ரிப்பேரான காரை விற்ற பிஎம்டபிள்யூ! ஒரு பைசா பாக்கியில்லாமல் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க கோர்ட் உத்தரவு

வாடிக்கையாளருக்கு ரிப்பேரானா காரை விற்பனை செய்ததால் பிஎம்டபிள்யூ நிறுவனம் வாடிக்கையாளருக்கு காரின் முழு பணத்தையும் வட்டியுடன் திரும்பச் செலுத்தும் படி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

பிரீத்தம் பால் என்பவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து புதிதாக பிஎம்டபிள்யூ1 சிரீஸ் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இவர் வாங்கி 5 மாதங்களில் அந்த கார் அவருக்குச் சிக்கலைக் கொடுக்க துவங்கியுள்ளது. காரில் செல்லும் போது பிரேக் போட்டால் காரின் முன் வீலீல்லிருந்து சத்தம் வந்தது. இதையடுத்து அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு சென்றார். அங்குக் காரை சர்வீஸ்க்கு விட்டார். சுமார் 10 நாட்கள் சர்வீஸ் சென்டரில் நின்ற கார் ரெகுலரான செக்கப் முடிக்கப்பட்டு மீண்டும் பிரீத்தம் பாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரிப்பேரான காரை விற்ற பிஎம்டபிள்யூ! ஒரு பைசா பாக்கியில்லாமல் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க கோர்ட் உத்தரவு

ஆனால் அதன் பிறகும் காரின் முன்பக்க வீலீலிருந்து சத்தம் வருவது நிற்கவில்லை. தொடர்ந்து சத்தம் வந்த நிலையில் இவர் மீண்டும் அதே சர்வீஸ் சென்டரில் தன் காரை கொண்டு சென்று குறிப்பிட்ட பிரச்சனை குறித்து அந்நிறுவனத்திற்கு இ-மெயில் ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்த முறைதான் சர்வீஸ் சென்டர் ஊழியர்களுக்கு காரின் முன் வீலீல் பிரேக் பிடிக்கும் போது சத்தம் வருவதே தெரிந்தது.

அதன் பின்னர் அவர்கள் 6-7 நாட்கள் அந்த காரை சர்வீஸ் செய்தனர். அதில் காரின் முன்பக்க வீலீல் உள்ள பிரேக் பேட் மற்றும் டிஸ்கை மாற்றி இனி இந்த பிரச்சனை வராது எனச் சொல்லி மீண்டு காரை பிரீத்தமிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த காரை வாங்கி பிரீத்தம் ஓட்ட துவங்கும் போதே அவருக்கு மீண்டும் இதே பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித் அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு மெயில் அனுப்பினார். பின்னர் அவர்கள் அந்த காரை பிஎம்டபிள்யூவின் மானசேர் பகுதியில் உள்ள ஆய்வு மையத்திற்குக் கொண்டு வந்தனர்.

அங்கு நடத்திய ஆய்வில் புதிதாகப் பொருத்தப்பட்ட பிரேக் சரியாகப் பொருத்தப்படவில்லை எனத் தெரியவந்து அது சரி செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்பும் அந்த சத்தம் நிற்கவில்லை காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போது பிரேக் பிடித்தால் முன்பக்க வீலீலிருந்து சத்தம் வருகிறது. அதே நேரம் இந்த முறை தவறான பிரேக்சிஸ்டம் காரமாக அதிகமாக உராய்வு ஏற்பட்டு சூட்டால் முன்பக்கத்தில் உள்ள 2 டயர்களும் வெடித்தது.

தொடர்ந்து இந்த பிரச்சனை சரியாகவில்லை என்பதால் பிரீத்தம் இது குறித்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மீது நுகர்வோர் டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிபதிகள் பிங்கி மற்றும் பிம்லா குமாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மீது தவறு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றம் இந்த காருக்காக அவர் செலுத்திய ரூ26.26 லட்சம் பணத்தை ஆண்டிற்கு 6 சதவீத வட்டியைக் கணக்கிட்டுத் திரும்பச் செலுத்த வேண்டும். இதை வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதிக்குள் திரும்பச் செலுத்தவேண்டும் தவறினால் வட்டி 9 சதவீதமாகக் கணக்கிடப்பட வேண்டும் என்றும், இது போக பிரீத்தம் பால் மன ரீதியாக இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதற்காக ரூ2 லட்சம் நஷ்ட ஈடும். இந்த வழக்கை நடத்தியதற்காக ரூ50 ஆயிரம் செலவுத் தொகையையும்,

மேலும் இவ்வளவு நாள் காரை பராமரித்த செலவாக ரூ1.09 லட்சம் பணமும், காரின் டயரை மாற்றியதற்காக ரூ35 ஆயிரம் பணமும், காருக்கு இன்சூரன்ஸ் வாங்கியதற்காக இரண்டாம் ஆண்டிற்காக ரூ51 ஆயிரம் மற்றும் மூன்றாம் ஆண்டிற்காக ரூ42,280 ஆகிய அத்தனை பணத்தையும் மொத்தமாக செட்டில் செய்யும்படி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, December 30, 2022, 10:22 [IST]
English summary
Consumer court ordered BMW full refund of faulty 1 series car with 6 percent interest
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+