லாரிகள் மீது கற்களை வீசி தாக்கிய போலீஸ்காரங்க கதை முடிஞ்சுது! இப்படிலாம் நடக்கும்னு நெனச்சிருக்க மாட்டாங்க!

இந்தியாவில் வாகன தணிக்கையின்போது, காவல் துறையின் செயல்பாடுகள், ஒரு சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றன. வாகன தணிக்கை என்ற பெயரில், காவல் துறை அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. எனவே காவல் துறை அதிகாரிகளை பார்த்து விட்டால், வாகனங்களை நிறுத்தாமல் செல்வதை ஒரு சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அப்படி நிறுத்தாமல் செல்லும் வாகனங்களை நிறுத்துவதற்கு, காவல் துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை செய்வதை நாம் சாலையில் பார்த்திருப்போம். ஆனால் நிறுத்தாமல் சென்ற வாகனங்களை மடக்குவதற்கு காவல் துறை அதிகாரிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை பார்த்துள்ளீர்களா? இப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.

Cops Throw Stones At Moving Trucks

சம்பவத்தன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் காவல் துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரிகளை நிறுத்துவதற்கு, அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக லாரிகள் சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் லாரிகள் மீது ஒரு சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது லாரிகளில் அனுமதியில்லாமல் கனிமங்களை ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

UP Cops Throw Stones At Moving Trucks

அத்துடன் லாரிகள் ஓவர்லோடு ஏற்றி கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே லாரிகளை காவல் துறை அதிகாரிகள் நிறுத்த முயற்சி செய்ததாகவும், ஆனால் லாரிகளின் டிரைவர்கள் நிறுத்தவில்லை என்பதால், காவல் துறை அதிகாரிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதனால்தான் காவல் துறை அதிகாரிகள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்களா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. மறுபக்கம் காவல் துறை அதிகாரிகள் இந்த செயல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இது போன்ற செயல்களால், கடும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக லாரிகள், டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கலாம். அவை நிலை தடுமாறி, மற்ற வாகனங்களின் மீது கவிழ்ந்தால், அது பாதிப்புகளை இன்னும் பெரியதாக மாற்றி விடும். எனவேதான் காவல் துறை அதிகாரிகள் செயல், சமூக வலை தளங்களில் மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.

முன்னதாக லாரி டிரைவர்கள் தங்கள் மீது லாரியை ஏற்ற முயன்றதாக, சுரங்க துறையை சேர்ந்த சர்வேயர் யோகேஷ் சுக்லா என்பவர், காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரிலும், காவல் துறை அதிகாரிகள், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓடும் லாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் சர்வேயர் யோகேஷ் சுக்லா அளித்துள்ள புகாரையும் உரிய முறையில் விசாரித்து, தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 21, 2025, 23:28 [IST]
English summary
Cops throw stones at moving trucks suspended viral video full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+