அமெரிக்க லாரிக்கும், இந்தியா லாரிக்கும் என்ன வித்தியாசம்? இந்த விஷயத்தை யாருமே சொல்ல மாட்டாங்க!
உலகம் முழுவதும் வாகனங்கள் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட்டாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் நம் மக்களின் தேவையை பொருத்து வாகனங்களின் வடிவமைப்பில் மாற்றம் இருக்கும். இது டூ வீலர் துவங்கி விமானங்கள் வரை இப்படியான மாற்றங்கள் செய்வதற்கு பின்னால் பல முக்கியமான காரணங்கள் இருக்கும். இப்படியாக இந்திய லாரிகளுக்கும் வெளிநாட்டில் உள்ள லாரிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.
அமெரிக்க லாரிகள்: அமெரிக்க நாடுகளில் லாரிகள் மிகப்பெரிய அளவில் இருக்கும். சாலையில் செல்லும் போது ஏதோ ஒரு பெரிய ராட்சசன் வருவது போல லாரியின் அளவு இருக்கும். பெரும்பாலான லாரிகளில் முன்பக்கம் மூக்கு போல அதன் இன்ஜின் இருக்கும். மற்ற வாகனங்களை இழுத்து செல்லும் வசதி அதிக வேகத்தில் செல்லும் வசதி ஆகியன இந்த லாரிகளில் இருக்கும்.

அமெரிக்காவில் மிக நீண்ட தூர மிகப்பெரிய அளவிலான ஹைவே சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் பயணிக்க வசதியாக இந்த லாரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்க லாரிகளின் முக்கியத்துவமே இதன் டிரைவர்களுக்கு வழங்கப்படும் வசதி மற்றும் தங்கும் இடவசதிகள் தான். அமெரிக்க லாரிகளில் இது சிறப்பாக இருக்கும்.
பெரும்பாலான அமெரிக்க லாரிகளில் டிரைவர்கள் தங்குவதற்கு தனியாக கேபின் மற்றும் இடவசதி இருக்கிறது. அமெரிக்காவில் நீண்ட தூரம் நீண்ட நேரம் லாரிகளை ஓட்ட வேண்டும் என்பதால் பெரும்பாலான டிரைவர்கள் அருகிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் இதனால் அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப இந்த லாரிகளில் தங்கும் இட வசதிகளை செய்து வைத்திருப்பார்கள்.

ஐரோப்ப லாரிகள்: ஐரோப்ப நாடுகளில் சாலைகள் மிகக் குறுகலாக இருக்கும். இந்த லாரிகளில் இன்ஜினுக்கு மேலேயே கேபின் அமைக்கப்பட்டிருக்கும் கேபினுக்கு முன்பக்கம் இடம் கிடையாது. இதனால் லாரிகளில் குறைவான வீல்பேஸ் நீளம் இருக்கும். அந்நாடுகளில் பார்க்கிங் வசதிகளும் குறைவாக தான் இருக்கும் அதற்கு ஏற்றபடி சிறிய அளவிலான லாரிகளையே காம்பேக் டிசைனில் லாரி விற்பனையாளர்கள் வடிவமைத்திருப்பார்கள்.
ஐரோப்ப நாடுகளில் லாரி ஓனர்களில் லாரியை ஓட்டுவது என்பது மிகவும் குறைவு. இதனால் இந்த வகையான லாரிகளில் டிரைவர்களுக்கு தங்கும் இடம் என்று தனியாக இட வசதி இருக்காது. இந்த லாரியின் வடிவமைக்கும் முழுவதும் ஐரோப்பாவில் உள்ள சாலைகளை மனதில் வைத்து அதற்கு தகுந்தார் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்திய லாரிகள்: அமெரிக்க ஐரோப்பாவில் இருந்து இந்தியாவில் லாரிகள் இயங்குவதற்கான கண்டிஷன் முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளது. இந்தியாவில் அதிக நெருக்கடி கொண்ட சிட்டி சாலைகள் குறுகலான இடவசதி கொண்ட கிராம சாலைகள் என மூன்று விதமான சாலைகளிலும் லாரி பயணிக்கும். இதனால் இதை வடிவமைக்கும் போது இந்த மூன்று விஷயத்திற்கும் ஏற்றவாறு தான் வடிவமைக்க முடியும்.
இந்தியாவில் லாரி டிரைவர்கள் பலர் தங்களின் பல பகல்களையும் இரவுகளையும் இந்த லாரிகளிலேயே தான் கழிப்பார்கள். பலர் லாரிகளேயே தற்காலிக வீடாக பயன்படுத்துவார்கள். இதனால் லாரிகளில் அவர்கள் தங்குவதற்கான இட வசதி தங்கள் பொருட்களை வைப்பதற்கான இட வசதி ஏன் சின்ன கிச்சன் யூனிட் கூட லாரிகளில் வைத்திருப்பார்கள்.
இந்தியாவில் லாரிகளில் கொண்டு செல்லப்படும் சுமைகளுக்கான எடை கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் லாரிகளை வடிவமைப்பவர்கள் அதை கருத்தில் கொண்டு லாரியின் எடை குறிப்பிட்டு அளவிற்கு மேல் செல்லக்கூடாது என்பதால் குறைவான ஏழைகள் தயாரிப்பார்கள் அதே நேரம் அதிக லோடுகளை எடுத்துச் செல்லும் வகையிலும் தயாரிப்பார்கள்.
இப்படியாக லோடுகளை எடுத்துச் செல்லும் லாரிகள் இந்தியாவின் குறுகலான சாலைகளிலும் பயணிக்க வேண்டும். அதே நேரம் இன்ஜின் அதன் முழு திறனையும் காட்ட வேண்டும். அதிக மைலேஜூம் தர வேண்டும் இந்தியாவில் ஒரு லாரியை இயக்குவதற்கான செலவு கட்டணம் என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
டிசைன் மற்றும் அளவுகள்: அமெரிக்க லாரிகளில் முன்பக்கம் மூக்கு போல பெரிய இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் அதிக பவர் கொண்ட இன்ஜின் மற்றும் மற்ற வாகனங்களை இழுத்து செல்லும் அளவிற்கு திறன் கொண்ட இன்ஜின் பொருத்த முடியும். நீண்ட தூர ஹைவேக்கு இப்படியான சிஸ்டம் தேவை.
இந்தியா மற்றும் ஐரோப்ப நாடுகளில் உள்ள லாரிகளுக்கு குறுகலான சாலைகளில் செல்லக்கூடிய அதே நேரம் நெருக்கடியான சாலைகளில் செல்லக்கூடிய அளவிலான சிறிய ரக லாரிகள் தான் தேவை. இதற்கு அதிக பார்க்கிங் ஸ்பேஸ் இருக்காது என்பதால் இப்படியான டிசைனை தான் செய்திருப்பார்கள்.
சரக்கு எடை: அமெரிக்காவில் உள்ள லாரிகள் மிக அதிகமான அளவு எடையை இழுத்துச் செல்ல வேண்டியது இருக்கும். அதிகமான டிரெய்லர்களை இழுத்து அல்லது மிகப்பெரிய டிரெய்லர்களை இணைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். அமெரிக்க சாலைகளில் இது எல்லாம் சாத்தியம் தான்.
இந்தியாவில் பெட்ரோல் செலவு என்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் லாரிகளுக்கான உச்சபட்ச எடை அளவு இருக்கிறது. இதை பொறுத்துதான் இந்தியாவில் உள்ள லாரிகள் வடிவமைக்கப்படும். பெரும்பாலும் குறைந்த எடை கொண்ட லாரியில் அதிக எடை கொண்ட லோடு ஏற்றி செல்லும் வகையில் தான் வடிவமைக்கப்படுகிறது.
டிரைவர் வசதி: அமெரிக்காவில் உள்ள லாரிகளை டிரைவர்களின் சின்ன வீடு என்றே சொல்லலாம். அவர்கள் லாரிகள் இல்லையே தங்களுக்கு தங்கும் வசதி கொண்ட ரூம்களையே வைத்திருப்பார்கள் அங்கு அனைத்து விதமான வசதிகளும் அவர்களுக்கு கிடைக்கும். இந்தியாவில் லாரிகளில் அவ்வளவு பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு லாரி டிரைவர்கள் தங்கள் தங்குவதற்கான வசதிகளை செய்து வைத்திருப்பார்கள்.
சாலை கண்டிஷன்: அமெரிக்காவில் லாரிகள் மிக நீளமான நேரான நெடுஞ்சாலைகளில் தான் அதிகம் பயணிக்கும் அதன் சாலை கண்டிஷன்கள் எல்லாம் அமெரிக்காவில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் அத்துப்படியாக இருக்கும். இதனால் அமெரிக்க சாலைகளில் பெரிய வீல் பேஸ் கொண்ட வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் சாலைகள் கரடு முரடாக இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான சாலைகள் இருக்கும் சில பகுதியில் குறுகலாகவும் சில பகுதியில் சிறப்பாகவும் சில பகுதியில் மோசமான சாலைகளும் இருக்கும். சில நேரங்களில் லாரிகள் ஆஃப் ரோடு பயணங்கள் கூட செய்ய வேண்டியது இருக்கும்.
கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட விதிகள்: அமெரிக்காவில் அதிகமான அளவு சரக்குகளை ஏற்றி செல்லவும் அதிக வேகத்தில் செல்லவும் லாரிகளுக்கு அனுமதி உள்ளது. ஆனால் இந்தியாவில் லாரிகள் காண வேகம் குறைவாக இருக்கிறது எடை குறித்த கட்டுப்பாடுகளும் இருக்கிறது. அதேபோல இந்தியாவில் பெரும்பாலான சாலைகளில் டிராபிக் அதிகமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகளில் லாரிகளின் போக்குவரத்து மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. லாரிகள் இல்லை என்றால் ஒரு நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். உள் நாட்டிற்குள் ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்த மற்றொரு இடத்திற்கு போனால் தான் வளர்ச்சி ஏற்படும். இதனால் லாரிகள் ஒரு நாட்டின் வளர்ச்சி முக்கிய காரணமாக இருப்பவதை இதனால் இந்தியாவில் லாரிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications
