கன்வெர்ட்டிபில் கார் பிரியர் ரத்தன் டாடாவின் கார் கலெக்ஷன்!!

இந்தியாவின் வர்த்தக சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு வாகனத் துறை அதீத ஈடுபாடு உண்டு. அவரது டாடா குழும சாம்ராஜ்யத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வந்தபோதிலும், வாகன துறை மீது அதிக நாட்டம் செலுத்தினார்.

உலகின் குறைந்த விலை காரான நானோ திட்டத்தை அறிவித்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அவர், உலகின் மிக பிரபலமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களை கைகயப்படுத்தி, உலக அரங்கில் டாடா பிராண்டுக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியவர்.

கார்களின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை காண்பதற்கு, அவரது கார் கராஜ் மட்டுமல்ல, அவரது டிரைவிங் ஆர்வத்தையும் சான்றாகவே சமர்ப்பிக்கலாம். பெரும் பணக்காரர்கள் பெரும்பாலும், கார்களை ஓட்டுவதற்கு பல ஓட்டுனர்களை பணியமர்த்தி வைத்திருப்பர்.

ஆனால், ரத்தன் டாடாவுக்கு ஓட்டுனர்கள் பலர் இருந்தாலும், அவரே கார்களை ஓட்டிச் செல்வதுதான் அவருக்கு உற்சாகத்தை தரும் விஷயம். சரி. அவர் ஓட்டி, ரசித்து ருசித்த கார்களை பற்றியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ஃபெராரி கார்

01. ஃபெராரி கார்

ரத்தன் டாடாவிடம் ஃபெராரி கலிஃபோர்னியா கார் மாடல் இருக்கிறது. எம்எச்01 ஏஎல்111 என்ற பதிவெண் கொண்ட காரைத்தான் அவர் பயன்படுத்துகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் கடலோரச் சாலைகளில் ஹாயாக கார் ஓட்டிச் செல்வது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக குறிப்பிடுகின்றனர். அவ்வப்போது, அவர் இதுபோன்று ஓட்டிச் செல்வதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பலர் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

ஃபெராரி பற்றி...

ஃபெராரி பற்றி...

4 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய திறந்து மூடும் கூரை பொறுத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். 2008ம் ஆண்டு அரிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஒரிஜினலாக மஸராட்டி கான்செப்ட் கார் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாம். அதாவது, மஸராட்டி கான்செப்ட் காரை உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கான செலவீனம் மிக அதிகமாக இருந்ததால், இந்த முடிவை இரு நிறுவனங்களின் தாய் குழுமமான ஃபியட் முடிவு செய்தது. இந்த காரில் 453 பிஎச்பி பவரையும், 485 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 4.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபெராரியின் முதல் ஃப்ரண்ட் மிட் மவுண்ட் லே அவுட்டில் வடிவமைக்கப்பட்ட கார் மாடலும் இதுதான்.

02. லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்

02. லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு எஸ்யூவி மாடல் ஃப்ரீலேண்டர். இந்த எஸ்யூவி ஒன்றையும் ரத்தன் டாடா விரும்பி வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்.

03. டாடா இண்டிகோ மரினா

03. டாடா இண்டிகோ மரினா

ரத்தன் டாடாவுக்கு நாய்கள் என்றால் பிரியமாம். புனேயில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நாய்களுக்காகவே தனி இடம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தனது செல்லப் பிராணிகளை பின்புறம் ஏற்றிச் செல்வதற்காகவே இந்த எஸ்டேட் வேகன் மாடலை அவர் பயன்படுத்துகிறார்.

இண்டிகோ மரினா பற்றி...

இண்டிகோ மரினா பற்றி...

அதிக இடவசதி கொண்ட மாடலாக பெருமைப்பட்டுக் கொண்ட டாடா தயாரிப்பு. பொருட்களை எடுத்து செல்வதற்கான அதிக இடவசதி கொண்ட எஸ்டேட் வேகன் வகை மாடல் இது. விற்பனையில் எடுபடாத காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

04.ஹோண்டா சிவிக்

04.ஹோண்டா சிவிக்

ரத்தன் டாடாவிடம் ஹோண்டா சிவிக் செடான் காரும் உள்ளது. ஹோண்டாவின் மென்மையான பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த காரும் ரத்தன் டாடாவுக்கு மிகவும் பிடித்த மாடல்களில் ஒன்று. அவ்வப்போது இந்த காரை ஓட்டிச் செல்வதும் அவருக்கு பிடித்தமான ஒன்று.

ஹோண்டா சிவிக் பற்றி...

ஹோண்டா சிவிக் பற்றி...

1972ம் ஆண்டு உற்பத்தியில் இருக்கும் இந்த கார் 10 தலைமுறை மாடல்களாக வெளியிடப்பட்டுவிட்டது. சமீபத்தில் பத்தாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் இதுவும் ஒன்று. 2006ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் மாடல் விற்பனையில் சோபிக்காததால், 2012ம் ஆண்டுடன் இந்தியாவில் இந்த காரின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்திவிட்டது.

05. மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

05. மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே

ரத்தன் டாடா இல்லத்தின் கராஜிற்கு மதிப்பு சேர்க்கும் மாடல்களில் ஒன்று. இந்திய சாலைகளில் அதிகம் காண முடியாத கார் மாடல்.1963ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை ரத்தன் டாடா விரும்பி பயன்படுத்தும் மாடல்களில் ஒன்று.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே பற்றி...

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே பற்றி...

1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஆறாம் தலைமுறையை கண்டுவிட்டது. நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த மாடலை நீண்ட நாள் கனவாக வைத்திருந்து ரத்தன் டாடா வாங்கியிருப்பதாக சொல்கின்றனர்.

06. கேடில்லாக் எக்ஸ்எல்ஆர்

06. கேடில்லாக் எக்ஸ்எல்ஆர்

ரத்தன் டாடாவிடம் இருக்கும் கார்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்திலும் ஒரு தனித்துவத்தை பெற்றதையே தேர்வு செய்து வாங்கியுள்ளார். அதில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேடில்லாக் பிராண்டின் எக்ஸ்எல்ஆர் காரும் ஒன்று.

கேடில்லாக் எக்ஸ்எல்ஆர் பற்றி...

கேடில்லாக் எக்ஸ்எல்ஆர் பற்றி...

ரத்தன் டாடா பயன்படுத்தும் கேடில்லாக் காரில் 320 பிஎச்பி பவரை அளிக்கும் 4.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு கன்வெர்ட்டிபிள் ரக மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விற்பனையில் இல்லை.

07. மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்

07. மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்

ரத்தன் டாடாவுக்கு திறந்து மூடும் கூரை பொருத்தப்பட்ட கன்வெர்ட்டிபிள் மாடலில் செல்வதை அதிகம் விரும்புவாராம். அந்த வகையில், அடுத்து அவர் கராஜில் இருக்கும் ஒரு கன்வெர்ட்டிபிள் மாடல்தான் மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்.

பென்ஸ் 500எஸ்எல் பற்றி...

பென்ஸ் 500எஸ்எல் பற்றி...

இந்த காரில் 306 பிஎச்பி உச்சபட்ச பவரை அளிக்கும் வல்லமை கொண்ட 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மிக மிக சொகுசான கன்வெர்ட்டிபிள் கார்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

08. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

08. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

பெரும் பணக்காரர்களின் அனைவரது கராஜிலும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அதேமாதிரி, ரத்தன் டாடா கராஜிலும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் மாடல் இருக்கிறது.

பென்ஸ் கிளாஸ் பற்றி..

பென்ஸ் கிளாஸ் பற்றி..

உலகின் மிக உன்னதமான சொகுசு கார் மாடல். இடவசதியிலும், வசதிகளிலும் வாடிக்கையாளர்களை தொன்றுதொட்டு கட்டிப் போட்டு வைத்திருக்கும் மாடல். அதிக சக்திவாய்ந்த இந்த சொகுசு காரின் பயண அனுபவத்தை புகழாத வாடிக்கையாளர்களே இருக்க முடியாது. அதற்கு ரத்தன் டாடாவும் விதிவிலக்கல்ல.

09. ஜாகுவார் எஃப் டைப்

09. ஜாகுவார் எஃப் டைப்

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் நிறுவனத்தின் அழகிய கார் மாடல். இதனை உலக அழகி கார் மாடலாகவும் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் ரத்தன் டாடா கார் கராஜில் இடம்பிடித்த அழகி ஜாகுவார் எஃப் டைப்தான்.

ஜாகுவார் எஃப் டைப் பற்றி...

ஜாகுவார் எஃப் டைப் பற்றி...

இதுவும் ஒரு கன்வெர்ட்டிபிள் என்பதை நினைவிற் கொள்க. இந்த காரில் 488 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. டாடா கராஜில் இருக்கும் அதிசக்திவாய்ந்த மாடலில் ஒன்றும்கூட.

10. ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆர்

10. ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆர்

ரத்தன் டாடா தினசரி பயன்பாட்டிற்கு அதிகம் உபயோகப்படுத்தும் கார் மாடல். செடான் காரின் சொகுசையும், ஸ்போர்ட்ஸ் கார் போன்ற செயல்திறனையும் வழங்க வல்லது.

ஜாகுவார் எக்ஸ்எஃப் பற்றி...

ஜாகுவார் எக்ஸ்எஃப் பற்றி...

இந்த காரில் 503 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து பயன்பாட்டிற்கும் தகுதியான கார் மாடல் என்பதால் ரத்தன் டாடாவுக்கு மிக நெருக்கமான மாடலாகிவிட்டது.

க்றைஸ்லர் செப்ரிங்

க்றைஸ்லர் செப்ரிங்

ரத்தன் டாடாவிடம் க்றைஸ்லர் செப்ரிங் கார் மாடல் ஒன்றும் உள்ளது. அவரது கராஜில் இருக்கும் தனித்துவம் மிக்க மாடல்களில் இதுவும் ஒன்று.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 9, 2015, 16:27 [IST]
English summary
Convertible Car Lover Ratan Tata Car Collection.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+