வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு விநோத பரிசு! காவல்துறையின் போங்கு நடவடிக்கை!

வெள்ள நீரில் தத்தளித்த மக்களை மீட்டவர்மீது காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

இந்தியாவில் தற்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே இயல்பு வாழ்க்கையை மிகக் கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸ் போதாதென்று, கூடுதலாக இயற்கையும் தனது பங்காக மழை வெள்ளத்தின் வாயிலாக கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. அடை மழை காரணமாக இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

இந்த வெள்ள நீரில் சிறுவர்கள் சிலர் காகித கப்பல்களை விட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று ஒரு சில இளைஞர்கள் தங்களின் வாகனங்களையே படகாக நினைத்து சவாரி செய்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில்தான் பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியைச் சேர்ந்த ஓர் நடுத்தர வயதுடை நபர் சிறிய படகு மூலம் வெள்ள நீரில் வலம் வந்துள்ளார்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

அந்த நபரின் பெயர் விஜய் குமார் ஷர்மா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காகவே ஷர்மாவை பஞ்சாப் மாநில போலீஸார் கைது செய்திருக்கின்றனர். என்னங்க சொல்றீங்க படகுல போனதுக்கெல்லாமா கைது?... ஆமாம், அந்த நபர் தான் மட்டுமின்றி தன்னுடன் அதே பகுதியைச் சேர்ந்த சக குடியிருப்பு வாசிகளையும் சேர்த்தே படகில் அழைத்துச் சென்றிருக்கின்றார்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

இந்த செயலை, அம்மாநில அரசையும், அதிகாரிகளையும் கண்டிக்கும் விதமாக அவர் செய்திருக்கின்றார். ஒவ்வொரு வருடமும் மழை காலத்தில் தான் வசிக்கும் குடியிருப்பு பகுதி, வெள்ள நீரில் மூழ்கி விடுவதை எதிர்த்தே இந்த விநோத போராட்டத்தை அவர் மேற்கொண்டிருக்கின்றார். இதற்கான ஒத்துழைப்பைப் பெறும் விதமாக சக குடியிருப்பு வாசிகளையும் தன்னுடன் சேர்த்திருக்கின்றார்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

இதன் வினையாகவே அம்மாநில காவல்துறை அவரை கைது செய்திருக்கின்றது. காரணமாக, போராட்டத்தின்போது சக குடியிருப்பு வாசிகள் எந்தவித பாதுகாப்பு உடையும் அணியாமல் இருந்நததைப் போலீஸார் முன் வைக்கின்றனர். இதுகுறித்து, ஷர்மா மீது கடந்த புதனன்று வழக்கு பதிந்த காவலர்கள், நேற்று கைதும் செய்திருக்கின்றனர்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

பொதுவாக படகு பயணிகள் ஆபத்தான மற்றும் ஆழம் நிறைந்த பகுதிகளில் பயணிக்கும்போதே லைஃப் ஜாக்கெட் எனப்படும் மிதக்கும் ஆடைகளை அணிவர். ஆனால், முழங்கால் அளவே ஆழமுள்ள வெள்ள நீரில் பயணித்தபோது மிதவை ஆடையை அணியவில்லை என கூறி போலீஸார் கைது செய்திருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

மேலும், உரிமைக்காக குரல் கொடுப்போரை ஒடுக்கும் விதமாகவே காவல்துறை இந்த செயலை செய்திருப்பதாகவும் நெட்டிசன்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையில், படகில் பயணிக்கும் போது மிதவை ஆடைகள் தேவைதான். ஆனால், அது ஆழம் அதிகமுள்ள ஆறு, குளம் மற்றும் நீச்சல் தெரியாத நபர்களுக்கே அதிகம் தேவைப்படுகின்றது.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

இரண்டடி ஆழத்திற்கும் குறைவான இடத்தில், படகில் செல்லும்போது பாதுகாப்பு உடை தேவைதானா என்பது தெரியவில்லை. வழக்கு பதிந்து, கைது செய்திருக்கும் போலீஸாரே இதற்கு உகந்த பதிலை தெரிவிக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தற்போது கைதாகியிருக்கும் விஜய் குமார் ஷர்மா என்ன கூறியிருக்கின்றார் என்பதைத் தொடர்ச்சியாக பின்வருமாறு காணலாம்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

"நான் தவறு ஏதும் செய்யவில்லை. சம்பவத்தன்று, ஆழம் அதிகமான பகுதியில் இருந்த சிறுவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதியில் கொண்டுபோய் சேர்த்தேன். என்னிடம், பாதுகாப்பு உடை இருந்ததால், நான் அதை அணிந்திருந்தேன். அரசு தரப்பில் எந்தவொரு பணியாளர்களும் மீட்புப் பணிக்கு வராதநிலையிலேயே, நானே இறங்கி இந்த காரியத்தைச் செய்தேன்" என்றார்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

விஜய் குமார் ஷர்மா இதுபோன்ற விநோத போராட்டங்களுக்கு பெயர்போனவர் என அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர். அவர், தற்போதைய விவகாரத்தில் தன்மீது நடவடிக்கை எடுத்ததைப் போலவே, வெள்ள நீர் தேங்கி நிற்கும் அவல நிலை உருவாக காரணமாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

மழைக் காலத்தில் இந்திய சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிப்பது மிகவும் வழக்கமான ஒன்றே. சில நேரங்களில் இந்த மழை நீரில் சாலைகள், பாலங்கள், ஏன் கட்டிடங்கள்கூட அடித்துச் சென்றிருக்கின்றன. அந்தவகையில், சமீபத்தில்கூட பீஹார் மாநிலத்தில் பல கோடி ரூபாய் செலவில் 8 வருடங்களாக கட்டப்பட்ட மேம்பாலம் காட்டாற்று வெள்ளித்தில் அடித்துச் சென்றது குறிப்பிடத்தகுந்தது.

வெள்ள நீரில் தத்தளித்த மக்கள்! உதவி கரம் நீட்டியவருக்கு காவல்துறை விநோத பரிசு... போங்கு நடவடிக்கையால் சலசலப்பு!

இவ்வாறே இந்தியாவின் பெரும்பாலான பகுதி உள்ளது. இதற்கு நீர் வளங்கள் சுரண்டப்படுவதே மிக முக்கிய காரணமாக உள்ளது. நீர் நிலைகளை மக்களும், அரசும் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பதால் அதன் ஓடு பாதைகள் தடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக குடியிருப்பு பகுதி வெள்ளக்காடாக மாறுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாகனம் போன்ற சொத்துக்கள் கடுமையாக சேதமடைகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cops Arrested A Man For Using Boat On Waterlogged Roads. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X