தானியங்கி எச்சரிக்கை வசதி, சமிக்ஞை விளக்குகளுடன் கூடிய ஸ்மார்ட் ஹெல்மெட் சாதனம் பற்றிய முழு தகவல்கள்

Written By:

தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய ஹெல்மெட்கள், விபத்து ஏற்படும் சமயங்களில், நமது தலை அடிபடாமல், பாதுகாப்பு வழங்கக்கூடியதாகவே உள்ளது. ஆனால் விபத்து ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் கூடுதல் அம்சங்கள் நிறைந்த ஹெல்மெட்களுக்கான ஸ்மார்ட் தொழில்நுட்ப ஆக்ஸஸரி ஒன்று தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

ஃபிரான்ஸை சேர்ந்த ‘காஸ்மோ கனெக்டட்' என்ற நிறுவனம் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு ஸ்மார்ட் சாதனத்தை தயாரித்துள்ளது. இதனை எந்த ஹெல்மெட்டிலும் பொருத்திக்கொள்ளலாம். இந்த சாதனத்திற்கு காஸ்மோ கனெக்டட் என்ற பெயரையே அந்நிறுவனம் சூட்டியுள்ளது.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

இந்த காஸ்மோ கனெக்டட் ஒரு ஸ்மார்ட் சாதனம் ஆகும். இது ஒரு ஹெல்மெட் ஆக்ஸஸரியாகும். இந்த குட்டி சாதனம் ஆறு வகையான வசதிகளை வாகன ஓட்டிகளுக்கு அளிக்கிறது. இதனை சாதாரண ஹெல்மெட்டுடன் ஒட்டிக்கொள்ளலாம். அதற்காக இரண்டு பக்கமும் ஒட்டிக்கொள்ளும் வகையில் விஷேச பசை அளிக்கப்படுகிறது. இது விபத்து நேர்ந்தால் கூட ஹெல்மெட்டை விட்டு பிரியாத அளவுக்கு அதிசக்தி வாய்ந்த பசை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

காஸ்மோ கனெக்டட் 150 கிராம் எடை கொண்ட ஒரு ஸ்மார்ட் சாதனம் ஆகும். இதில் ஜிபிஎஸ், எல்ஈடி விளக்குகள், ஆக்ஸிலரேஷன் மற்றும் பிரேக் டிடெக்‌ஷன், ஸ்மார்ட்போன் ஆஃப் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனை ஹெல்மெட்டின் பின்புறம் பொருத்திக்கொள்ளலாம்.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

இந்த நீள்வட்டவடிவ சாதனத்தில் சிவப்பு நிறத்திலான 12 எல்ஈடி விளக்குகள் இடம்பெற்றுள்ளது. இதனை கார்/பைக்குகளில் இருக்கும் டேஞ்சர் விளக்குடன் ஒப்பிடலாம். இவை பின்வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை தருவதாக உள்ளது.

மேலும் இந்த விளக்கை அனைந்து அனைந்து எரியும் வகையிலும், எப்போதும் எரியும் வகையிலும் இரண்டு விதமாக செட்டிங் செய்து கொள்ளலாம்.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

இந்த சாதனத்தில் பிரேக் சென்சார்கள் மற்றும் ஆக்ஸலரேட்டர் சென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அப்போது மட்டும் இவை பைக் டேஞ்சர் விளக்கு போல செயல்பட்டு பின்வரும் வாகனங்களுக்கு கூடுதல் பிரகாசத்துடன் எரிந்து எச்சரிக்கை செய்கிறது.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

இந்த சாதனத்தில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. இதன் மூலம் ஓட்டுநர் செல்லும் பாதை குறித்த தகவல்களை நம்முடைய விருப்பமானவர்களுக்கு மட்டும் தெரியப்படுத்தலாம்.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

காஸ்மோ கனெக்டட் சாதனம் மொபைல் ஆஃப்புடன் இணைப்பு வசதி பெற்றுள்ளது, இது ஆபத்துக்காலங்களில் நம்முடைய நிலை குறித்து நம்முடைய விருப்பமானவர்களுக்கு தானியங்கி முறையில் செயல்பட்டு நாம் இருக்கும் இடம் உட்பட ஈ-மெயில் மற்றும் மெசேஜ் வாயிலாக தெரியப்படுத்தும். (அதிகபட்சமாக 3 பேர் வரை).

மேலும் இதில் நம்முடைய ரத்த வகை, அலெர்ஜி, நோய்கள் உள்ளிட்ட மருத்துவ விவரங்கள் பற்றியும் குறித்து வைத்துக்கொள்ளலாம். இது நாம் சுயநினைவு இன்றி இருந்தால் கூட சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

இந்த சாதனம் முழுவதுமாக பாலிகார்பனேட் மற்றும் உயர்தர ரப்பர் கொண்ட வெதர் ஃபுரூப் செய்யப்பட்ட உரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சாதனம் மழை, வெயில், பணி என்று எந்த காலநிலையையும் தாக்குப்பிடிக்கும்.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

இந்த ஸ்மார்ட் சாதனத்தில் 900 எம்ஏஹச் திறன் கொண்ட லி-அயான் ரீசார்ச்சபிள் பேட்டரி உள்ளது. இது இந்த சாதனத்தை 8 மணி நேரங்கள் இயங்க சக்தி அளிக்கிறது. ஆயினும் எச்சரிக்கை விளக்கை அனைந்து அனைந்து எரியும் வகையில் உபயோகப்படுத்தும் போது பேட்டரி திறன் 3 மணிநேரங்களாக குறைந்துவிடும்.

சாதாரண ஹெல்மெட்டை ஸ்மார்ட் ஹெல்மெட் ஆக மாற்றும் சாதனம்..!

காஸ்மோ கனெக்டட் சாதனம், ஒரு வெள்ளை மற்றும் 3 கருப்பு (Shiny, Satin, Matte) வண்ணங்கள் என மொத்தம் நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

3 விதமான ரகங்களில் இந்த காஸ்மோ கனெக்டட் ஸ்மார்ட் சாதனம் கிடைக்கிறது . இதன் விலை முறையே 129, 162 மற்றும் 270 அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.8000 முதல் ரூ.17,000 வரை ஆகும்.

English summary
Read in Tamil about Cosmo connected a smart accesory for helmet with safety features, gps, emergency lights and more
Story first published: Thursday, May 18, 2017, 12:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark