தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம் செய்த நபரின் நிலைமை, தமிழக மக்களின் கண்களை குளமாக்கியுள்ளது.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட மார்ச் 24ம் தேதியில் இருந்து பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்குகின்றன.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுக்கு பின் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததால், பேருந்து சேவைகளை தமிழக அரசு நிறுத்தி விட்டது. மீண்டும் பேருந்து சேவை எப்போது தொடங்கும்? என்பது உறுதியாக தெரியாத நிலையில், அவசர தேவைகளுக்காக பயணம் செய்ய வேண்டியவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

இதில், ஒரு சிலர் தங்களின் சொந்த கார் மற்றும் பைக் ஆகிய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அதே சமயம் சைக்கிள் மூலமாகவும் பலர் பல கிலோ மீட்டர் தூரத்தை கடக்கின்றனர். இந்த வரிசையில் தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் ஒற்றை காலில் சுமார் 165 கிலோ மீட்டர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் பின்னணி தமிழக மக்களை கலங்க வைத்துள்ளது.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்தான் தற்போது ஒற்றை காலில் இவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டியுள்ளார். கடந்த 1994ம் ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் ராஜா ஒரு காலை இழந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 14தான். தஞ்சாவூரில் இருந்து மதுரையில் உள்ள கோயிலுக்கு நண்பர்களுடன் வேனில் சென்றபோது இந்த விபத்து நடைபெற்றது.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

இந்த விபத்திற்கு இழப்பீடு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை அருகே விபத்து நடைபெற்றதால், மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டது. ஆனால் நீண்ட காலம் ஆன பிறகும் கூட ராஜாவுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. எனவே சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உதவியை ராஜா நாடினார்.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூரில் இருந்து அவர் அவ்வப்போது மதுரைக்கு சென்று வருவது வழக்கம். இப்படிப்பட்ட சூழலில், ராஜாவின் வழக்கறிஞர் வழக்கு தொடர்பான ஆவணம் ஒன்றை சமீபத்தில் கேட்டுள்ளார். ஆனால் தற்போது பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆவணத்தை வழக்கறிஞரிடம் ஒப்படைக்க முடியாமல் ராஜா சிரமப்பட்டு வந்தார்.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

ஆனால் இழப்பீடு பெறுவதற்கான நடைமுறை கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டதால், வழக்கறிஞர் கேட்ட ஆவணத்தை எப்படியாவது அவரிடம் ஒப்படைத்து விடுவது என ராஜா முடிவு செய்தார். இதன்படி பிள்ளையார்பட்டியில் இருந்து மதுரைக்கு அவர் சைக்கிளிலேயே சென்றுள்ளார். அவர் மதுரையை அடைவதற்கு சுமார் 10 மணி நேரம் ஆகியுள்ளது.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

ஒற்றை காலில் ராஜா இவ்வளவு தூரத்திற்கு சைக்கிள் ஓட்டி சென்ற சம்பவம் தமிழக மக்களின் கண்களை குளமாக்கியுள்ளது. இதுகுறித்து ராஜா கூறுகையில், ''ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற்று, அதன்பின்னர் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என நான் நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. அதற்கு பதிலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றை காலில் சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் மக்கள்...

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கும் என்பது தெரியவில்லை. எனவே சைக்கிளை எடுத்து கொண்டு மதுரைக்கு புறப்பட்டு விட்டேன்'' என்றார். தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பேருந்து மீண்டும் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் தமிழக அரசு பேருந்துகளின் இயக்கத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 5, 2020, 17:58 [IST]
English summary
Coronavirus Lockdown: Tamil Nadu Man Cycles From Thanjavur To Madurai To Meet Lawyer. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+