காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

காரில் தனியாக செல்லும்போதும் இதை கட்டாயமாக செய்ய வேண்டும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், அதனுடனே சேர்ந்து வாழ பழகி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தற்போது தங்களின் அன்றாட பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ள தொடங்கி விட்டனர்.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

முக கவசம் அணிவதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஓரளவிற்கு குறைக்க முடியும். எனவே முக கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் என எதில் பயணம் செய்தாலும், முக கவசங்களை அணிவது அவசியம்.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

ஆனால் கார் உரிமையாளர்கள் ஒரு சிலர் முக கவசங்களை அணிவதை தவிர்க்கின்றனர். குறிப்பாக காரில் தனியாக பயணம் செய்யும்போது அவர்கள் முக கவசம் அணிவதில்லை. காவல் துறையினர் கேட்டால், தனியாக காரில் செல்லும்போது முக கவசம் எதற்கு? என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இது பாதுகாப்பானது இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

எனவே இதுபோன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி காவல் துறையினர் விதிமுறைகளை தற்போது மேம்படுத்தியுள்ளனர். இதன்படி கார்களில் தனியாக பயணிக்கும்போது முக கவசம் அணியாமல் இருந்தாலும், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனா பரவலை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த காவல் துறையினர் இதனை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

கார் ஓட்டுனர்கள் அவ்வப்போது விண்டோ கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டு, சாலையில் மற்றவர்களுடன் உரையாடுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக வழி கேட்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மற்றவர்கள் உடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது முக கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

இதனை மனதில் வைத்துதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகளையும் காவல் துறையினர் புதுப்பித்துள்ளனர். இதன்படி தலை கவசம் அணிந்திருந்தாலும், அதற்கு கீழாக முக கவசத்தையும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அணிவது கட்டாயம்.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

அதாவது இரு சக்கர வாகனத்தை ஓட்டும் அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்து அதன்பின் தலை கவசம் அணிய வேண்டும். இதுகுறித்து கார்அண்ட்பைக் செய்தி வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுப்பதற்கு தலை கவசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை தடுக்க முக கவசம் அவசியமாகிறது.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மீறும்பட்சத்தில் அபராதம் செலுத்த நேரிடும். அத்துடன் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் ஒரு சிலர் கைக்குட்டைகள் முகத்தில் கட்டி கொண்டு, முக கவசம் போல் பயன்படுத்துகின்றனர்.

காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?

இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. முறையான முக கவசங்களை அணிவதுதான் பாதுகாப்பை தரும். எனவே கைக்குட்டைகளை கட்டியிருந்தால், காவல் துறையினர் அதனை முறையான பாதுகாப்பாக கருத மாட்டார்கள். எனவே அபராதம் விதிக்கப்படும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cops To Fine Those Driving Without A Face Mask, Even If They Are Alone In Car - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X