டிரைவர்லாம் ஓரமா நில்லு! அரசு பஸ்ஸை ஓட்டியது இவ்ளோ பெரிய ஆளா! உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் அடையாளமே தெரியுது
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், டிரைவர்களுக்கான சீருடை அணியாத ஒருவர் பஸ் (Bus) ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இவர் யார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர் கர்நாடக மாநிலத்தில் எம்எல்ஏ-வாக (MLA) உள்ள எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் (S. R. Srinivas) ஆவார். காங்கிரஸ் (Congress) கட்சியை சேர்ந்த இவர், குப்பி (Gubbi) தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றி வருகிறார். இந்த குப்பி சட்டமன்ற தொகுதி தும்கூரு (Tumakuru) மாவட்டத்தில் உள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு (Bangalore) அருகேதான் தும்கூரு அமைந்துள்ளது. இந்த தும்கூரு நகரில், கேஎஸ்ஆர்டிசி என சுருக்கமாக அழைக்கப்படும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (KSRTC - Karnataka State Road Transport Corporation) புதிய பஸ்கள் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
அங்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, அஸ்வமேதா (Ashwamedha) பஸ்கள் ஆகும். இந்த அறிமுக நிகழ்ச்சியின்போதுதான், எம்எல்ஏ எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் பஸ்ஸை ஓட்டி அனைவரையும் பிரம்மிக்க வைத்தார். அவர் ஓட்டியபோது கர்நாடக அரசின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பஸ்சுக்குள் இருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏ ஒருவர் திடீரென அரசு பஸ்ஸை ஓட்டியதால், அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இதன் காரணமாகவே இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்தியாவில் அரசியல்வாதிகள் அரசு பஸ்களை இயக்குவது இது முதல் முறை அல்ல.
தமிழ்நாட்டிலும் (Tamil Nadu) கூட இத்தகைய நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அமைச்சர் எ.வ.வேலு (EV Velu) அரசு பஸ்ஸை ஓட்டியுள்ளார். அதேபோல் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் கூட (S. S. Sivasankar) அரசு பஸ்ஸை ஓட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஸ் போன்ற கனரக வாகனங்களை ஓட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. டூவீலர், கார்களை ஓட்டுவதை காட்டிலும் பஸ் போன்ற கனரக வாகனங்களை ஓட்டுவது கடினமானது. அப்படி இருக்கும்போது, உயர் பொறுப்புகளில் உள்ள அரசியல்வாதிகள் அரசு பஸ்களை இயக்குவது உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
எனவேதான் இது போன்ற நிகழ்வுகளை மக்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா (Karnataka) கடந்து மத்திய பிரதேசம் (Madhya Pradesh) போன்ற மாநிலங்களிலும் அரசியல்வாதிகள் பஸ்களை ஓட்டியுள்ளனர். ஆனால் அரசியல்வாதிகள் பஸ்களை இயக்கியபோது சில சமயங்களில் விபத்துக்களும் (Accidents) நடைபெற்றுள்ளன. எனவே பஸ்களை இயக்கும்போது கவனமாக இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








