ஓலா, உபேர் கேப் கிடைக்காததால் இளைஞர் செய்த காரியம்! இனி எல்லாரும் இவரோட ஐடியாவைதான் ஃபாலோ பண்ண போறாங்க!
பெரு நகரங்களில் வசிக்கும்போது உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கூடவே ஒரு சில பிரச்னைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் போக்குவரத்து முக்கியமானது. ஓலா (Ola) மற்றும் உபேர் (Uber) போன்ற செயலிகளில், கேப்களை (Cabs) புக்கிங் செய்வதில் சில சமயங்களில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அடுத்த முறை உங்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டால் எப்படி சமாளிக்க வேண்டும்? என்பதை புனே வாலிபர் ஒருவர் தற்போது நமக்கு சொல்லி கொடுத்துள்ளார். அவர் அப்படி என்ன செய்தார்? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஜொமொட்டோ (Zomato) மூலம் உணவு ஆர்டர் செய்தார்!

நீங்கள் சரியாகதான் படித்துள்ளீர்கள். சர்தக் சச்தேவா என்ற இளைஞர்தான் இந்த வித்தியாசமான ஐடியா மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பிரபலமாக உள்ள 'கன்டென்ட் க்ரியேட்டர்' ஆவார். சமீபத்தில் வெளியே சென்றிருந்த அவர், வீடு திரும்ப 'கேப்' புக்கிங் செய்ய முடியாமல் தடுமாறியுள்ளார்.
அப்போதுதான் அவருக்கு வித்தியாசமான ஐடியா ஒன்று தோன்றியது. அருகில் இருந்த ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்ற அவர், அங்கிருந்தபடியே ஜொமொட்டோ மூலம், தனது வீட்டு முகவரிக்கு பர்கர் ஆர்டர் செய்தார். இதன்பின் அங்கிருந்த ஹோட்டலுக்கு, ஜொமொட்டோ டெலிவரி பாய் வந்தார். அவர் அங்கு பர்கரை பெற்று, சர்தக் சச்தேவாவின் வீட்டில் டெலிவரி செய்ய வேண்டும்.
அந்த நேரத்தில் உணவு டெலிவரி ஊழியரை, சர்தக் சச்தேவா அணுகினார். பர்கருடன் என்னையும் வீட்டில் விட்டு விட முடியுமா? என அவரிடம் சர்தக் சச்தேவா கேட்டார். இதை ஏற்று கொண்ட உணவு டெலிவரி ஊழியர், சர்தக் சச்தேவாவை பத்திரமாக வீட்டில் இறக்கி விட்டு விட்டார்.
இந்த வைரல் வீடியோவை (Viral Video), சர்தக் சச்தேவா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வித்தியாசமான ஐடியாவின் மூலம் சர்தக் சச்தேவா பத்திரமாக வீட்டிற்கு சென்றதுடன் மட்டுமல்லாது, கூடவே அவருக்கு பர்கரும் கிடைத்துள்ளது. எனவே இந்த ஐடியாவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது உண்மையிலேயே அற்புதமான ஒரு ஐடியாதான். பெரு நகரங்களில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களின் கேப் கிடைக்காமல், நடுக்காட்டில் சிக்கி தவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டவர்களுக்கு, இந்த ஐடியா எவ்வளவு சிறப்பானது? என்பது மிகவும் நன்றாக புரியும்.
இந்திய இளைஞர்களின் இந்த வித்தியாசமான சிந்தனையும் கூட பிரம்மிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வித்தியாசமான ஐடியாவிற்காக, சர்தக் சச்தேவாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். எனவே வரும் காலங்களில் நிறைய பேர் இந்த ஐடியாவை பின்பற்றி பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








