ஒரு சின்ன தப்பைதான் பண்ணாங்க.. காரும் போச்சு, இழப்பீடும் கிடைக்கல.. கோர்ட்டே கொடுக்க வேணாம்னு சொல்லிருச்சு!

சீட் பெல்ட் (Seat Belt) போடவில்லை என்பதற்காக விபத்தில் சிக்கிய காருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு நிராகரிக்கப்பட்டு இருக்கின்றது. வாகன உரிமையாளர் செய்த சிறிய தவறின் காரணத்தினாலேயே இழப்பீடு கிடைக்காமல் போயிருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிகக் கடுமையான விபத்துகளின்போது பயணிகளை ஆபத்தில்லாமல் காக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாக சீட் பெல்ட்டும், ஏர் பேக் (Air Pack)-கும் உள்ளன. இதில், ஏர் பேக் தானாக விபத்தின்போது விரிந்து பயணிகளைக் காக்கும். அதேவேளையில், சீட் பெல்ட்டை நாம்தான் அணிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Honda city airbag

இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டாவின் புகழ்பெற்ற கார் மாடல் ஒன்று விபத்தில் சிக்கி மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்தில் கார் மட்டுமல்ல காரை ஓட்டி வந்தவருக்கும் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. கை எலும்பு முறிவு உள்ளிட்ட மிக பெரிய காயங்களுக்கு அவர் ஆளாகி இருக்கின்றார்.

இத்தகைய மிகக் கடுமையான காயங்களுக்கு காரணம் அந்த காரில் ஏர்பேக் விரியாததே என கூறப்படுகின்றது. இந்த காரணத்திற்காகதான் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அந்த நபர் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் முறையிட்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே விபத்தின்போது உயிர் காக்கும் ஏர் பேக் அம்சம் ஓபனாகமல் இருந்ததைக் காரணம் காட்டி ரூ. 1 லட்சம் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது.

Seat belt

இந்த உத்தரவையே ரத்து செய்து தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதமாக தீர்ப்பை வழங்கி இருக்கின்றது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம். சீட் பெல்ட் அணியாத காரணத்தினாலேயே ஏர்பேக் திறக்கவில்லை என்கிற வாதத்தை முன் வைத்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் ஹோண்டா தரப்பு மேல் முறையீடு செய்தது.

இந்த நிலையிலேயே ஹோண்டாவிற்கு ஆதரவாக சுபாஷ் சந்திரா மற்றும் சாதனா சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியது. அதேவேளையில், இவர் இன்சூரன்ஸில் இருந்து ரூ. 1.60 லட்சம் கிளைம் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், சீட் பெல்ட் அணிந்திருந்து ஏர் பேக் ஓபன் ஆகாமல் இருந்திருந்தால் அவருக்கு ஹோண்டா சார்பிலும் உரிய நிவாரணம் கிடைத்திருந்திருக்கும்.

Airbag

ஆனால், அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். அதேவேளையில், இந்தியாவில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. உயிர்களை பாதுகாப்பதில் இந்த அம்சம் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. எனவே தவறாமல் அதை பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்த தவறும்பட்சத்தில் கைகளுக்கு மட்டுமல்ல தலைக்கு மட்டுமல்ல கழுத்து பகுதிக்கும் மிகவும் ஆபத்தான சூழல் உருவாகும்.

அதுமட்டுமில்லைங்க, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது கண்டறியப்பட்டால் அபராதமும் வந்து சேரும். இதுபோன்ற அனைத்து சிக்கல்களில் இருந்தும் தப்பிக்க வேண்டும் எனில் கட்டாயம் சீட் பெல்ட் பயன்படுத்த வேண்டும். சீட் பெல்ட்டின் அவசியத்தை உணர்ந்தே அரசு சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்கியிருக்கின்றது.

அதுதவிர, சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும்போது கார்கள் அதுபற்றிய எச்சரிக்கையை வழங்க வேண்டும் என்கிற விதியையும் கட்டாயமாக்கியது. பல உயிர்கள் பலியானதற்கு காரணமாக சீட் பெல்ட் அணியாமல் இருந்த காரணத்தினாலேயே அரசு சீட் பெல்ட்டை கட்டாயமாக்கியது. இருப்பினும் இப்போதும் பலர் சீட் அணியாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீட் பெல்ட் அணியாமல் காரில் வரும் வருபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலேயே தற்போது தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் தக்க பாடம் புகட்டி இருக்கின்றது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது எப்படி கட்டாயமோ அதைப் போலவே சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2024, 18:59 [IST]
English summary
Compensation cancelled by ncdrc here is why
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X