"ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான்" ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

Written By:

ஹெல்மெட், கிளவுஸ் போட்டு ஹோண்டா நவி பைக்கை ஓட்டிய நபரை பிடித்து தெலுங்கானா போலீசார் ரேஸ் ஓட்டுகிறீர்களான என விசாரித்து அசர வைத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

இந்தியாவில் பைக் ஓட்டுபவர்கள் அதற்கான ஹெல்மெட், கிளவுஸ், கால் முட்டிக்கான பேடு, உள்ளிட்ட பைக் ஓட்டுவதற்கான உபகரணங்கள் அணிந்து செல்வதை பார்ப்பது அரிது. பைக்கில் ரேஸ் ஓட்டுபவர்கள் தான் இந்த பாதுகாப்பிற்கான உடைகளை அணிந்து வருவார்கள் என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

மக்கள் மத்தியில் அந்த எண்ணம் இருந்தாலும் பராவாயில்லை அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் போலீசார் மத்தியிலேயே அந்த எண்ணம் தான் உள்ளது. ஹோண்டா நவி பைக்கில் பாதுகாப்பு உடைகளுடன் சென்ற ஒருவரை பிடித்து ரேஸ் ஓட்டுகிறீர்களா என் போலீஸ் விசாரித்த சுவரஸ்யமான சம்பவம் நடந்ததுள்ளது.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் ஹோண்டா நவி, ஹீரோ கிளாமர், ராயல் என்பீல்டு புல்லட் ஆகிய பைக்குகளில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் பயணத்தை பதிவு செய்ய ஆக்ஷன் கேமராக்களையும் உடன் எடுத்து சென்றனர்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

இந்நிலையில் அவர்களின் உடையை கண்டு சந்தேகமடைந்த போலீசார் குழு அவர்களை பிடித்து விசாரித்துள்ளார். குறிப்பாக நவி பைக்கில் ரைடிங் பூட்ஸ், ஹெல்மெட், கிளவுஸ் அணிந்து வந்த நபரிடம் ரேஸ் ஓட்டுகிறீர்களா ெவ அவர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் விசாரித்த விதத்தில் தான் வேடிக்கையே இருக்கிறது.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

ஹோண்டா நவி பைக்கில் வந்தவரிடம் நீங்கள் ரேஸ் ஓட்டுகிறீர்களா, இது ரேஸ் பைக் தானே...! என விசாரித்தார். அதற்கு பைக்கில் வந்தவர் இது ஹோண்டா ஆக்டிவா போன்ற சாதாரண பைக் தான் சார், இது 60 கி.மீ. வேகத்தை கூட தாண்டாது என கூறினார்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

அடுத்த போலீசார் அவரது ஆக்ஷன் கேமராவில் விடியோ பதிவாவதை நோக்கி என்னது இது என கேட்க, அதற்கு பைக்கில் வந்தவர் இது விபத்து நடந்தால் அதற்கான இன்சூரன்ஸ் பெற சாட்சியா இருக்கும் அதனால் பதிவு செய்கிறேன் என கூறுகையிலேயே போலீசார் ஒருவர் பைக் ஓட்டி வந்தவரின் பூட்ஸை பார்த்து இது ரேஸ் ஓட்டுபவர்கள் போடும் பூட்ஸ் தானே என கேட்டார்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

அதற்கு பைக்கில் வந்தவர் இது ரேஸ் ஓட்டுபவர்களும், போடுவார்கள் ஆனால் இது பாதுகாப்பிற்காக போடுவது தான். ஹெல்மெட் போல இதுவும் நமக்கு பாதுகாப்பு தருகிறது. என கூறினார். போலீசார் அதை ரேஸ் ஓட்டுபவர்கள் பேஷனுக்காக போடுவது என எண்ணினார்களோ என்னவோ?

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

தொடர்ந்து எங்கிருந்து வருகிறீர்கள் என போலீசாா் கேட்டதற்கு பைக்கில் வருபவர் காலை உணவை முடித்து விட்டு எங்கள் ரைடிங்கை தொடர்கிறோம் என கூறினார். அதற்கு போலீசுடன் வந்த சீருடையில் இல்லாத நபர் எங்களுக்கு தெரியும் நீங்கள் ரைடிங் தான் செய்கிறீர்கள் என் இந்த ரோட்டில் ரைடிங்கிற்கு அனுமதியில்லை தெரியுமா என கேட்டார்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

அதற்கு பதிலளித்த பைக்கில் வந்தவர் சார் நாங்கள் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு ரைடிங் வந்துள்ளோம். அதை தான் நான் ரைடிங் என குறிப்பிட்டேன். நாங்கள் ரேஸிங் செல்ல வில்லை என சொல்லி கொண்டிருக்கும் போதே. ஒரு போலீஸ் மற்றொரு போலீசிற்கு இவர்கள் ரைடிங் சென்றதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லுங்கள் என உத்தரவிட்டார்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

