இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக, வாகனங்களில் பிரச்னை ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 வைரஸின் தாயகம் என்று கருதப்படும் சீனா பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தாலும், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் தற்போது நிலைகுலைந்து போயிருக்கின்றன.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் தற்போது மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே மூன்று வார கால ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க இது அவசியமான நடவடிக்கைதான் என்றாலும், பலரின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

குறிப்பாக செல்போன் ஆப் சார்ந்து செயல்படும் கேப் டிரைவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் மட்டும், 3500க்கும் மேற்பட்ட கேப் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் வாழ்வாதாரத்தை கோவிட்-19 வைரஸ் முடக்கி போட்டுள்ளது. கேப் உரிமையாளர்களும், டிரைவர்களும் தற்போது மிக கடினமான நேரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து சிறிய அளவிலான உதவிகள் கிடைப்பது அவர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. இது தொடர்பாக மதுரவாடா பகுதியை சேர்ந்த கேப் டிரைவரான ராஜூ என்பவர் கூறுகையில், '' ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டது முதல் வருமானம் இல்லை. எனது சேமிப்புகளும் கிட்டத்தட்ட தீர்ந்து விட்டன.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

தற்போது தினசரி செலவுகளை சமாளிப்பதே பெரிய காரியமாக உள்ளது'' என்றார். விசாகப்பட்டிணம் கேப் தொழிலாளர்கள் யூனியன் தலைவரான ஜெகன் என்பவர் இது குறித்து கூறுகையில், ''ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கேப் டிரைவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றன.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

ஆனால் உதவி தேவைப்படும் டிரைவர்கள் அதிக அளவில் உள்ளனர்'' என்றார். கேப் டிரைவர்கள் பலர் தினசரி செலவுகளை சமாளிக்கவே முடியாமல் கஷ்டப்பட தொடங்கியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர மற்றொரு பிரச்னையையும் அவர்கள் சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

வாகனங்களை நீண்ட நாட்களுக்கு இயக்காமல் நிறுத்தி வைக்கும்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் கேப் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஆட்டோமொபைல் இன்ஜினியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கூறி வருகின்றனர். இதுகுறித்து ஆட்டோமொபைல் இன்ஜினியர் ஒருவர் கூறுகையில், ''வாகனங்களை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்க கூடாது.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

பெரும்பாலான கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை தற்போது ஓட்டுவதில்லை. இதன் காரணமாக பேட்டரி மற்றும் இன்ஜின் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரின் இன்ஜின் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களாவது ஆன் செய்யப்பட வேண்டும். பேட்டரி வறண்டு போகாமல் இருக்க இது உதவி செய்யும்'' என்றார்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

அதே சமயம் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, முன்னணி கார் நிறுவனங்கள் பலவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இந்த காலகட்டத்தில் வாகனங்களை எப்படி பராமரிப்பது? என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் ஒன்று.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு டிப்ஸ்களை அனுப்பி வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மெசேஜில் இது குறித்து கூறப்பட்டிருப்பது பின்வருமாறு: உங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்து, 15 நிமிடங்களுக்கு இன்ஜினை ஓட விடுங்கள். எஸ்எச்விஎஸ் (SHVS) வாகனங்கள் என்றால், இன்ஜினையும், ஹெட்லைட்டையும் ஆன் செய்து, 30 நிமிடங்கள் ஓட விடவும்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மெசேஜில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மாருதி சுஸுகியை போன்றே மற்ற கார் நிறுவனங்களும் தங்கள் வெப்சைட் மற்றும் ஆப்களில், வாடிக்கையாளர்களுக்கான ஆலோசனைகளை பதிவு செய்து வருகின்றன. இதுகுறித்து கார் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''அவசர சமயத்தில் கார் வேலை செய்யாமல் போய் விடுமோ? என சில சமயங்களில் பயப்படுவேன்.

இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா?

ஊரடங்கு இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? என்பது தெளிவாக தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருப்பதால், ஊரடங்கு முடிவடைந்த பிறகு காரில் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தற்போது கார் நிறுவனங்கள் கூறி வரும் ஆலோசனைகள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றன'' என்றார்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Lockdown Affects Cab Owners And Drivers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X