“என்கிட்ட இப்படிப்பட்ட கேடிஎம் பைக் கூட இருக்கு” - ராகுல் காந்தியின் ஓபன் டாக்!! நம்பவே முடியல

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னிடம் விலையுயர்ந்த பைக் ஒன்று உள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் ஓபனாக கூறியுள்ளார். ராகுல் காந்தியிடம் அப்படி எந்த பிராண்டின் மோட்டார்சைக்கிள் உள்ளது? அந்த பைக்கின் நிலைமை தற்சமயம் எப்படி உள்ளது? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே பிரச்சாரம் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் இவர் மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்ராவை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கன்னியாக்குமரியில் இருந்து காஷ்மீர் வரையில் பாரத் ஜோடா யாத்ரா என்கிற பெயரில் நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு இருந்தார்.

rahul gandhi owns ktm bike

பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்திற்கு பின்பும் கூட மக்களை சந்திப்பதை ராகுல் காந்தி நிறுத்தவில்லை. டெல்லியில் மெக்கானிக் கடை ஒன்றிற்கு திடீரென விசிடி அடித்தவர் அங்கிருந்த மெக்கானிக்குகளை சந்தித்து அவர்களது நிறை, குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்களது பணிகளையும் செய்து பார்த்தார்.

இந்த நிலையில், தன்னிடம் கேடிஎம் 390 மோட்டார்சைக்கிள் ஒன்று இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் அது பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், தான் அதனை ஓட்டியது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி போன்ற தேசிய அளவிலான தலைவருக்கு மிகவும் கட்டுப்பாடான பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.

rahul gandhi owns ktm bike

மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்பதால், பெரும்பாலும் அரசியல்வாதிகள் பைக் ஓட்ட அவர்களது பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. சம்மந்தப்பட்ட அரசியல்வாதி கேட்டு கொண்டால் மட்டுமே பைக் ஓட்ட அனுமதிப்பர். இதுவும், ராகுல் காந்தி தனது கேடிஎம் 390 பைக்கை பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் நுழைந்த ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இன்று நாட்டின் மிக பெரிய மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ஒன்றாக, வாடிக்கையாளர்கள் பலரை கொண்ட நிறுவனமாக உள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினரே கேடிஎம் பைக்குகளை அதிகம் வாங்குகின்றனர். 2012இல் 200 ட்யூக் மூலம் தனது பயணத்தை இந்தியாவில் துவங்கிய கேடிஎம் தற்போது பல்வேறு சிசி-களில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது.

rahul gandhi owns ktm bike

390சிசி-இல் 390 ட்யூக், ஆர்சி390 மற்றும் 390 அட்வென்ச்சர் என 3 விதமான மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 390 ட்யூக் ஆனது பேனல்கள் அவ்வளவாக இல்லாத நாக்டு பைக், ஆர்சி390 அதற்கு எதிர்மாறாக அதிக பேனல்களை கொண்ட சூப்பர்ஸ்போர்ட் பைக் மற்றும் 390 அட்வென்ச்சர் ஆனது ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்ற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்த 3 கேடிஎம் 390சிசி பைக் மாடல்களிலும் ஒரே மாதிரியான 373.27சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு DOHC என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 9,000 ஆர்பிஎம்-இல் 43.5 பிஎஸ் மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவற்றில் எந்த மாடலை ராகுல் காந்தி வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுள் பலர் ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதை பல்வேறு சம்பவங்களில் பார்த்துள்ளோம். ஆனால் அவர்களுள் பெரும்பாலானோர் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களையே கொண்டிருப்பர். ஆனால், ராகுல் காந்தி சற்று வித்தியாசமாக கேடிஎம் 390 போன்ற பிரீமியம் தரத்திலான பைக்கை கொண்டுள்ளார் என்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Article Published On: Monday, July 10, 2023, 21:58 [IST]
English summary
Congress leader rahul gandhi owns ktm 390 bike
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X