நாங்கள் ரேஸ் செல்லவில்லை என பைக்கில் வந்தவர் கூறியதும். போலீசார் இந்த ரோட்டில் எத்தனை பேர் ரேஸிங் செல்கிறார்கள் தெரியுமா எத்தனை விபத்துக்கள் நடக்கிறது தெரியுமா என கேட்டார். அதற்கு பைக்கில் வந்தவர் அது நாங்கள் இல்லை. நாங்கள் வேகமாக ஒட்டவில்லை என கூறினார்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

அதற்கு அந்த போலீஸ் நவி பைக்கை பார்த்து இது ஸ்போட்ஸ் பைக் தானே என கேட்டார்.... !, அதற்கு அந்த பைக்கில் வந்தவர்கள் சாா் இது நவி பைக் சார் ஆக்டிவா பைக் போன்றது என கூறினார். நீங்கள் இந்த பைக்குளில் ரேஸ் தானே செல்கிறீர்கள் என போலீஸ் கேட்டார். அது எந்தெந்த பைக்குகளை பார்த்து கேட்டார் தெரியுமா? ஹோண்டா நவி, ராயல் என்பீல்டு புல்லட், ஹீரோ கிளாமர் இந்த மூனு பைக்கிற்கும் ரேஸாம் இது தான் போலீஸின் கணிப்பு.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

அடுத்த போலீசாரின் புத்திசாலித்தனமான சந்தேகம் என்ன தெரியுமா? ஆக்ஷன் கேமராவை காட்டி, ஒரு வேலை உங்கள் பின்னாடி வந்து யாராவது இடித்து விட்டால் இதில் எப்படி பதிவாகும் என கேட்டார். அதற்கு பைக்கில் வந்தவர். நாம் கீழே விழுவதாவது இதில் பதிவாகும் இல்லையா, சாட்சிக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு இந்த சாட்சியாவது உதவும் என பைக்கில் வந்தவர் போலீசாருக்கு புரியவைத்தார்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

போலீசாருடன் வந்தவர் நீங்கள் ஹெல்மெட் போட்டு வந்ததால் நீங்கள் ரேஸ் தான் ஓட்டுகிறீர்கள் என நினைத்தோம் என கூறினார். ஹெல்மெட் போட்டு ஓட்டினால் ரேஸ் தான் ஓட்டுகிறார்கள் என்பது தான் போலீஸ் கணிப்பு போல....

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

தொடர்ந்து பைக்கில் வந்தவர்க நாங்கள் ரேஸ் ஓட்டவில்லை என கூறியுடன் போலீசார் அவர்களிடம் நாங்கள் உங்களை போட்டோ எடுத்த வைத்திருக்கிறோம். நீங்கள் பைக்கில் வேகமாக செல்வதை பார்த்தால் உங்களுக்கு அபாராதம் விதித்து செல்லான் அனுப்புவோம் என மிரட்டிவிட்டு சென்றார்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

அதற்கு பைக்கில் வந்தவர்கள் நாங்கள் பைக்கில் வேகமாக சென்றால் நீங்கள் எங்களுக்கு நிச்சயம் அபாராதம் விதிக்கலாம் என கூறிய பின்பு போலீசார் கலைந்து சென்றனர்.

ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான் ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

பைக்கில் வந்தர்களின் ஆக்ஷன் கேமராவில் இச்சம்பவம் பதிவாகியிருந்தது. இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரைடிங்கிற்குள் ரேஸிங்கிற்கும் போலீசார் வித்தியாசம் தெரியாமல் திணறினர். அந்த வீடியோவை நீங்களும் கீழே பாருங்கள்.

பைக்கில் முழு பாதுகாப்பு உடையுடன் வருவர்களை சாதாரண மக்களை போலீசாரும் ரேஸ் செல்பவராகவே பார்க்கின்றனர். நல்லவேலை தவறே செய்யாதவருக்கு இந்த போலீசார் அபராதம் விதிக்காமல் விட்டார்களே அதுவே பெரிய விஷயம் தான் போல.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

02.இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

03.ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் கலக்குவதற்கான காரணங்கள்!

04.ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

05.உங்கள் காரில் ஹேண்ட் பிரேக் போடவில்லை என்றால் இப்படியும் நடக்கலாம்...

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Cops harass Honda NAVi & Royal Enfield riders for wearing ‘riding gear’. Read in Tamil.
Story first published: Monday, April 2, 2018, 11:27 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark