ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம்! போட்டோ காப்பியை காட்ட முடியாது இப்படி ஒரு ரூல்ஸா?

ரயில்களில் டிக்கெட் கவுண்டரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஒரிஜினல் டிக்கெட் உடன் தான் பயணிக்க வேண்டும் ஏன் தெரியுமா? முழுவிவரங்களைக் காணலாம் வாருங்கள்.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

இன்று நாம் டிஜிட்டல் யுகத்திற்கான பரிமாற்றத்தில் இருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு கையில் பணம் இல்லை என்றால் பெரிய பிரச்சனை இன்று அப்படி அல்ல சிறு சிறு பெட்டிக் கடைகள் முதல் பெரிய பெரிய கடைகள் வரை டிஜிட்டல்பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டனர்.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

இன்று ஹோட்டலில் டேபிள் முதல் பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட அத்தனை டிக்கெட்களையும் ஆன்லைனில் புக் செய்யும் வசதி வந்துவிட்டது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் இப்படியாக நீங்கள் ரயிலுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய முடியும் அதற்காக IRCTC தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

இந்த தளத்தில் நீங்கள் டிக்கெட் புக் செய்துவிட்டால் போதும் நீங்கள் பயணிக்கும் போது நீங்கள் புக் செய்த டிக்கெட்டை பிரிண்ட் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது கூட கிடையாது. இந்த டிக்கெட்டின் சாஃப்ட் காப்பி அல்லது ஐஆர்சிடிசியிலிருந்து வந்து மெசேஜையே நீங்கள் டிக்கெட்டாக கருதிக்கொள்ள முடியும்.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

ஆனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப்ஷன் வருவதற்கு முன்பு ரயில்களில் டிக்கெட் புக் செய்ய இருக்கும் ஒரே வழி நேரடியாக ரயில்வே ஸ்டேஷனிற்கு சென்று அங்குள்ள டிக்கெட் கவுண்டரில் பணம்கொடுத்து டிக்கெட் புக் செய்யலாம். இப்படியாக டிக்கெட் புக் செய்யும்போது அதற்கான டிக்கெட் ஒன்று அச்சடித்துக் கொடுக்கப்படும்.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்கள். டிக்கெட்டின் சாஃப்ட் காப்பியை காண்பித்து பயணிக்க முடிகிறது. அதே போல இப்படியாக தற்போதும் கவுண்டருக்கு சென்று டிக்கெட் புக் செய்பவர்கள் அதற்கான டிக்கெட் இல்லாமலோ அல்லது சாஃப்ட் காப்பியுடனோ பயணிக்க முடியுமா? இந்தச் சந்தேகம் பல பயணிகளுக்கு இருக்கிறது. இதைத் தீர்த்து வைக்க தான் இந்தப் பதிவு செய்துள்ளோம்.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

ரயில்வே விதியின் படி டிக்கெட் கவுண்டரில் புக் செய்யப்படும் டிக்கெட்டில் பயணிப்பவர்கள் தங்கள் பயணத்தின் போது கட்டாயம் ரயில்வே கவுண்டரில் வழங்கப்பட்ட ஒரிஜினல் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர் என டிக்கெட் பரிசோதகர்களால் அபராதம் விதிக்கப்படுவர். கவுண்டரில் எடுத்த டிக்கெட்டின் புகைப்படம் அல்லது சாஃப்ட் காப்பியும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

இப்பொழுது பலருக்கு சந்தேகம் இருக்கும் ஏன் ஆன்லைனில் டிக்கெட் எடுத்தவர்களுக்கு டிக்கெட்டை டிஜிட்டலாக காண்பித்தால் போதும் ஆஃப்லைனில் அதாவது நேரடியாக டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் கட்டாயம் ஒரிஜினல் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் எனத் தோன்றலாம். அதற்குப் பின்னாம் ஒரு காரணம் இருக்கிறது.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

பொதுவாக ஆன்லைனில் டிக்கெட் எடுத்தவர்களுக்கு அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய ரயில் கிளம்புவதற்கு முன் சார்ட்டிங் போடப்படும் வரை தான் நேரம் இருக்கிறது. சார்ட்டின் முடிந்துவிட்டால் அந்த நபரால் குறிப்பிட்ட டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது. ஆனால் கவுண்டரில் எடுக்கப்படும் டிக்கெட்டிகள் அப்படி அல்ல

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

கவுண்டரில் புக் செய்த டிக்கெட்களை நீங்கள் ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் ரயில் கிளம்பி 4 மணி நேரம் வரைக்கும் இந்த டிக்கெட்டை கவுண்டரில் கொடுத்து கேன்சல் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்வதால் குறிப்பிட்ட அளவு பணம் ரிட்டர்ன் வரும். அதன் காரணமாக தான் கவுண்டரில் எடுக்கப்படும் டிக்கெட்களின் ஒரிஜினல் கேட்கப்படுகிறது.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

அதன் போட்டோ காப்பி மூலம் ஒருவர் பயணம் செய்துவிட்டு அதே டிக்கெட்டின் ஓரிஜினலை வைத்து ரிஃபண்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அதைத் தவிர்க்க இந்த முறை பின்பற்றப்படுகிறது. இப்படியாக டிக்கெட் கவுண்டர்களில் எடுக்கும் டிக்கெட்டிற்கு மட்டும் ஏன் ரயில் கிளம்பிய பின்பும் ரிஃபண்ட் வழங்கப்படுகிறது என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

இப்படியான டிக்கெட் எடுத்தவர்கள் ரயிலில் பயணம் செய்யவில்லை என்றால் அந்த டிக்கெட்கள் வெயிட்டிங் லிஸ்ட் அல்லது ஆர்ஏசியில் பயணம் செய்பவர்களுக்கு மாற்றி வழங்கப்படும். இப்படியாக மாற்றி வழங்குவதற்காக இந்த முறையை ஐஆர்சிடிசி பின்பற்றுகிறது. ஒருவேளை ஒரிஜினல் டிக்கெட் இல்லாமல் ஒருவர் பயணம் செய்தால்

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

அவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவராக கருதப்படுவார்கள். அவர் அந்த டிக்கெட்டில் மீண்டும் பயணம் செய்ய வேண்டும் என்றால் டிடிஆரிடம் அந்த டிக்கெட்டிற்கான முழுப் பணத்தை அபராதமாகவும், அதற்கு ஜிஎஸ்டியையும் சேர்த்துக் கட்ட வேண்டும் அப்படிக் கட்டினால் மட்டுமே அவரால் மீண்டும் அதில் பயணம் செய்ய முடியும்.

ரயில்களில் இவங்களுக்கு எல்லாம் ஒரிஜினல் டிக்கெட் கட்டாயம் . . . போட்டோ காப்பியைக் காட்ட முடியாது . . . இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா . . .

இதனால் அடுத்த முறை நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட்டை கவுண்டரில் எடுத்திருந்தால் கட்டாயம் அதன் ஒரிஜினல் டிக்கெட்டோடு பயணம் செய்யுங்கள் அதை மறந்துவிட்டால் தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்

Article Published On: Friday, September 9, 2022, 17:45 [IST]
English summary
Counter booked original tickets are compulsary on travel know why
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+