Just In
- 15 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தப்பி தவறி கூட போயிராதீங்க... விமான இறக்கைகளின் அடியில் நடப்பதற்கு பயணிகளை விட மாட்டாங்க... ஏன் தெரியுமா?
விமான இறக்கைகளின் அடியில் நடப்பதற்கு ஏன் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் நீங்கள் ஏறுவதற்கு முன்னர், விமான நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து விட்டு ஒரு வழியாக விமானத்திற்கு அருகே சென்றதும், கூம்புகள் போன்ற ஏதேனும் தடுப்புகளை வைத்து, விமானத்துடைய இறக்கைகளின் கீழ் பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

விமானத்துடைய இறக்கைகளின் கீழ் பகுதியில் யாரும் நடக்க கூடாது என்பதை தெரிவிப்பதற்காகவே, அங்கு தடுப்புகளை வைக்கின்றனர். விமானங்களில் ஏற செல்லும்போது, ஏன் இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு நமக்கு அனுமதி தர மறுக்கின்றனர் என நீங்கள் என்றாவது யோசனை செய்திருக்கலாம். உங்களின் இந்த சந்தேகத்திற்கு இந்த செய்தியில் விடையளித்துள்ளோம்.

முழுக்க முழுக்க பாதுகாப்பு கருதியே விமானங்களின் இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் விமானங்களில் இன்ஜின் எங்கே பொருத்தப்பட்டிருக்கும்? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியமானது.

தற்போதைய சூழலில் பல்வேறு வகையான விமானங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் விமானங்களில் பொதுவாக இரண்டு பகுதிகளில் மட்டுமே இன்ஜினை பொருத்துகின்றனர். இதில், இறக்கைகளும் ஒரு பகுதியாக உள்ளன. வர்த்தக ரீதியில் உபயோகிக்கப்படும் பெரும்பாலான விமானங்களில் இறக்கைகளின் கீழ் பகுதியில்தான் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும்.

ஒருவேளை இறக்கைகளின் கீழ் பகுதியில் இன்ஜின் இல்லை என்றால், அனேகமாக வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கலாம். வர்த்தக விமானங்களை பொறுத்தவரை, இந்த இரண்டு பகுதிகளில்தான் பெரும்பாலும் இன்ஜின்கள் பொருத்தப்படும். இறக்கைகளின் கீழ் பகுதி மற்றும் வால் பகுதியில் இன்ஜின்களை பொருத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

தற்போது விமான இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு ஏன் பயணிகளை அனுமதிப்பதில்லை? என்ற கேள்விக்கு வருவோம். இன்ஜின்கள் இருப்பதால், பாதுகாப்பு கருதியே இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஒரு விமானத்தின் மிகவும் அபாயகரமான பகுதிகளில் ஒன்றாக இன்ஜின் அமைந்துள்ள இடம் கருதப்படுகிறது.

அத்துடன் பயணிகளால் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்கு மிகவும் அதிகமாக செலவு ஆகும். மேலும் விமானம் தரையிறங்கிய பின்னரும் இன்ஜின் மிகவும் சூடாக இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் இன்ஜினிற்கு மிகவும் நெருக்கமாக சென்றால் என்ன நடக்கும்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இன்ஜின் அமைந்துள்ளது என்பதை தவிர, இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு இன்னும் சில காரணங்களும் உள்ளன. நீங்கள் விமானத்தில் ஏற செல்லும்போது, ஊழியர்கள் விமானத்தை புறப்பட தயார் செய்து கொண்டிருப்பார்கள். இதில், லக்கேஜ்களை ஏற்றுவது மற்றும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவது ஆகிய முக்கியமான பணிகள் அடங்கும்.

விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் பணிகளில் பல்வேறு அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவும் இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. எரிபொருள் நிரப்புவதற்கும், இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கும் என்ன சம்பந்தம்? என நீங்கள் கேட்கலாம். விமானங்களை பொறுத்தவரை இறக்கைகளில்தான் எரிபொருள் தொட்டி வழங்கப்பட்டிருக்கும்.

ஆம், விமானங்கள் பெரும்பாலும் இறக்கைகளில்தான் எரிபொருளை சேமிக்கின்றன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகும். தொலை தூரம் பயணிக்கும் விமானங்கள் என்றால், எரிபொருள் நிரப்புவதற்கு 40 நிமிடங்கள் வரை ஆகலாம். இதனை கருத்தில் கொண்டும், இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.