ராகுல் காந்தியின் மனதை கொள்ளையடித்த கார்கள்!!

அடுத்த பிரதமராக காங்கிரஸ் கட்சியினரால் வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி தன்னை எளிமையான மனிதராகவே மக்களிடம் பரைசாற்றி வருகிறார். மேலும், அவர் இதுவரை மிக மிக விலையுயர்ந்த கார்களில் பயணிப்பதையும் தவிர்த்து வருகிறார்.

இருப்பினும், ராகுல் காந்திக்கு எஸ்யூவி கார்கள்தான் பிடித்தமானவையாக தெரிவிக்கப்படுகிறது. குண்டு துளைக்காத பாதுகாப்பு வசதிகளுடன் அவர் அதிகம் பயன்படுத்தும் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

மிட்சுபிஷி பஜேரோ

மிட்சுபிஷி பஜேரோ

ராகுல் காந்தி அதிகம் பயன்படுத்தும் கார்களில் மிட்சுபிஷி பஜேரோவும் ஒன்று. இப்போது இதற்கு மாற்றாக பஜேரோ ஸ்போர்ட் என்ற புதிய மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

மிட்சுபிஷி பஜேரோ

மிட்சுபிஷி பஜேரோ

ராகுல் பயன்படுத்துவது பழைய பஜேரோ. 161 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் இந்த காரில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 92 லிட்டர் டீசல் டேங்க் கொண்டது. 7 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவாவும் ராகுல் காந்திக்கு மிகவும் பிடித்தமான கார்தான். இதிலும் பாதுகாப்பு வசதிகள் மிகுதியாக செய்யப்பட்டு வாங்கப்பட்ட கார்தான்.

 இன்னோவா

இன்னோவா

சிறந்த இடவசதியுடன், அதிர்வுகள் குறைந்த பயணத்தை தருவதால் பல அரசியல்வாதிகளின் ஃபேவரிட் மாடலாக மாறியுள்ளது இன்னோவா. இதில், ராகுல் காந்தியும் விலக்கல்ல.

சுதேசி மாடல்

சுதேசி மாடல்

அயல்நாட்டு பிராண்டை தவிர்த்து உள்நாட்டு தயாரிப்பான டாடா சஃபாரியையும் அதிகம் பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி. டெல்லி மட்டுமின்றி பிற பிற வடமாநிலங்களுக்கு செல்லும்போது குண்டு துளைக்காத வசதிகொண்ட டாடா சஃபாரி ரெடியாக இருக்கிறது.

 டாடா சஃபாரி

டாடா சஃபாரி

அரசியல்வாதிகளின் கார் என்று முத்திரையை பெற்ற சஃபாரி இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச் சிறந்த எஸ்யூவி காராக விளங்குகிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், போதுமான இடவசதியுடன், பவர்ஃபுல் எஞ்சின் என அரசியல்வாதிகளை டாடா சஃபாரி கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.

சிறப்பு தொகுப்பு

சிறப்பு தொகுப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாடே கொந்தளித்து கிடக்கும் நிலையில், எரிபொருள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி பெட்ரோல் நிலையங்களின் வேலை நேரத்தை குறைக்க பரிசீலிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்து பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார் மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி. இந்தநிலையில், அரசுத்துறையில்தான் தேவையில்லாமல் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நம் நாட்டின் முக்கிய தலைவர்கள் பயன்படுத்தும் கார்கள் பற்றிய விபரங்ககளை நாளை பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2013, 17:15 [IST]
English summary
The so called 'future prime minister of India', Mr. Rahul Gandhi has got three cars in his garage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+