இடியே விழுந்தாலும் ரோட்ல இந்த போர்டை பார்த்தா காரை நிறுத்தாதீங்க! இந்த போர்டுக்கு இதான் அர்த்தம்!

வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது நிச்சயம் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். சாலையில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை வழங்கவும், தகவல் தெரிவிக்கவும் ஆங்காங்கே டிராஃபிக் சிக்னல் போர்டுகளை அரசு வைத்துள்ளது.

சாலையில் நோ பார்க்கிங் பலகைகள், வேகக் கட்டுப்பாடு,சாலை குறுகலாகும் எச்சரிக்கை பலகை உள்ளிட்ட பல்வேறு சிக்னல்கள் கொண்ட பலகைகள் இருக்கும். இப்படியாகச் சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் டிவிட்டரில் ஒரு போஸ்ட் ஒன்றைப் போட்டிருந்தது. இதில் சாலையில் உள்ள குறியீடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போஸ்ட் போடப்பட்டிருந்தது.

Compulsory ahead Traffic Sign

இதில் நீல நிற பலகையில் மேல் நோக்கு அம்புக் குறி போடப்பட்டிருந்தது. அந்த பலகைக்குக் கீழே ஆங்கிலத்தில் "Compulsory Ahead" என எழுதப்பட்டிருந்தது. இந்த பதிவில் இதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து நேராகச் செல்ல வேண்டும். எந்த பக்கம் திருப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பாதுகாப்பு குறைவு ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிக்னல் குறித்து மக்கள் பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் இந்த விழிப்புணர்வு பதிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த சிக்னல்களை பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையில் தான் காண முடியும். இது வாகனங்களில் வேகமாகச் செல்லும் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் ஏதாவது ஒரு வாகனம் வழியை மறித்துக்கொண்டு ரோட்டில் நின்றாலோ அல்லது திரும்ப முயற்சித்தாலோ அது பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும்.

Compulsory ahead Traffic Sign

இதனால் விபத்துக்கள் கூட நடக்க வாய்ப்பு இருக்கிறது. என்பதால் இந்த சிக்னல் இருக்கும் பகுதியில் வாகனங்கள் தொடர்ந்து முன்னோக்கி மட்டுமே செல்ல வேண்டும். வாகனத்தை நிறுத்தவோ அல்லது திரும்பவோ கூடாது. இதை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த சிக்னலை சாலையில் செல்லும் போது நம்மில் பலர் பார்த்திருப்போம் ஆனால் அதற்கான அர்த்தம் பலருக்குத் தெரியாது. இந்த தகவல் உங்களுக்குப் புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் இதை நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பகிருங்கள்.

Compulsory ahead Traffic Sign

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை விதிகள் பல சாலையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது மட்டுமல்ல விதிகளை மீறுபவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 22, 2023, 16:54 [IST]
English summary
Compulsory ahead sign in national highway know the full meaning
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X