5 கோடி ரூபாய் காரை ரசிகருக்கு கொடுப்பதற்கு எல்லாம் பெரிய மனசு வேண்டும்! பிரபல பாடகி கொடுத்த ஷாக்!!
சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகவும், மற்றவர்கள் மத்தியில் மேலும் கவனத்தை பெறவும் ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை செய்கின்றனர் அல்லது தெரிவிக்கின்றனர். அந்த விஷயத்திற்காக கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றாலும், அசராமல் பணத்தை செலவு செய்ய முன் வருகின்றனர். அவ்வாறுதான், பிரபல ஆங்கில பாடகி ஒருவர் தனது விலையுயர்ந்த லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரை ரசிகர்களுள் ஒருவருக்கு வழங்கவுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று லம்போர்கினி ஆகும். லம்போர்கினி கார்களுக்கு நம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. எந்த அளவிற்கு என்றால், ஏற்கனவே மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட லம்போர்கினி கார் ஒன்றையும் வாங்க வேண்டும் என்பதை கௌரவ விஷயமாக பார்க்கின்றனர்.

குறிப்பாக, யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களது வீடியோக்களில் அவ்வப்போது காட்டுவதற்காகவே லம்போர்கினி கார் ஒன்றை வாங்கிவிடுக்கின்றனர். அவ்வாறுதான், பிரபல ஆங்கில பாடகி ஷகிரா (Shakira) சில வருடங்களுக்கு முன் பர்பிள் நிறத்தில் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் ஒன்றை வாங்கினார். காதலரிடம் இருந்து பிரிந்து தனிமை வாழ்க்கை வாழ ஆரம்பித்ததை நினைவுக்கூறும் விதமாக இந்த லம்போர்கினி காரை வாங்கினார்.
ஷகிராவை போலவே அவரது உருஸ் காரும் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிக்கரமானதாக உள்ளது. இருப்பினும், தனது இந்த லம்போர்கினி காரை ரசிகர்களுள் யாராவது ஒருவருக்கு வழங்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்து உலகளவில் கவனத்தை பெற்று இருந்தார். கொலம்பியன் பாடகி மற்றும் பாடலாசிரியரான ஷகிரா அவரது 'Whenever, Wherever' மற்றும் 'ஹிப்ஸ் டோண்ட் லை' உள்ளிட்ட பாடல்களினால் பிரபலமானவர். ஷகிராவின் சொல்டேரா (ஒரு பெண்) பாடல் வீடியோவில் அவரது பர்பிள் நிறத்திலான லம்போர்கினி உருஸ் காரை காணலாம்.

தனது லம்போர்கினி காரை வழங்க உள்ளதை ஷகிரா கடந்த நவம்பர் 13ஆம் தேதி வெளியான வீடியோ ஒன்றில் தெரிவித்து இருந்தார். பாடகி ஷகிரா உடன் கொலம்பியாவை சேர்ந்த மற்றொரு பாடகரான செபஸ்டியன் யாத்ரா கலந்துரையாடுவது போன்று அமைந்த அந்த வீடியோவில், ஷகிராவின் லம்போர்கினி உருஸ் காரை பாடகர் செபஸ்டியன் யாத்ரா பார்த்து மயங்கிவிட்டார்.
மிக அழகாக இருக்கும் இந்த லம்போர்கினி காரை ஷகிரா தனது விருப்பத்திற்கு ஏற்ப டிசைன் செய்து பெற்றதாக அந்த வீடியோவில் செபஸ்டியன் யாத்ரா தெரிவித்தார். ஆனால் உடனே குறுக்கிட்ட ஷகிரா, "உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதனை நான் யாருக்காவது கொடுக்க உள்ளேன் - யாராவது ஒரு கார் பிரியர் ரசிகருக்கு இதனை நான் வழங்கவுள்ளேன்" என தெரிவித்தார்.

செபஸ்டியன் யாத்ரா உள்பட அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஷகிரா சும்மா ஜாலிக்காக பேசுகிறார் என நினைத்தனர். ஆனால், ஷகிரா பொய் சொல்லவில்லை. தனது லம்போர்கினி உருஸ் காரை பெறுவது எவ்வாறு, அதற்கான போட்டியில் கலந்துக் கொள்வது எவ்வாறு என்பது குறித்த விபரங்களை ஷகிரா தற்போது வெளியிட்டுள்ளார். இந்த போட்டியில் கலந்துக் கொள்ள நீங்கள் முதலில் elcarrodeshakira.com என்கிற இணையத்தள பக்கத்தை அணுக வேண்டும்.
ஹாஸ்டேக் உடன் இணையத்தளத்தின் பெயரை டேக் செய்து, 'சொல்டேரா' பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். அதில் சிறந்த 5 போட்டியாளர்களை ஷகிராவின் குழு தேர்வு செய்யும். அவர்களுக்கு டிசம்பர் 6ஆம் தேதி டெஸ்பெர்டா அமெரிக்கா டிவி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் ஓட்டளிப்பர். அதிக ஓட்டுகளை பெறுபவருக்கு டிசம்பர் 23ஆம் தேதிக்குள் அமெரிக்காவின் மியாமியில் இந்த லம்போர்கினி உருஸ் கார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லம்போர்கினி உருஸ் கார் ஒன்றின் விலை ரூ.4.57 கோடியாக உள்ளது. ஆன்-ரோடு விலை இன்னும் ரூ.1 கோடி அளவில் அதிகமாக வரும். நம் இந்தியாவில் இருப்பவர்களும் இன்ஸ்டாகிராம் மூலமாக இந்த போட்டியில் பங்கேற்கலாம். டிக்டாக் தடையில்லாத நாடுகளில் இருப்பவர்கள் டிக்டாக்கிலும் இந்த போட்டியில் கலந்துக் கொள்வர் என்பதை மறக்க வேண்டாம். அமெரிக்காவில் இருந்து காரை இந்தியாவிற்கு கொண்டுவர ஷகிரா செலவு செய்ய வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications









