10 வருஷத்துக்கு முன்ன யூடியூப்பில் வீடியோ போட்டுக்கிட்டு இருந்தவரு! வாழ்க்கை மொத்தமா சேஞ்ச்!!
இன்றைய கால இளைஞர்கள் பலரது வாழ்க்கையை மொபைல் போனும், சமூக வலைத்தளங்களும் சீரழிக்கிறது என்றாலும், அதே சமூக வலைத்தளங்கள் சிலரது வாழ்க்கையை பல மடங்கு மேம்படுத்தி உள்ளன. யூடியூபர்கள் நிறைய பேரது வாழ்க்கை சில வருடங்களிலேயே தலைக்கீழாய் புரட்டி போட்டது போன்று மாறியுள்ளதை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு யூடியூப்பில் இருந்து திரைப்பட நடிகராக உருவெடுத்தவர் ஹர்ஷா சேமுடு (Harsha Chemudu). இவர் இளைஞர்கள் பலரது விலையுயர்ந்த கனவு பைக்கை புதியதாக வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
மொபைல் போன் வந்த பிறகு மொத்த உலகமும் கைக்குள் வந்துவிட்டது. ஒருவரிடம் தனது திறமையை காட்ட வேண்டுமெனில், அதற்கு அவரை தேடி சென்று காட்ட வேண்டும் என்றில்லை. மொபைல் போன் முன் காட்டினாலே போது, அது உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்துவிடும். திறமை ரசிக்கும்படியும், பாராட்டும்படியும் இருந்தால் ஹர்ஷா சேமுடுவை போன்று வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்.

விவா என்கிற குறும்படத்தில் தனது டைமிங் காமெடி மூலமாக பிரபலமாகிய ஹர்ஷா சேமுடுவை அதன்பின் திரைப்பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. விவா ஹர்ஷா என சொன்னால் தான் பலருக்கும் இவரை தெரிகிறது. 2013ஆம் ஆண்டில் முதல்முறையாக சினிமாவிற்குள் ஆடியெடுத்து வைத்த விவா ஹர்ஷா இதுவரையில் 70க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த அளவிற்கு சமீப காலமாக டோலிவுட்டில் காமெடி திரைப்படங்களுக்கு அதிகமாக தேர்வு செய்யப்படும் விவா ஹர்ஹாவை ஹீரோவாக வைத்து பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா, 'சுந்தரம் மாஸ்டர்' என்கிற திரைப்படத்தை தயாரித்தார். அது இந்த 2024ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து அதிகளவில் குவிந்துவரும் திரைப்பட வாய்ப்புகளில் நடிப்பதில் பிசியாக இருக்கும் விவா ஹர்ஷா புதியதாக விலையுயர்ந்த மோட்டார்சைக்கிளை வாங்கியுள்ளார்.

தெலுங்கு காமெடி நடிகர் ஹர்ஷா சேமுடு புதியதாக வாங்கியிருப்பது சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) என்கிற சூப்பர் லக்சரி பைக் ஆகும். 1340சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் ஹயபுஸா பைக்கை ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுக்கும் படங்களை ஹர்ஷா சேமுடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹர்ஷாவுக்கு வேகமாக இயங்கக்கூடிய ஸ்போர்ட்ஸ் பைக்குகள் என்றாலே தனி ஆர்வம். இவரிடம் பல ரேசிங் பைக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சுஸுகி ஹயபுஸா பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த பைக் ஸ்டாண்டர்ட் மற்றும் 25வது ஆண்டுநிறைவு கொண்டாட்ட எடிசன் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.16 லட்சத்து 96 ஆயிரமாகவும், 25வது ஆண்டுநிறைவு கொண்டாட்ட எடிசனின் விலை ரூ.17 லட்சத்து 70 ஆயிரமாகவும் உள்ளன.

ஸ்டிரைக்கிங் ஆரஞ்சு என்கிற மோனோ-டோன் பெயிண்ட் ஆப்ஷனிலும், மெட்டாலிக் தண்டர் கிரே- கேண்டி டேரிங் கிரே, மெட்டாலிக் மேட் பிளாக் நம்பர்.2- பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு, பேர்ல் விகோர் நீலம்- பேர்ல் பிரில்லியண்ட் வெள்ளை 3 ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் என மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த சுஸுகி சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
நடிகர் விவா ஹர்ஷா வாங்கியிருப்பது, ஸ்டிரைக்கிங் ஆரஞ்சு என்கிற சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் ஆகும். ஹயபுஸா பைக்கின் 25வது ஆண்டுநிறைவு கொண்டாட எடிசன் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அதன் 1056 ஹயபுஸா பைக்குகளை பழுது ஒன்றின் காரணமாக திரும்ப அழைப்பதாக அறிவித்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்டவை சுஸுகி ஹயபுஸா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் அளவில் வந்துவிடும். 10 வருடங்களுக்கு முன் யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருந்தவர் தற்போது ரூ.20 லட்சத்தில் பைக் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால், பெரிய சாதனை தான்.


Click it and Unblock the Notifications









