அதிர்ச்சி... 14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்

சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் பிரபல நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர். எனவே மிகவும் விலை உயர்ந்த கார்களை பொழுதுபோக்கிற்காகவும், கவுரவத்திற்காகவும் வாங்கி குவிப்பது என்பது அவர்கள் பலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

சினிமா நடிகர், நடிகைகளை பொறுத்தவரை ரோல்ஸ் ராய்ஸ், புகாட்டி, லம்போர்கினி கார்கள் எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வாழ்நாளில் ஒரு மாருதி சுஸுகி காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடிய சராசரி மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

இப்படிப்பட்ட சூழலில், இந்திய மதிப்பில் 13.8 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய 15 நிமிடங்களுக்கு உள்ளாகவே பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அமெரிக்க நடிகரான ட்ரேஸி மோர்கன்தான் (Tracy Morgan) அவர்.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

அமெரிக்காவை சேர்ந்த ட்ரேஸி மோர்கன் நம்ம ஊரு கிரேஸி மோகனை போல், காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர். ட்ரேஸி மோர்கனுக்கு தற்போது 50 வயதாகிறது. இவருக்கு மிகவும் விலை உயர்ந்த கார்கள் மீது ஆர்வம் அதிகம்.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

எனவே அமெரிக்காவின் நியூ யார்க் சிட்டியில் உள்ள மன்ஹாட்டன் மோட்டார்கார்ஸ் என்ற டீலர்ஷிப்பில், புகாட்டி வேரோன் (Bugatti Veyron) கார் ஒன்றை ட்ரேஸி மோர்கன் சமீபத்தில் வாங்கினார். இது செகண்ட் ஹேண்ட் கார் ஆகும். 2012ம் ஆண்டு மாடல்.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

இந்த சூழலில் காரை வாங்கிய பின்பு ட்ரேஸி மோர்கன் அதனை உற்சாகமாக ஓட்டி வந்து கொண்டிருந்தார். காரை வாங்கிய டீலர்ஷிப்பில் இருந்து சுமார் அரை மைல் தூரம்தான் ட்ரேஸி மோர்கன் வந்திருப்பார். அதற்குள் அவரது கார் விபத்தில் சிக்கி விட்டது.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

என்றாலும் இது சிறிய அளவிலான விபத்துதான். ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) காரும், நடிகர் ட்ரேஸி மோர்கனின் புகாட்டி வேரோன் காரும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டன. ஆனால் இந்த விபத்திற்கு யார் காரணம்? யார் மீது தவறு? என்பது போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

இருந்தபோதும் விபத்திற்கு பின்பாக நடிகர் ட்ரேஸி மோர்கன் ட்விட் ஒன்றை செய்திருந்தார். இதில், 'தவறுக்கு நான் காரணம் அல்ல' என கூறியுள்ளார். அத்துடன் 'நான் நலமாக உள்ளேன்' எனவும் ட்ரேஸி மோர்கன் தெரிவித்துள்ளார்.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

ட்ரேஸி மோர்கன் வாங்கிய 2012 புகாட்டி வேரோன் காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 13.8 கோடி ரூபாய். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 410 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறக்கும் திறன் உடையது. ட்ரேஸி மோர்கன் இந்த காரை வாங்கிய நேரத்தில், அது வெறும் 2,702 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியிருந்தது.

14 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய 15 நிமிடங்களில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்...

கடந்த 4ம் தேதி மதியம் இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் விபத்தில் சிக்கிய ஹோண்டா சிஆர்-வி காரை, ஜோசிலின் மடுலிட் என்ற பெண்தான் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Source: Page Six

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2019, 17:05 [IST]
English summary
Comedian Tracy Morgan Crashes His Rs.14 Crore 2012 Bugatti Veyron. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+