திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் தற்போது நடந்து வரும் இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் (Coronavirus) தற்போது ஆட்டி படைத்து வருகிறது. சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் என்ற பூதம் தற்போது உலகம் முழுவதும் தோராயமாக 120 நாடுகளை தாக்கியுள்ளது. அத்துடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

உயிர்களை காவு வாங்குவதுடன் மட்டுமல்லாது, சர்வதேச பொருளாதாரத்திலும் கொரோனா வைரஸ் மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு விமான நிறுவனங்களும் தங்கள் சேவையை ரத்து செய்து வருகின்றன. இதனால் விமான போக்குவரத்து துறை முடங்கி போயுள்ளது.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

மறுபக்கம் கச்சா எண்ணெய் விலை சரிவடைவதற்கும் கொரோனா வைரஸ் ஒரு காரணமாக உள்ளது. இது மட்டுமின்றி ஆட்டோமொபைல் துறையையும் கொரோனா வைரஸ் ஒரு கை பார்த்து விட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில், ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

ஏற்கனவே நலிவடைந்து போயிருந்த சர்வதேச ஆட்டோமொபைல் துறையை தற்போது கொரோனா வைரஸ் வேறு தன் பங்கிற்கு இன்னும் கடுமையாக தாக்கியுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவில்தான் ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

நிலைமை அப்படி இருக்க வாகனங்களை எப்படி வாங்குவது? எனவே சீனாவில் வாகனங்களின் விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் சீனாவில் வாகனங்கள் விற்பனை 90 சதவீதம் சரிவடைந்திருப்பது, ஆட்டோமொபைல் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

வாகனங்களின் விற்பனை சரிவால், உற்பத்தியும் மிக கடுமையாக குறைந்துள்ளது. தற்போது கைவசம் உள்ள சரக்குகளிலோ துரு ஏறி வருகிறது. எனவே வாகன விற்பனையை அதிகரிக்க சீனாவின் பல்வேறு நகரங்களில் பலவிதமான சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வாகனங்களை வாங்கும் சாத்தியமுள்ளவர்களுக்கு பண சலுகை உள்ளிட்டவற்றை பல்வேறு நகரங்கள் வாரி வழங்குகின்றன.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

இதன்படி மூன்று மில்லியன் (30 லட்சம்) மக்கள் தொகையை கொண்ட ஷியாங்டன் (Xiangtan) நகரில், கீலே (Geely) நிறுவனத்தின் காரை வாங்கினால், சுமார் 3,000 யுவான்கள் (429 அமெரிக்க டாலர்கள்) ரொக்கமாக வழங்கப்படுகிறது. கீலே என்பது சீனாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

இந்த வரிசையில், சீனாவின் ஃபோஷன் (Foshan) என்னும் நகரமும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி புதிய கார் வாங்குவது யாராக இருப்பினும் அவர்களுக்கு 2,000 யுவான்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போதுள்ள காரை எக்ஸ்சேஞ்ச் செய்து விட்டு புதிய கார் வாங்குபவர்களுக்கு 3,000 யுவான்கள் கிடைக்கவுள்ளது.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

சீனாவில் ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க இந்த சலுகைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க சீன அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புகள் வருத்தத்தை அளித்தாலும், திரும்பிய பக்கமெல்லாம் இவ்வாறு பண மழை பொழிவதால், கார் வாங்குபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வர தயங்குவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் அவர்களை தொடர்பு கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர ஒரு சில டீலர்கள் டெஸ்ட் டிரைவ் செய்ய விருப்பமுள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே வாகனங்களை கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

இதனால் அவர்கள் ஷோரூம்களுக்கு வர வேண்டிய தேவை இருக்காது. ஆனால் என்னதான் நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, சீனாவின் ஆட்டோமொபைல் துறை தற்போதைக்கு மீளாது என்பதை அத்துறையை சேர்ந்தவர்களே ஒப்பு கொள்கின்றனர். வாகன உதிரிபாகங்கள் சப்ளை என அனைத்துமே சீனாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திரும்பிய பக்கமெல்லாம் பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

இதனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து சீன தேசம் முழுமையாக மீண்டு வந்தால் மட்டுமே, அங்கு ஆட்டோமொபைல் துறையின் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து இந்த உலகம் விரைவாக மீண்டு வர இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Impact: China Offers Incentives To Boost Car Sales. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X