இந்த நாட்டுல இனி பணக்காரங்களே கார் வாங்க யோசிப்பாங்க! கார் வாங்குவதற்கு உரிமம் வாங்கவே ரூ60 லட்சம் கட்டணுமாம்
சிங்கப்பூரில் கார் வாங்குவதற்கான உரிமையை பெறும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்நாட்டில் இனி ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கான உரிமம் பெற ரூபாய் 60 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் என புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால் எந்தவித யோசனையும் செய்ய வேண்டியதில்லை. நேராக கார் ஷோரூம் இருக்கு சென்று அங்கு அவர்களுக்கு பிடித்த காரை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி, அரசுக்கும் வரியை செலுத்தி விட்டு காரை தாராளமாக சாலையில் ஒட்டி செல்லலாம். காரை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் மட்டும் இருந்தால் போதும்.

ஆனால் சிங்கப்பூர் அப்படி அல்ல அந்நாட்டில் கார் வாங்க வேண்டும் என்றால் அதற்கான உரிமை சான்று ஒன்றை வாங்க வேண்டும். அந்த உரிமை சான்று வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே சிங்கப்பூரில் காரை பயன்படுத்த அனுமதி இருக்கிறது. சிங்கப்பூர் நிலப்பரப்பில் சிறிய நாடு என்பதால் அங்கு அதிகமாக போக்குவரத்தை அனுமதித்தால் அந்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையும் குழப்பமும் ஏற்படும்.
இதனால் அந்நாட்டு அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே சிங்கப்பூர் சாலையில் இயங்க வேண்டும் என்பதற்காக இப்படியான ஒரு விதிமுறையை கடந்த 1990 ஆம் ஆண்டு கொண்டு வந்துவிட்டது. இதன்படி அந்நாட்டு அரசு வழங்கும் என்டைட்டில்மெண்ட் சான்றிதழ் என்ற ஒரு சான்று பெற்றால் மட்டுமே அவர் கார் வாங்கவும் அதை சாலையில் பயன்படுத்தவும் உரிமை உள்ளது.

இந்த என்டைட்டில்மெண்ட் சான்று என்பது பத்து ஆண்டுகள் நிலைக்கத்தக்கது. அதாவது இந்த சான்று வாங்கப்பட்ட அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த சான்று செல்லத்தக்கதாக இருக்கும் அதன் பின்பு மீண்டும் புதிய சான்று எடுத்தால் மட்டுமே வாகனங்களை சாலையில் பயன்படுத்த முடியும். இந்த சான்று இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிகபட்சமாக 1.6 லிட்டர் அல்லது 130 எச்பி திறன் கொண்ட இன்ஜினிற்கு கீழான பவர் கொண்ட கார்கள் ஒரு கேட்டகிரியிலும் 1.6 லிட்டர் அல்லது 130 எச்பி பவருக்கு அதிகமான திறன் கொண்ட கார்கள் என இரண்டாவது விதமாக இது பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என சிங்கப்பூர் அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் சாலையில் ஓடும் கார்களை கட்டுப்படுத்த முடியும் இதனால் டிராபிக் இல்லாத சாலைகள் அந்நாட்டில் இருக்கும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.
தற்போது இந்த சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. தற்போது இந்த சான்றிதழை பெற வேண்டும் என்றால் குறைந்தபட்ச பவர் கொண்ட 1.6 லிட்டருக்கும் குறைவாக அல்லது 130 எச்பி இன்ஜின் திறனுக்கு குறைவாக உள்ள கார்கள்ு
இதை இயக்குவதற்கான சான்றிதழ் இந்திய மதிப்பில் ரூபாய் 60 லட்சம் (1.04 லட்சம் சிங்கப்பூர் டாலர்) என்ற விலையிலும் 1.6 லிட்டர் அல்லது 130 எச்பி திறனுக்கு அதிகமான திறன் கொண்ட கார்களை இயக்குவதற்கான சான்றிதழ் ரூபாய் 88 லட்சம் (1.46 லட்சம் சிங்கப்பூர் டாலர்) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் சராசரியாக ஒவ்வொரு தனிமனிதனின் வருமானம் இந்திய மதிப்பில் ரூ42 லட்சம் (70ஆயிரம் சிங்கப்பூர் டாலர்). அதாவது ஒரு மனிதனின் சராசரி ஆண்டு வருமானத்தை விட அதிகமான தொகை கட்டினால் தான் அவனால் அந்நாட்டில் கார் ஓட்டுவதற்கான உரிமையே பெற முடியும். இந்த உரிமையை பெற்றால் தான் அதன் பின்னர் அவர் காரை காசு கொடுத்து வாங்க வேண்டும். அதற்கான பெட்ரோல் செலவு எல்லாம் தனித்தனியாக செலுத்தப்பட வேண்டும்.
சிங்கப்பூர் அரசு அந்நாட்டு மக்களை பொது போக்குவரத்தை பயன்படுத்தவே அதிகமாக ஊக்குவிக்கிறது. குறிப்பாக அந்நாட்டில் பிரபலமாக உள்ள எம்ஆர்டி எனப்படும் மாஸ் ராபிட் டிரான்ஸ்போர்ட் ரக மெட்ரோ ரயில்களை பயன்படுத்த அதிகமாக ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் குறையாமல் இருக்கும் அதே நேரம் சாலையில் மக்களுக்கு நெருக்கடி ஏற்படாமல் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிங்கப்பூர் போன்ற சிறிய நிலபரப்பு கொண்ட நாடுகளில் போக்குவரத்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய அவசியமாகிறது. அதிக எண்ணிக்கையிலான கட்டுப்பாடு அற்ற வாகனங்கள் சாலையில் பயணித்தால் அதிக பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தான் இந்த சான்று முறையை சிங்கப்பூர் அரசு பின்பற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications









