கவுண்டர்ல எடுத்த ரயில் டிக்கெட்டுக்கு பதிலா ஃபோட்டோவா செல்போன்ல காமிச்சா டிடிஆர் ஏத்துப்பாங்களா?..
ரயில் நிலைய கவுண்டரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக அதை செல்போனில் படம் பிடித்து வைத்து பயணத்தின் காண்பிக்கலாமா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த சந்தேகத்திற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டிரெயினில் பயணிப்பதை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குறைவான டிராவல் டைமிங், குறைவான கட்டணம், டைமுக்கு உரிய இடத்திற்கு சென்று சேர முடியும் என்கிற காரணங்களுக்காகவே இந்தியர்கள் அதிகளவில் ரயிலைப் பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமில்லைங்க, கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது ரயில் பயணம் மேற்கொள்வது மிகவும் சுலபமானதாக மாறியுள்ளது. முன்பெல்லாம் ரயிலுக்கான டிக்கெட்டை புக் செய்ய வேண்டும் என்றால் டிக்கெட் கவுண்டர்களுக்கு நேரடியாக சென்றே முன் பதிவை செய்ய வேண்டும்.

ஆனால், இந்த செயல் தற்போது முழுமையாக மாறியுள்ளது. ஆன்லைன் வாயிலாகவும் டிக்கெட்டை புக் செய்து கொள்ள முடியும். இதற்கான வசதியை இந்தியன் ரயில்வேஸ் உருவாக்கிக் கொடுத்துள்ளது. புக் செய்வது மட்டுமல்லாமல் பயணத்தை ஆன்லைன் வாயிலாகவே ரத்து செய்து கொள்ளவும் முடியும். இதற்காக பிரத்தேயகமாக ஐஆர்சிடிசி எனும் தளத்தை இந்தியன் ரயில்வேஸ் உருவாக்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, செல்போன்களுக்கான செயலியும் பயன்பாட்டில் உள்ளது. ஐ-போன், ஆண்ட்ராய்டு என இரண்டிற்குமான செயலிகள் அந்தந்த ஸ்டோர்களில் உள்ளன.
இந்த செயலிகள் வாயிலாகவும் ரயிலுக்கான டிக்கெட்டை புக் செய்யுதல், ரத்து செய்யுதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இதன் வாயிலாக கவுண்டர்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என்ற நிலை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கவுண்டர்களில் நீண்ட நெடிய வரிசையில் காத்திருக்க வேண்டும் என்ற நிலை முற்றிலுமாக போக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்-லைன் சேவை தொடங்குவதற்கு முன்பு, கவுண்டர்களுக்கு அதிகாலையே மக்கள் விரைய வேண்டும் என்ற நிலை இருந்தது.

கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கவுண்டர்கள் திறக்கும் முன்னரே அங்கு சென்று டிக்கெட்டை புக் செய்ய காத்திருப்பர். இந்த நிலையே முற்றிலுமாக ஆன்-லைன் சேவை மூலம் களையெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியர்கள் சிலர் இப்போதும் கவுண்டர்களுக்கு சென்று டிக்கெட்டை முன் பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். இந்த மாதிரியானோர் தங்களது டிக்கெட்டை பயணத்தின்போது அவசியம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, அந்த ஒரிஜினல் டிக்கெட் கையில் இருத்தல் வேண்டும்.
ஆனால், ஆன்லைன் வாயிலாக எடுக்கப்படும் டிக்கெட்டை இவ்வாறு கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டிஜிட்டல் டிக்கெட்டாக காண்பித்தாலே போதும். எத்தனை நாட்கள் ஆகினாலும் டிஜிட்டல் டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி தளத்தில் அப்படியே இருக்கும். ஆனால், கவுண்டரில் பெறப்படும் டிக்கெட்டை நாமே பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது சிலருக்கு சிரமமான ஒன்றாக இருக்கலாம். குறிப்பாக, பொருட்களை அடிக்கடி தொலைக்கும் நபர்கள், வழக்கம்போல் டிக்கெட்டையும் தொலைக்க நேரிடலாம்.
இந்த மாதிரி நபர் செல்போனில் டிக்கெட்டை ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டு அதை பயணத்தின்போது காண்பித்து பயணிக்கலாம் என புதிய விதிகள் கூறுகின்றன. ஆனால், டிக்கெட் தன்னுடைய பெயரில்தான் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்கான ஆதாரங்கள் கட்டாயமாக காண்பித்தாக வேண்டும். இதை தவறும்பட்சத்தில் பயணம் மேற்கொள்வது சற்று சிக்கலே. ஒரிஜினில் டிக்கெட் கையில் இல்லை என்றால் டிக்கெட்டிற்கான முழு கட்டணத்தையும் அந்த பயணி செலுத்த வேண்டும் கூறப்படுகின்றது.
மேலும், டிக்கெட்டை தொலைத்ததற்கான அபராதமும் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இவற்றிற்கான ஜிஎஸ்டியும் தனியாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், டிக்கெட்டை தொலைக்காமல் அதை பத்திரமாக வைத்திருத்தல் வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. இல்லை என்றால் தேவையில்லாத இந்த கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். அதேவேலையில், தொலைந்து போன டிக்கெட்டை டூப்ளிகேட் பெறும் வசதியை ஐஆர்சிடிசி வழங்குகின்றது. இதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
கவுண்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டை அதை எடுத்த அரை மணி நேரத்தில் இருந்தே கேன்சல் செய்து கொள்ள முடியும். ஐஆர்சிடிசி தளத்தில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளை பயணிகளின் சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் ரத்து செய்ய முடியாது. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரங்களுக்கு முன்னதாகவே கேன்சலேசனை செய்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே கணிசமான தொகையை நம்மால் திரும்ப பெற முடியும். இதற்கு பின்னால் செய்யப்படும் கேன்சலேஷனுக்கு கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது. ஆன்லைனில் புக் செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு நகலை கையில் வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேலும், செல்போனுக்கு வரும் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தியைக் காண்பித்தாலே டிடிஆர்கள் சிலர் நம்மை பயணிக்க அனுமதிப்பர்.


Click it and Unblock the Notifications








