ஃபைனல் டெஸ்டினேஷன் படத்த கண் முன்னாடி காட்டிட்டாங்க.. மும்பையில் கார் ஓட்டுநருக்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
ஹாலிவுட்-இன் பிரபலமான திரைப்படங்களில் 'ஃபைனல் டெஸ்டினேஷன்'-ம் ஒன்று. ஒரு மனிதன் எப்படி எல்லாம் மரணிக்கக் கூடாதோ, அப்படி எல்லாம் இறக்கும் காட்சிகளைக் கொண்டதே இந்த படம் ஆகும். பல பாகங்களில் இந்த படம் வந்திருக்கின்றது. அதில் குறிப்பிட்ட ஓர் பாகத்தில் வரும் காட்சியையே நம் கண் முன் வரும் வகையில் ஓர் சம்பவம் மும்பையில் அரங்கேறியிருக்கின்றது. மரம் காரின் விண்ட்ஷீல்டை உடைத்துக் கொண்டு வாகன ஓட்டியை தாக்குவது போன்ற காட்சி ஃபைனல் டெஸ்டினேஷன் படத்தில் இடம் பெற்றிருக்கும்.
இந்த காட்சியே ஒருவரின் ரியல் லைஃபில் மும்பையில் அரங்கேறி இருக்கின்றது. மேம்பாலத்தில் இருந்து உடைந்து வந்த கான்கிரீட் துண்டு ஒன்று நேராக விண்ட்ஷீல்டை உடைத்துக் கொண்டு காருக்குள் நுழைந்திருக்கின்றது. நல்ல வேளையாக இந்த நிகழ்வில் காருக்குள் இருந்த வாகன ஓட்டிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நூலிழையில் காரை ஓட்டி வந்த டிரைவர் உயிர் தப்பியுள்ளார். அவர் மட்டுமல்ல அவருடன் காரில் வந்த மூதாட்டியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றார். ஆனாலும், இந்த நிகழ்வு மும்பை வாசிகள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
பயணிகள் உயரி தப்பியதில் டிரைவரின் பங்களிப்பைப் போலவே அந்த காரின் பங்களிப்பும் சற்றே பெரியதாக உள்ளது. விபத்தின் காட்சிகளை வைத்து பார்க்கையில் இந்த கார் மடால் ஹூண்டாயின் கிராண்டு ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios) என்பது தெரிய வந்திருக்கின்றது.
இது ஓர் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எரா (Era), மேக்னா (Magna), கார்பரேட் (Corporate), ஸ்போர்ட்ஸ் (Sportz) மற்றும் ஆஸ்தா (Asta) ஆகியவையே அவை ஆகும்.
இந்த காரை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களிலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. டூயல் சிலிண்டர்களைத் தாங்கிய சிஎன்ஜி காராகவே இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பிரீமியம் அம்சங்களைப் போலவே பாதுகாப்பு அம்சங்களும் மிக அதிகமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

வசதியை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அது, கிராண்ட் ஐ10 நியாஸ் எச்ஒய்-சிஎன்ஜி ட்யூவோ (Grand i10 Nios Hy-CNG Duo) என்கிற பெயரில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ரூ. 5.98 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது ஆரம்ப நிலை தேர்வினஅ எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 8.62 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே அதிக பிரீமியம் அம்சங்களையும் பாதுகாப்பு வசதிகளையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.

மிக முக்கியமா 6 ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், பின் பக்கத்திற்கான பார்க்கிங் கேமிரா, பகல் மற்றும் இரவு நேரங்களுக்கான ஐஆர்விஎம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்களை ஹூண்டாய் நிறுவனம் இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் வழங்கி இருக்கின்றது. எனவே இந்த கார் தற்போது நிகழ்ந்திருக்கும் மேம்பாலம் மாதிரியான பெரும் விபத்தாக இருந்தாலும் பயணிகளைப் பாதுகாக்கும். இதற்கான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாலம் இடிந்து விழுவது, மழை வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்வது போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது மும்பையில் அரங்கேறிய மேம்பாலத்தின் சிறிய பகுதி இடிந்து விழுந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications









