எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல, இன்னுமா அடையாளம் தெரியல? வாங்கிய கார்களை நிறுத்தவே பெரிய இடம் தேவை!

நம்மில் பலருக்கு லேண்ட் ரோவர் (Land Rover) கார் ஒன்றை வாங்குவதே கனவாக இருக்கும் நிலையில், இங்கு ஒரு அரசியல் பிரமுகர் லேண்ட் ரோவர் கார் வாங்கிய ஒரே வாரத்திற்குள் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) கார் ஒன்றை வாங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உலகளவில் லேண்ட் ரோவர் கார்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. அதிலிலும் குறிப்பாக, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியாவிலும் உள்ளது. இதில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஒன்றை தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் அரசியல்வாதி சமீபத்தில் வாங்கி உள்ளார்.

controversial politician bought two luxury cars within one week

இதுதொடர்பான பதிவுகள் இந்த அரசியல்வாதியின் தொண்டர் ஒருவரது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அரசியல்வாதியின் பெயர், பிரிஜ் பூஷன் ஷரன் சிங் (Brij Bhushan Sharan Singh) ஆகும். உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் பாஜக (BJP) கட்சியில் அங்கம் வகிக்கிறார்.

உத்திர பிரதேச மாநிலத்தின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகவும், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஆகவும் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் இருந்துள்ளார். அகில இந்திய குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ள பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது குத்துச்சண்டை வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு அளித்து போராட்டங்கள் நடத்தியது நாடு முழுக்க கவனம் பெற்றதை பார்த்திருப்பீர்கள்.

controversial politician bought two luxury cars within one week

இருப்பினும், இப்போது இவர் எம்பி பதவியில் இல்லை என்றாலும், மாநில அரசியல் தளத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதன் வெளிப்பாடே, ஒரே வாரத்தில் இரு விலையுயர்ந்த கார்களை பிரிஜ் பூஷன் ஷரன் சிங் வாங்கியது ஆகும். டொயோட்டா வெல்ஃபையர் காரை டெலிவிரி (Delivery) பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இவர் வாங்கியது, டிஃபெண்டர் 110 கார் ஆகும்.

இந்தியாவில் 90, 110 மற்றும் 130 என மூன்று விதமான உடலமைப்புகளில் டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காரின் நீளத்தை பொறுத்து இந்த அளவீடுகள் குறிக்கப்படுகின்றன. டிஃபெண்டர் 110 ஆனது 5 கதவுகள் உடன் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இதனை கரடு முரடான ஆஃப்-ரோடு (Off-road) பயணங்களுக்கும் கொண்டு செல்லலாம்.

controversial politician bought two luxury cars within one week

2 லிட்டர் பெட்ரோல், 3 லிட்டர் டீசல், 5 லிட்டர் பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் டிஃபெண்டர் 110 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.1.32 கோடியில் இருந்து ரூ.1.99 கோடி வரையில் தற்சமயம் உள்ளன. இத்தகைய விலையுயர்ந்த காரை வாங்கிய போதிலும், ஒரே வாரத்தில் மேலும் ஒரு விலையுயர்ந்த காராக டொயோட்டா வெல்ஃபையரை வாங்கி கவனத்தை ஈர்த்துள்ளார்.

டிஃபெண்டர் 110 மற்றும் வெல்ஃபையர் என இரு கார்களையும் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் வாங்கியுள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வெல்ஃபையர் காரின் விலையுயர்ந்த டாப்-வேரியண்ட்டான எக்ஸிக்யூட்டிவ் லவுஞ்ச் (Executive Lounge) வேரியண்ட்டை இவர் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.32 கோடியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசியல் பிரமுகர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் வாங்கி இருக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரின் நம்பர் பிளேட்டை (Number Plate) வைத்து ஆராய்ந்து பார்த்ததில், கார் அவரது பெயரில் வாங்கப்படவில்லை. அவரது குடும்பத்தை சேர்ந்தவர் அல்லது நண்பருக்காக இந்த டிஃபெண்டர் 110 காரை இவர் வாங்கியிருக்கலாம். ஆக, தற்போது வாங்கியிருக்கும் டொயோட்டா வெல்ஃபையர் தான் தற்போது பிரிஜ் பூஷன் ஷரன் சிங் தனக்காக வாங்கிய காராக இருக்கக் கூடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 15:54 [IST]
English summary
Controversial politician brij bhushan sharan singh bought two luxury cars within one week
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X