உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

நீங்கள் காரில் செல்லும் போது காரில் இருந்து ஆங்காங்கே சின்ன சின்ன சத்தங்கள் வரும் அதை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள் காரில் அடிக்கடி பழுது ஏற்படுவதற்கு அந்த சத்தங்கள் தான் முக்கிய காரணம்

நீங்கள் காரில் செல்லும் போது காரில் இருந்து ஆங்காங்கே சின்ன சின்ன சத்தங்கள் வரும் அதை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள் ஆனால் உங்கள் காரில் அடிக்கடி பழுது ஏற்படுவதற்கு அந்த சத்தங்கள் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கும்

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

காரில் சிறிய அளவு பழுது ஏற்படும் போது இவ்வாறான சத்தங்கள் உண்டாகும் அப்போதே அதை கவனித்து பழுதை நீக்கி விட வேண்டும். இல்லை என்றால் அது காரில் ஏதேனும் ஒரு பாகத்தை சேதப்படுத்தி நமக்கு பெரும் செலவை ஏற்படுத்திவிடும்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

கார் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சத்தங்கள்:

1.ஸ்டியரிங் சத்தம்

உங்கள் காரை ஊசி வளைவுகளில் திருப்பும் போது காரின் ஸ்டியரிங் பகுதியில் இருந்து ஒரு வித சத்தம் வந்தால் அதற்கு காரணம் காரின் ஸ்டியரங் பகுதியில் மசகு தன்மை குறைவாக இருக்கும் அல்லது ஏதேனும் பாகத்தில் சேதம் இருக்கும். இது உடனடியாக பார்ப்பது நல்லது. அல்லது கார் செல்லும் போது ஸ்டியரிங்கை திருப்ப முடியாத நிலை ஏற்பட்டு விபத்தும் நேரிடலாம்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

2.பிரேக்கிங் சத்தம்

காரில் பிரேக் பிடிக்கும் போது சில சத்தங்கள் ஏற்படும். அதற்கு காரின் பிரேக் கேளிபரில் பழுது அல்லது மற்ற பாகங்களில் உள்ள பழுதாக இருக்கலாம். இதில் மிக கவனம் தேவை, இந்த சத்தம் வந்தால் உடனடியாக பரிசோதித்துவிடவும்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

3. பேன், பெல்ட் சத்தம்

நீங்கள் கார் ஒட்டும் போது பறவையின் சிறகு அடிப்பது போன்ற சத்தம் வந்தால் இன்ஜின் உள்ள பேன் அல்லது பெல்டில் இருந்து அந்த சத்தம் வரலாம். பேன் சுற்றும் போதும் மற்ற பொருட்கள் அதை தடுத்தாலோ அல்லது பெல்ட் அறுந்து போனாலோ இவ்வாறான சத்தங்கள் ஏற்படலாம். அந்த சத்தம் ஏற்பட்டால் உடனடியாக காரை நிறுத்தி பிரச்னையை கவனிப்பது நல்லது.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

4. கியர் மாற்றும் போது ஏற்படும் சத்தம்

நீங்கள் கியர் மாற்றும் போது மாற்ற முடியாமல் திணறல் ஏற்படும் ஒரு வித சத்தம் கிளம்பும் அவ்வாறான பிரச்னைக்கு கிளட்ச் காரணமாக இருக்கலாம். அதில் சிறு அட்ஜெட்ஸ்ட்மெண்ட் செய்ய வேண்டியது இருக்கும். அதை முடிந்த அளவு சீக்கிரம் செய்ய வேண்டும்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

5. இன்ஜின் சத்தம்

காரின் இன்ஜினில் இருந்து கிளம்பும் சத்ததிற்கு பெரும்பாலும் காரில் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் தரமே காரணமாக இருக்காலம். குறைந்த தரத்திலான பெட்ரோல் அதிக அளவு சத்தத்தை ஏற்படுத்தும். கார் நிறுவனம் பரிந்துரைக்கும் பெட்ரோலையும், கார் டயரில் அவர்கள் பரிந்துரைக்கும் ஏர் பிரசரையும் சரியாக பராமிப்பது முக்கியம் அதை நீங்களாக கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

6. பெரும் சத்தம்

உங்கள் காரில் இருந்து வழக்கத்தை விட சத்தம் அதிகமாகவோ அல்லது பெரும் சத்தமாவோ வரும் பட்சத்தில் அது காரில் பெட்ரோல் மற்றும் காற்று கலவை அதிகமாக இருக்கும். காரில் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் இப்பிரச்னை ஏற்படலாம்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

