பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலையில், யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட் நிகழ்ந்துள்ளது. மோடி அரசு வேலையை காட்ட தொடங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus) பீதி தற்போது ஆட்டி படைத்து வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சுமார் 120 நாடுகளை தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால், 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

இந்தியாவிலும் கூட கொரோனா வைரஸ் பலரை பாதித்துள்ளது. ஆனால் சீனா, இத்தாலி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைவாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாது, சர்வதேச பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கிடுகிடுவென சரிந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இது உண்மையில் நல்ல செய்திதான்.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

ஏனெனில் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலம்தான் பூர்த்தி செய்து கொள்கிறது. அப்படி இருக்கையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவது இந்தியாவிற்கு பலன் அளிக்கும் விஷயமாகவே இருக்கும். ஆனால் அதன் பலனை வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு முழுமையாக வழங்குகிறதா? என்பதுதான் கேள்வியே.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென குறைந்து கொண்டு வருவதால், இந்தியாவிலும் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை சரிந்ததற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

அதாவது கச்சா எண்ணெய் விலை சரிவின் முழு பலனும் கிடைக்கவில்லை என்பது வாகன ஓட்டிகள் மற்றும் எதிர்கட்சிகளின் வாதம். இப்படிப்பட்ட சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

இதற்கு மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையே காரணம். மத்திய அரசு இன்று (மார்ச் 14) அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வரி உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், புதிய ட்விஸ்ட் ஆக கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில் யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, இல்லத்தரசிகளும் இதனால் கவலையடைந்துள்ளனர். ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், கூடவே அழையா விருந்தாளியாக பால் மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், மிகவும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை ராமர் பிள்ளை வெளியிட்டுள்ளார்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

ஆம், வரும் மார்ச் 30ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மிகவும் மலிவான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் விலை மற்றும் மைலேஜை கேட்டு வாகன ஓட்டிகள் சொக்கி போயுள்ளனர். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் ராமர் பிள்ளை அவ்வப்போது பரபரப்புகளை உண்டாக்கி வருகிறார். இவரது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோல், தமிழக வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை மட்டுமல்லாது, பல்வேறு சர்ச்சைகளையும் சேர்த்தே உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை வரவேற்பவர்களும் இருக்கின்றனர். அதை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இப்படிப்பட்ட சூழலில், ராமர் பிள்ளை தற்போது வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு, மூலிகை பெட்ரோலின் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கியுள்ளார். சென்னையில் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

சென்னை கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கினார். தற்போதைய நிலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் மூலிகை பெட்ரோல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நாளுக்கு 150 லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலின் விலை 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் மூலிகை பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராமர் பிள்ளை முடிவு செய்துள்ளார். இதன் முதற்கட்டமாக விருதுநகர், தேனி, மதுரை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் இந்த மாவட்டங்களிலும் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இதற்காக விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் முகவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில், ராமர் பிள்ளையும் பங்கேற்றார். இதன்பின் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு தகவல்களை ராமர் பிள்ளை பகிர்ந்து கொண்டார்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மூலிகை பெட்ரோல் உற்பத்தியை யாரும் தடை செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூலிகை பெட்ரோலால் வாகனங்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. மூலிகை பெட்ரோல் மூலம் டூவீலர்கள் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

தினசரி 15 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. மூலிகை பெட்ரோலை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி வரும் மார்ச் 30ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

நான் நேரடியாக விற்பனை செய்யும் இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலை 20 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 24 ரூபாய்க்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

ராமர் பிள்ளை அறிவித்த விலையை கேட்டு தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அதே சமயம் இன்னும் சிலரோ மூலிகை பெட்ரோலை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Central Government Hikes Excise Duty On Petrol, Diesel By Rs.3 Per Litre. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X