இப்படியா இருப்பாங்க!.. மாருதிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!.. கட்டிய காசை அப்படியே கொடுக்க சொல்லிட்டாங்க!
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றே மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஆகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்திற்கும் இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மலிவு விலை, பராமரிப்பு செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காகவே மாருதி சுஸுகி கார்கள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பிற்கு பெயர்போனதல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. பாதுகாப்பிற்காக பலதரப்பட்ட அம்சங்களை மாருதி அதன் தயாரிப்பு கார்களில் வழங்கினாலும், அவை உரிய நேரங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்க தவறிவிடுகின்றன. அந்தவகையிலேயே, விபத்தின்போது உரிய பாதுகாப்பை வழங்க தவறியதாகக் கூறி நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.

கேரளா மாநிலம் இந்தியனூரைச் சேர்ந்தவர் மொஹமத் முஸ்லியர். இவர் சமீபத்தில் மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார். அவர் அளித்த மனுவில் தான் பயன்படுத்தி வந்த மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார், விபத்தின்போது போதிய பாதுகாப்பை வழங்கவில்லை. இதன் விளைவாக தான் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியதாக கூறி இருக்கின்றார்.
இதுபோன்று எப்படி ஒரு புகாரை வழங்க முடியும்?.. விபத்து என்றால் காயங்கள் ஏற்படுவதும், ஆபத்தான சூழல் ஏற்படுவதும் வழக்கம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். மொஹமத்தின் இந்த புகாருக்கு மிக முக்கியமான காரணமே ஏர் பேக்தான். ஏர் பேக்குகள் பொதுவாக விபத்து நேர்ந்தால் உடனடியாக விரிந்து, பயணிகளை விபத்தினால் ஏற்படும் கடுமையான காயங்களில் இருந்து காப்பதே அதன் பணியாகும்.

இத்தகைய உண்ணத பணியையே அந்த அம்சம் செய்ய தவறிவிட்டதாகக் கூறப்படுகின்றது. அதாவது, விபத்தின்போது இந்த ஏர் பேக் விரியவில்லை. இதுவே மொஹமத்தின் கடுமையான காயங்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இதை வைத்தே மாருதி சுஸுகி கார் மீதும் அவர் தன்னுடைய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.
மொஹமத்தின் கார் கடந்த 2021ம் ஆண்டு 30ஆம் தேதி அன்றே விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த நிலையிலேயே மிக மோசமான காயங்களில் இருந்து மீண்ட அவர், தன்னுடைய இந்த நிலைக்கு காரணமான நிறுவனத்தின் மீது மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகாரைத் தெரிவித்து இருக்கின்றார். தற்போது இந்த விவகாரத்தில் அவர் வெற்றியையும் கண்டிருக்கின்றார்.
மொஹமத் தரப்பு வாதத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் கார் உற்பத்தியாளருக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்து இருக்கின்றது. மொஹமத் காரை வாங்க செலுத்திய முழு தொகையையும் திருப்பி தர அவர்களுக்கு அதிரடி உத்தரவை பிறத்து இருக்கின்றது.
ஆகையால், மொஹமத் செலவிட்ட ரூ. 4.35 லட்சமும் திருப்பி அவருடைய கைகளுக்கே வந்திருக்கின்றது. இத்துடன், வழக்கிற்கு செலவான ரூ. 20 ஆயிரத்தை அவருக்கு கொடுக்கவும் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு இருக்கின்றது. இந்த உத்தரவை ஒரு மாதத்திற்குள் ஏற்று உடனடியாக தொகையை வழங்க வேண்டும் என்றும் ஆணையம் கூறியிருக்கின்றது.
இது மீறப்படும்பட்சத்தில் ஒன்பது சதவீதம் வட்டியுடன் அந்த தொகை செலுத்த நேரிடும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. ஆணையத்தின் இந்த உத்தரவு ஒட்டுமொத்த கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய பாடத்தை புகட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுபோன்று தயாரிப்பிலேயே ஏற்படும் கோளாறுகளுக்கு தீர்வு காணவே வாகன உற்பத்தியாளர்கள் சில நேரங்களில் ரீ-கால் அழைப்பை விடுவார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஃபால்டியான பாகங்கள் கொண்ட வாகனங்களை விற்பனைச் செய்ததற்கு வாகன உற்பத்தியாளர்கள் நடவடிக்கைகளுக்கு ஆளாகுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் நாட்டில் பல அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், சமீபத்தில் ஃபோர்டு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