7. காருக்கு அடியில் ஏற்படும் சத்தம்

காருக்கு அடியில் பல்வேறு காரணங்களுக்காக சத்தம் ஏற்படலாம். மெக்கானிக்கல் பாகங்களில் சரியான பசகுத்தன்மையின்மை, ஏதேனும் நட்டுகள் கழண்டு இருத்தல், கியர் மாற்றும் போது ஏற்படும் பிரச்னைகள், காரை தேவைக்கு அதிகமாக ரேஸ் செய்தல் உள்ளிட்டவற்றால் இந்த சத்தங்கள் ஏற்படலாம். அந்த சத்ததிற்கான காரணத்தை நாம் அறியமுடியாது அதற்கான மெக்கானிக்கிடம் சென்றால் மட்டுமே பிரச்னை சரியாகும்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

8. இன்ஜின் திணறும் சத்தம்

பொதுவாக இன்ஜின்கள் இக்னிஷியனில் ஏற்படும் பிரச்னை, பில்டர்களில் ஏற்படும் பிரச்னை, ஸ்பார்க் பிளக்கில் அதிக அளவு தூசி இருத்தல் அல்லது பழுது இருத்தல், உங்கள் காருக்கு பெருந்தாத கேட்டலிடிக் கன்வெர்டரை பொருத்தியிருத்தல் ஆகிய காரணங்களால் இன்ஜின் திணறும் சத்தங்கள் ஏற்படலாம்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

9. காரின் பின் பகுதியில் ஏற்படும் சத்தம்

காரின் புகை வெளியேற்றும் கருவியில் பழுது, ஓட்டை, அடைப்புகள் இருந்தால் காரின் பின் பகுதியில் இருந்து சத்தம் ஏற்படும். கார் வீலில் உள்ள பிரேக் பேடுகள் பழுது காரணமா கார் வீலை உரசினால் காரின் பின் பகுதியில் இருந்து சத்தம் ஏற்படும்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

10. காரின் ரேஸ் அதிகரிக்கும் போது ஏற்படும் சத்தம்

நீங்கள் காரின் ரேஸை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றார் போல் ஏதேனும் சத்தம் அதிகமானால் அதற்கு முதலில் காரின் புகை வெளியிடும் கருவியை செக் செய்யுங்கள் அது தான் பிரதான காரணமாக இருக்கும். சில நேரங்களில் காரில் கியர் மாற்றும் போது ஏற்படும் பிரச்னையிலும் ஏற்படலாம். அந்த நேரங்களில் காரின் கியரை அதிகப்படுத்தி காரை இயக்க வேண்டும். அது ஆட்டோ கியர் காராக இருந்தால் உடனடியாக மெனுவல் மோடுக்கு மாற்றி இயக்குவது நல்லது. சில நேரங்களில் கிளட்ச்சில் உள்ள பழுது காரணமாக கூட இந்த சத்தம் வரலாம்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

11. பெல்ட் சத்தம்

காரை ரேஸ் செய்யும் போது பெல்ட் கழண்டது போன்ற சத்திற்கு காரணம் டிரைவ் புள்ளியில் உள்ள பெல்ட் லூசாக இருக்கலாம் அல்லது வாட்டர் பம்ப் சரியாக பொருத்தப்படாமல் இருக்கலாம். உடனடியாக சரிபார்க்க வேண்டிய பிரச்னை இது.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

12. பிரேக் பிடிக்கும் போது வீல் சுற்றுதல்

உங்கள் பிரேக் பேடில் பழுது அல்லது தேய்மானம் இருந்தால் இந்த பிரச்னை ஏற்படும். இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்யாவிட்டால் அது அடுத்தடுத்த பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்னை ஏற்பட்டால் அது பிரேக் பேடை மாற்ற வேண்டிய தருணம்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

13. பிரேக் பிடிக்கும் போது வீல் தேய்த்தல்

பல்வேறு காரணங்களுக்காக இப்பிரச்னை ஏற்படலாம். பிரேக் ரோட்டரில ஏற்பட்ட கோளாறு காரணமாக இப்பிரச்னை ஏற்படலாம். பிரேக் பேடு சரியாக பொருத்தாமல் இருத்தல், போன்ற காரணங்களால் ஏற்படலாம். இப்பிரச்னையை உடனடியாக தீர்ப்பது சிறந்தது. இது காரின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்.

உங்கள் காரிலிருந்து இந்த சத்தங்கள் வந்தால் உடனடியாக கவனியுங்கள்

14. இன்ஜினில் தட்டும் சத்தம்

இந்தவகையாக சத்தங்கள் பெரும்பாலும், இன்ஜின் ஆயில் பிரச்னையால் ஏற்படும், இன்ஜினில் ஆயில் அளவு குறைவாக இருத்தல் அல்லது ஆயிலில் பிரஸர் குறைவாக இருத்தல், அடைப்பு ஏற்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பிரச்னைகள் ஏற்படலாம். ஆயில் பிரச்னை காரணம் இல்லையேனில் வால்வுகளில் பிரச்சனை ஏற்படலாம் இது சரியான நேரத்தில் அடைத்து திறப்பதில் கோளாறு இருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
costly car noises : Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X