இனி குடி மகன்களை ஊத சொல்லி போலீஸ் தொந்தரவு செய்ய மாட்டாங்க.. தமிழக காவல்துறைக்கு அதிரடி உத்தரவு..!

தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், வாகன ஓட்டிகள் யாரையும் ஊத சொல்லக் கூடாது கட்டாயமாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

போக்குவரத்து விதிமீறல்களிலேயே பேராபத்தை விளைவிக்கும் விதிமீறலாக மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது இருக்கின்றது. மதுவை அருந்திவிட்டு ஒரு நபர் வாகனத்தை இயக்கும்போது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் ஓர் நபராக அவர் மாறிவிடுகின்றார்.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

குறிப்பாக, அவர் நிதானமின்றி வாகனத்தை இயக்குவதன் காரணத்தால் கட்டுபாடில்லாமல் அதி வேகத்தில் செல்ல நேரிடுகின்றது. அதேசமயம், அவர்களிடத்திலும் பெரியளவில் கட்டுப்பாடு காணப்படுவதில்லை.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

இந்தசூழ்நிலையில், திடீர் திருப்பம் அல்லது வாகனங்களின் தோன்றலால் அவர்கள் சற்றே திக்குமுக்காடி விடுகின்றனர். மறுபக்கம், போதையின் தலைசுற்றல் நிலையான முடிவினை எடுப்பதற்குள்ளாக அவரை பேராபத்தில் சிக்க வைத்துவிடுகின்றது. பெரும்பாலான டிரிங் அண்ட் டிரைவ் விவகாரத்தில் இத்தகைய சூழலே நிலவுகின்றது.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

இந்தநிலை, அவருக்கு மட்டுமின்றி சாலையில் வரும் சக வாகன ஓட்டிக்கும் பேராபத்தை ஏற்படுத்தி விடும் வகையில் அமைகின்றது. இதில், மது அருந்தியவருக்கு மட்டுமின்றி அப்பாவியாக வந்த வாகன ஓட்டிக்கும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது.

இதுபோன்ற அவலங்களினாலயே மற்ற போக்குவரத்து விதிமீறல்களைக் காட்டிலும் டிரிங் அண்ட் டிரைவ் விவகாரத்தில் போலீஸார் கடும் தீவிரம் காட்டுகின்றனர்.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

இருப்பினும், வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை தவிர்க்க மறுக்கின்றனர். மேலும், குடிபோதையில் இருக்கும்போது, போலீஸார் மடக்கினால் அவர்களிடம் வாக்குவாத்திலும் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையை தவிர்ப்பதற்காகவே போலீஸார் விதிமீறல்வாதிகளின் வீட்டுக்கே இ-செல்லாண்களை நேரடியாக அனுப்பி வைத்துவிடுகின்றனர். இருப்பினும், ஃபுல் போதையில் வரும் ஆசாமிகளை மட்டும் காவல்நிலையம் எடுத்துச் செல்ல முற்படுகின்றனர்.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

இந்த சூழ்நிலையிலேயே போலீஸ் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இருப்பினும், குடிபோதை மன்னன்களைத் தண்டிக்க போலீஸார் தவறுவதில்லை. மேலும், இதுபோன்ற குடிமகன்களை பிடிக்க ஆல்கஹால் அனலைசர் அல்லது முகத்திற்கு முன்பாக வந்து வாயை ஊதச் சொல்லி கண்டறியும் செயல்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

ஆனால், போலீஸாரின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 (கொரோனா)ஸவைரஸே இந்த அதிரடி உத்தரவிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. சமீபகாலமாக இந்த வரைஸின் தாக்கம் மிக அதிவேகமாக இருக்கின்றது. முன்னதாக சீனாவின் பிறப்பிடமாக கருத்தப்பட்ட வுஹான் நகரத்தில் மட்டுமே அதிக பாதிப்பு இருந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

அந்தவகையில், தற்போது 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸின் தாக்கம் பரந்து விரிந்து காணப்படுகின்றது. இந்த வைரஸின் தாக்கம் இருக்கும் நபர் தொடுவது மற்றும் அருகில் நின்று பேசுவது போன்ற செயல்பாட்டினாலேயே பரவும் தன்மைக் கொண்டிருக்கின்றது.

இதனாலயே மிக விரைவில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸின் அதிகரித்து காணப்படுகின்றது.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

மேலும், இந்த காரணத்தினாலயே போலீஸாரை வாகன ஓட்டிகளிடம் ஊதி காட்டும்படி சொல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுவெளியில் பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் முகமூடி அல்லது கவசம் அணிந்தபடி பணியில் ஈடுபடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

தற்போது கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விவரத்தில் சில முரண்பாடு இருப்பதாக உலக சுகாதாரத்துறை மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

ஆகையால், கொரோனாவினால் நேர்ந்த உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தற்போது வெளியாகியிருக்கும் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இருப்பினும், தற்போது கோவிட்-19 வைரஸைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக நம் நாட்டு மற்றும் மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

இந்தியாவில் அதிகபட்சமாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இதுதவிர, வேறு நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 17 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

இதில், இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 17பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கின்றது. இதனால், பொது இடங்களான ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்குகள் போன்ற இடங்கள் இயக்கமற்ற காணப்படுகின்றது.

இத்தகைய மிக தீவிரமான சூழ்நிலையின் காரணமாகவே தமிழகத்தில் போலீஸாருக்கு ஒரு வழி முறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வாகன ஓட்டிகளை ஊதச் சொல்லாமல், ஆல்கஹால் அனலைசரை வைத்து பரிசோதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

ஆனால், இந்த ஆல்கஹால் அனலைசர்மூலம் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமா என்ற அச்சமான நிலையே தற்போது காணப்படுகின்றது. இதில் பயன்படுத்தப்படும் பைப்புகள் மாற்றப்பட்டாலும் சில நேரங்களில் பற்றாக்குறைக் காரணமாக ஊது குழாய்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அப்போது, ஏதுமில்லா நிலையிலேயே வாகன ஓட்டிகள் ஆல்கஹால் பரிசோதனை செய்கின்றனர். இதுவே, தற்போது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஃபுல் போதையில் வந்தாலும் போலீஸ் உங்களை ஊத சொல்ல மாட்டங்க.. தமிழக காவல்துறைக்கு புதிய உத்தரவு...

ஆகையால், போலீஸார் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையைப் போலவே பொதுமக்களைப் பரிசோதிக்கும் குறிப்பிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

என்னதான் போலீஸ்காரங்க இப்போ நம்மல முகத்திற்கு ஊத சொல்லவில்லை என்றாலும், ஆல்கஹால் அனலைசர் மூலம் நம்ம ஆய்விற்கு உட்படுத்துவார்கள்.

இதில் இருந்து நாங்கள் தப்பித்து விடுவோம், மேலும் டிரிங்க் அண்ட் டிரைவும் செய்வோம் என கூறுபவரா நீங்கள்... அப்படியானால், கீழே இருக்கும் தகவல் உங்களுக்கானதுதான்...

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இதனை வெளிப்படுத்தும் வகையில், போதையில் ட்ரிங்க் அண்ட் டிரைவ் செய்த இளைஞர்கள் திடீர் மாயமாகும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியமானதாக மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதே முதன்மை இடத்தில் இருக்கின்றது.

இதனை தவிர்க்கும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பனும், வாகன ஓட்டிகள் அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதே இல்லை.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் எத்தகைய பின் விளைவு சந்திக்கக் கூடும் என்பதனை விளக்குகின்ற வகையிலான வீடியோ ஒன்று புதிதாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

ஆனால், இதனை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்ற மூன்று இளைஞர்கள் மிகப் பெரிய விபத்தைச் சந்தித்தனர். இந்த விபத்துகுறித்த காட்சிகள் பார்ப்பதற்கு மாயாஜாலத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.

பைக்கில் சென்ற மூவரும் திடீரென விபத்துக்குள்ளான சில நொடிகளிலேயே மாயவதைப் போல் அங்கிருந்து தூக்கி வீசப்படுகின்றனர். இதுகுறித்த வீடியோவை ஷாந்தோனில் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

அந்த வீடியோவில், மிதமான வேகத்தில் செல்லும் அந்த பைக்கில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து செல்கின்றனர். அவர்கள், எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாவது வல பக்க பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்களுக்கு பின்னே வேகமாக வந்த கார்கள் ஒலி எழுப்பி அவர்களை ஒதுங்கச் செய்துவிட்டு ஓவர் செய்தன. இவ்வாறு, தொடர்ச்சியாக மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அவர்களை ஓவர்டேக் செய்து கடந்தன.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இதனால், சாலையின் இடப்பக்க பாதைக்கும், நடு பாதைக்கும் இங்கும் அங்குமாக மாறி சென்ற அந்த இளைஞர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமாறு திரும்பினார்கள். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் நேரடியாக பாதையை பிரிக்கும் டிவைடர் மீது மோதியது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்த விபத்தில், பைக்கில் அமர்ந்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களும் எதிர்பக்க சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்து சரியாக நல்லிரவில் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக அப்போது வேறெந்த வாகனமும் வராத காரணத்தால் அந்த பைக் மற்ற எந்த வாகனம் மீதும் மோதாமல் மீண்டும் சாலையின் மறுபக்க டிவைடர்மீது மோதி நின்றது.

இந்த சம்பவத்தில், பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. மற்றவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து, அவர்களை மீட்ட சக வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

இந்த சம்பவம் அனைத்தையும் பைக்கின் பின்னால் காரில் வந்த இளைஞர்கள் சிலர் தங்களின் செல்போன் மூலம் பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர்கள்தான், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

பெரும்பாலும், இதுபோன்று மதுபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காகவே போலீஸார் இரவு, பகல் பாரமால் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களை ஏமாற்றிச் செல்லும் பலர் இதுபோன்று விபத்துகளைச் சந்தித்து பெரும் பின்விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Corona Awareness For TN Traffic Police. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X