கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

டெஸ்லா நிறுவன இன்ஜினியர்கள் வென்டிலேட்டர் புரோட்டோடைப் குறித்த வீடியோவை யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ், ஒட்டுமொத்த உலகையும் தற்போது ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 வைரஸின் தாயகம் என கருதப்படும் சீனா தற்போது பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவிற்கு வெளியே கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் தற்போது வரை 13,59,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,959 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக உயர்ந்து வருவதால், உலக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் காரணமாக மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

குறிப்பாக வென்டிலேட்டர்கள்தான் அதிகமாக தேவைப்படுகின்றன. எனவே வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி உலக அளவில் பல்வேறு நாடுகளின் அரசுகளும், ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் உதவி கேட்டுள்ளன. இதனை ஏற்று கொண்டு முன்னணி நிறுவனங்கள் பலவும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதில் மும்முரமாக களமிறங்கியுள்ளன.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம் கடந்த மார்ச் 30ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி மிக்சிகனில் உள்ள பிளாண்ட்டில், அடுத்த 100 நாட்களில், 50,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய உள்ளதாக ஃபோர்டு அறிவித்தது. ஜென்ரல் எலெக்ட்ரிக்கின் ஹெல்த்கேர் யூனிட்டுடன் இணைந்து ஃபோர்டு நிறுவனம் இந்த முயற்சியை செய்கிறது.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

அதன்பின்னர் தேவைக்கு ஏற்ப ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்க முடியும் எனவும் ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபோர்டு தவிர உலகின் மற்றொரு முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

இந்த சூழலில், டெஸ்லா நிறுவனத்தின் இன்ஜினியர்கள் யூ-டியூப்பில் வென்டிலேட்டர் புரோட்டோடைப்பை காட்டியுள்ளனர். டெஸ்லா நிறுவன யூ-டியூப் சேனலில், கடந்த ஞாயிற்றுகிழமை மாலை வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில், டெஸ்லா நிறுவன இன்ஜினியர்கள் வென்டிலேட்டர் புரோட்டோடைப்பை காட்டியுள்ளனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வென்டிலேட்டரின் டிசைன், டெஸ்லா கார் பாகங்களையே பெரிதும் நம்பியுள்ளதாக இன்ஜினியர்களில் ஒருவர் கூறியுள்ளார். வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்காக, நியூயார்க் தொழிற்சாலையை மீண்டும் திறக்க டெஸ்லா திட்டமிட்டு வருவதாக, தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறிய இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த வீடியோ வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

ஃபோர்டு, டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களை தவிர ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் இந்தியாவின் மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளில் காலடி எடுத்து வைத்துள்ளன. கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்த பங்களிப்பு பாராட்டுக்குரியது.

கார் பாகங்களை வைத்து அசத்தல்... கொரோனா வைரஸிடம் இருந்து உயிரை காக்கும் கருவி... கடவுள்யா நீங்க!!!

வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்குவதுடன் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நன்கொடைகளையும் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Pandemic: Tesla Engineers Show Ventilator Prototype. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X