்கினார்.

college onam celebration in kerala

கேரளாவின் மலபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெறுள்ளது. ஹெலிகாப்டர் சரியாக வந்து இறங்குவதற்காக கல்லூரி மைதானத்தில் 'H' வடிவத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு ஹெலிபேட் (Halipad) உருவாக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் மஹாபலி வந்து இறங்க, அவருக்கு பின்னால் தீம்பிழம்பு எஃபெக்ட் உடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஹெலிகாப்டரில் பயணம் செய்வது என்பது எந்தவொரு நாட்டிலும் செலவுமிக்க விஷயம் ஆகும். அதுவும் நம் இந்தியாவில் சொல்லவே வேண்டாம். நம் நாட்டிலும் ஹெலிகாப்டரை வாடகைக்கு விடும் தொழிலை சில தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. சில மணிநேர ஹெலிகாப்டர் வாடகைக்கு கூட இலட்ச ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

college onam celebration in kerala

அப்படியிருக்க, ஹெலிகாப்டர் ஒன்றை ஓணம் பண்டிகைக்காக கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு எடுத்து இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அதுவும், இந்த நிகழ்வில் ஹெலிகாப்டரை ஓட்டிய டிரைவரே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்து மஹாபலிக்கு கதவை திறந்துவிட்டுள்ளார். அதாவது, இவ்வாறான கூடுதல் வேலைக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடும்.

இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்டு இருப்பது, அகுஸ்டா வெஸ்ட்லேண்ட் (Agusta Westland) என்கிற இத்தாலி நிறுவனத்தின் ஏ.டபிள்யூ109 (AW109) ஹெலிகாப்டர் போன்று தெரிகிறது. பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய அளவிற்கு 8 இருக்கைகள் மற்றும் இரட்டை என்ஜின் உடன் எடை குறைவானதாக அகுஸ்டா வெஸ்ட்லேண்ட் ஏ.டபிள்யூ109 ஹெலிகாப்டர் உருவாக்கப்படுகிறது. இத்தாலி நாட்டில் இருந்து அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹெலிகாப்டரான இதனை சில இந்திய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய காலத்தில், ஓணம் பண்டிகையில் மஹாபலி வேடம் அணிந்தவர்கள் விலையுயர்ந்த கார்களில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதை பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த கல்லூரி மாணவர்கள் ஒருபடி மேலே சென்று ஹெலிகாப்டரில் மஹாபலியை கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்காக இவர்கள் பயன்படுத்தி உள்ள ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தார்களா அல்லது குடும்பத்தினர் யாரிடமாவது இருந்து பெற்றார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 22:39 [IST]
English summary
College onam celebration mahabali arrived in helicopter check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X