கான்கார்டு விமானத்திற்கு புது வாழ்வு... மீண்டும் பறக்கப் போகிறது!

By Saravana

உலகின் அதிவேக பயணிகள் விமானம் என்ற பெருமைக்குரிய, கான்கார்டு விமானத்தை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளில் க்ளப் கான்கார்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.

2003ம் ஆண்டு அதிக பராமரிப்பு மற்றும் இயக்குதல் செலவீனத்தை கருத்தில்கொண்டு கான்கார்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கான்கார்டு ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் விமானிகள் அடங்கிய க்ளப் கான்கார்டு என்ற அமைப்பு கான்கார்டு விமானத்தை மீண்டும் பறக்க விடுவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர்.

 க்ளப் கான்கார்டு பற்றி...

க்ளப் கான்கார்டு பற்றி...

கான்கார்டு விமானத்தில் அடிக்கடி பயணித்தவர்கள், முன்னாள் விமான பைலட்டுகள் அடங்கிய அமைப்புதான் தற்போது கான்கார்டு விமானத்துக்கு மறு வாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கான்கார்டு விமானத்தின் பொன்விழா ஆண்டான 2017ல் ஒரு விமானத்தை புனரமைத்து காட்சிக்கு கொண்டு வரவும், மற்றொரு விமானத்தை பறக்க விடவும் முடிவு செய்துள்ளனர்.

கான்கார்டு விமானம்

கான்கார்டு விமானம்

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சாட் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் இந்த கான்கார்டு விமானத்தை தயாரித்தன. மொத்தம் 20 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. அன்றைய காலக்கட்டத்திலேயே ரூ.2,500 கோடி மதிப்புடைய இந்த விமானத்தை வடிவமைத்து தயாரிப்பதற்கு, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகள் நிதி பங்களிப்பு செய்தன. இதையடுத்து, 1976ம் ஆண்டு பயணிகள் சேவைக்கு வந்தன.

பயணிகள் சேவை

பயணிகள் சேவை

கடந்த 1976ம் ஆண்டு துவங்கிய கான்கார்டு விமான சேவை 2003ம் ஆண்டு வரை தொடர்ந்தது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் விமான போக்குவரத்தில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம் காரணமாக இந்த கான்கார்டு விமான சேவை நிறுத்தப்பட்டன.

இந்தியா தயக்கம்

இந்தியா தயக்கம்

ஒலியைவிட இருமடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய கான்கார்டு விமானங்கள் குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையில் மட்டுமே இயக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த விமானங்களை இயக்கின. பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டின.

பயண நேரம் குறைவு

பயண நேரம் குறைவு

லண்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு பிற விமானங்களில் செல்வதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஆனால், இந்த கான்கார்டு விமானம் வெறும் 3 மணி நேரத்தில் சென்றுவிடும். ஒரு விமானத்தில் 100 முதல் 120 பேர் வரை பயணிக்க முடியும்.

கான்கார்டுக்கு புது வாழ்வு

கான்கார்டுக்கு புது வாழ்வு

பொருளாதார சுணக்க நிலையாலும், 2000ம் ஆண்டில் ஏற்பட்ட கான்கார்டு விமான விபத்து காரணமாகவும் இந்த விமானத்தின் சிறகுகள் ஒடிக்கப்பட்டன. இந்த நிலையில், க்ளப் கான்கார்டு அமைப்பு 2 கான்கார்டு விமானங்களை வாங்கி சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

போதிய நிதி

போதிய நிதி

இரண்டு விமானங்களை வாங்கி சீரமைப்பதற்கு தேவையான நிதி கையிருப்பு உள்ளதாகவும், வரும் 2017ம் ஆண்டில் விமானங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் க்ளப் கான்கார்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

 மீண்டும் பறக்கும்?

மீண்டும் பறக்கும்?

ஒரு விமானத்தை லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நிறுத்தி, ஓட்டலாக மாற்ற உத்தேசித்துள்ளனர். மற்றொரு விமானத்தை சுற்றுலா பயணிகளுக்கான விமானமாக குறிப்பிட்ட நாட்களில் இயக்க திட்டமிட்டுள்ளனர்.

 கனவு நனவாகும் நாள்...

கனவு நனவாகும் நாள்...

2019ம் ஆண்டு கான்கார்டு விமானத்தை சுற்றுலாவுக்காக இயக்குவதற்கு க்ளப் கான்கார்டு அமைப்பு திட்டமிட்டிருக்கிறது. மேலும், 2017ம் ஆண்டில் இந்த விமானத்தில் பறப்பதற்கு முன்பதிவு துவங்கவும் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், கான்கார்டு விமானத்திற்கு புது வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Concorde Supersonic Plane may fly again.
Story first published: Monday, September 21, 2015, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X