காருக்கு மட்டுமா... சைக்கிளுக்கான வித்தியாசமான ஆக்சஸெரீஸ்கள்!

கார் மற்றும் பைக்குகளில் கூடுதல் வசதிகளை தரும் ஆக்சஸெரீஸ்களை கூடுதலாக வாங்கிப் பொருத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இதேபோன்று, சைக்கிளுக்கான வித்தியாசமான ஆக்சஸெரீஸ்கள் சிலவற்றையும், பிரத்யேக வசதி கொண்ட பிக்கப் டிரக் ஒன்றையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

வாழைப்பழ ஹோல்டர்

வாழைப்பழ ஹோல்டர்

சைக்கிளில் செல்பவர்கள் ஒரு வாழைப்பழத்தை சைக்கிளில் வைத்து எடுத்துச் செல்வதற்காக பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரிஜினல் லெதரில் செய்யப்பட்டிருக்கிறது.

அளவு

அளவு

4.5 அகலமும், 7 இஞ்ச் உயரமும் கொண்டதாக இந்த வாழைப்பழ ஹோல்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதி

வசதி

சைக்கிளின் ஹேண்டில்பார், ஃப்ரேமில் பொருத்திக் கொள்வதோடு, உங்களது இடுப்பு பெல்ட்டிலும் பொருத்திக் கொள்ளலாம். இது 55 டாலர் விலை கொண்டது.

கப் ஹோல்டர்

கப் ஹோல்டர்

கார்களில் கப் ஹோல்டர்கள் பயணிகளுக்கு நல்ல வசதியை அளிக்கின்றன. இதேபோன்று, சைக்கிளில் பொருத்திக் கொள்வதற்கான கப் ஹோல்டர்தான் இது. புக்மேன் தயாரிப்பு. சிறிய கிளிப்பில் இந்த கப் ஹோல்டர் எளிமையாக பொருத்திக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.

அளவு

அளவு

இதில் சின்னதும், பெரிதுமான விட்டம் கொண்ட இரு வளையங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை கப்பின் அளவுக்கு தகுந்தவாறு எளிதாக பிடிமானம் கொடுக்கும். இந்த கப் ஹோல்டர் 29 டாலர் விலையில் கிடைக்கிறது.

 கோல்ஃப் சைக்கிள்

கோல்ஃப் சைக்கிள்

கோல்ஃப் விளையாடுபவர்கள், அந்த உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கு கோல்ஃப் கார்ட் எனப்படும் சிறிய வாகனத்தையோ அல்லது உதவியாளர் ஒருவரை கூடவே அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுபோன்றவர்களுக்கு பயன்படும் விதத்தில் கோல்ஃப் சைக்கிள் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வசதி

வசதி

கோல்ஃப் ஸ்டிக் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் இந்த சைக்கிளின் பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பையில் வைத்து எடுத்துச் செல்லலாம். இதன் டயர்கள் புல்வெளிகளை அதிக சேதப்படுத்ததா விசேஷ அம்சம் கொண்டது.

விலை

விலை

ஹையர் கிரவுண்ட் பைசைக்கிள் கம்பெனியின் தயாரிப்பான இந்த கோல்ஃப் சைக்கிளின் விலை 1,200 டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஸ்கேட்டிங் போர்டு

ஸ்கேட்டிங் போர்டு

பனி படர்ந்த சாலைகளில் எளிதாக செல்லும் வகையில் சைக்கிளின் முன்சக்கரத்தில் பொருத்திக் கொள்வதற்கான ஸ்கேட்டிங் போர்டுதான் இது.

வசதி

வசதி

பனிக்கட்டிகள் அடர்த்தி மிகுந்த இடங்களில் சைக்கிளை எளிதாக செலுத்த உதவுவதோடு, ஸ்கேட்டிங் போர்டு தடத்திலேயே பின்சக்கரம் எளிதாக செல்லும்.

விலை

விலை

325 டாலர் விலையிலிருந்து இந்த சைக்கிள் ஸ்கேட்டிங் போர்டு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 29, 2014, 8:50 [IST]
English summary
Cool accessories for bi cycle. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+