ரஜினி உடன் கூலி படத்தில் நடிக்குறதா சொன்னாங்க... செகண்ட்-ஹேண்ட் காரை ஆர்பாட்டம் இல்லாம வாங்கிட்டு போனது இவரா?

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), இந்தியா முழுவதும் அறிமுகமே தேவைப்படாதவர். இவரது நடிப்பில் அடுத்ததாக 'கூலி' (Coolie) திரைப்படம் வருகிற சுதந்திர தினம் சமயத்தில் திரைக்குவர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களிலும் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக பிற மொழி நடிகர்களையும் கூலி திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் (Baburaj) கூலி படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலேயே, 1994ஆம் ஆண்டில் வில்லன் கதாபாத்திரம் மூலமாக அறிமுகமான பாபுராஜ்க்கு நிறைய படங்களில் வில்லன் கதாபாத்திரம் தான் கைக்கொடுத்தது.

coolie movie actor buys car

மலையாளத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பாபுராஜ் தமிழிலும் கூலி படத்திற்கு முன்பாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்தின் ஜனா, எல்லாம் அவன் செயல், நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடிகர் பாபுராஜை காணலாம். இவ்வளவு ஏன், 2022ஆம் ஆண்டில் நடிகர் விஷாலின் நடிப்பில் வெளியான 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தில் முக்கியமான வில்லனே நடிகர் பாபுராஜ் ஆவார்.

ஒரேயொரு இந்தி படத்திலும் துணை நடிகராக நடித்துள்ள பாபுராஜ், சில திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளிவந்த பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்கிற அளவிற்கு எதிர்பார்க்கப்படும் நடிகர் பாபுராஜ் புத்தம் புதியதாக ஒரு கார் வாங்குவார் என பார்த்தால், செகண்ட்-ஹேண்டில் ஒரு பழைய பென்ஸ் காரை வாங்கியுள்ளார்.

coolie movie actor buys car

பிராண்ட்-நியூ கார்களை வாங்குவதற்கு பதிலாக செகண்ட்-ஹேண்டில் விலையுயர்ந்த காரை வாங்கும் பழக்கம் சமீப காலமாகவே சினிமா துறையை சேர்ந்தவர்கள் இடையேயும், அரசியல் பிரமுகர்கள் இடையேயும் அதிகரித்து வருகிறது. இதற்கு வாகன பதிவு கட்டணம் குறைவு உள்பட சில காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால் இந்தியாவில் செகண்ட்-ஹேண்ட் கார் மார்க்கெட்டும் பெரிய நெட்வொர்க் ஆக உள்ளது.

ஏற்கனவே ஒருவரால் பயன்படுத்தப்பட்டு விற்கப்பட்ட கார்களை பட்டி டிங்கரிங் பார்த்து விற்பனை செய்வதையே தொழிலாக கொண்டு பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றான 'ஹை ஸ்ட்ரீட் கார்ஸ்' (High Street Cars) ஷோரூமில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார் ஒன்றை நடிகர் பாபுராஜ் வாங்கியுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட ஹை ஸ்ட்ரீட் கார்ஸ் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செயல்படும் இந்த செகண்ட்-ஹேண்ட் கார் ஷோரூமுக்கு நடிகர் பாபுராஜ் நேரில் சென்று காரை டெலிவிரி பெற்றுள்ளார். இந்த மலையாள நடிகர் வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான பழைய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்350 (GL350) கார் ஆகும். இந்த பென்ஸ் கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. இதற்கு பதிலாக தான் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்தியாவில் 2010ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்350 காரின் விற்பனை 2016ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் சிலமுறை இந்த கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆக, நடிகர் பாபுராஜ் வாங்கியிருக்கும் ஜிஎல்350 கார் குறைந்தது 9 வருடங்களாவது பழையதாக இருக்கும். விற்பனை நிறுத்தப்பட்ட சமயத்தில் ஜிஎல்350 காரின் ஆரம்ப விலை ரூ.83 லட்சம் என்கிற அளவில் இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிராண்ட்-நியூ காரை வாங்கும் அளவிற்கு செகண்ட்-ஹேண்ட் காரை எளிதாக வாங்க முடிவதில்லை. பல விதமான சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், நம்பகமான ஷோரூமை தேடி செல்ல வேண்டியுள்ளது. ஆனால், செகண்ட்-ஹேண்ட் காரை வாங்குவதற்காக நடிகர் பாபுராஜ் எதற்காக டெல்லி வரையில் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. மேலும், இந்த செகண்ட்-ஹேண்ட் பென்ஸ் காருக்காக எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பதும் தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 17:15 [IST]
English summary
Coolie movie actor baburaj buys second hand mercedes benz car
மேலும்... #celebrity cars #used car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+