ஒத்த விமான நிலையம்கூட இல்லாத நாடுகள்?.. இத்தன இருக்கா?.. கைலாசத்தை இதுல சேர்க்கலையே!

விமானத்தில் பயணிக்காதவர்களை பார்ப்பதே அரிதானதாக கருதப்படும் இன்றைய காலகட்டத்தில் விமான நிலையங்கள் இல்லாத நாடுகள் இந்த உலகில் இருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. அந்தவகையில் எந்தெந்த நாடுகள் விமான நிலையங்கள் இல்லாமல் இருக்கின்றன என்பது பற்றிய சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலக நாடுகள் முன்னெடுத்து வரும் முயற்சியின் காரணமாக விமான போக்குவரத்து முன்பைக் காட்டிலும் தற்போது மிக எளிமையான ஒன்றாக மாறி இருக்கின்றது. இதன் காரணமாக ஒரு சிலர் பொது பேருந்துகளில் போயிட்டு வருவதைப்போல் விமானத்தில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர். மேலும், கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது விமானத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து உள்ளது.

Countries with no airport

இந்த மாதிரியான சூழலில் குறிப்பிட்ட சில நாடுகளில் இன்றைய கால கட்டத்திலும் விமான நிலையம் இல்லாமல் இருப்பது பெருத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. அத்தகைய நாடுகள் சிலவற்றையே இந்த பதிவில் பட்டியலிட்டுக் காண்பித்திருக்கின்றோம். வாருங்கள் அவை எந்தெந்த நாடுகள் என பார்த்துவிடலாம்.

வத்திக்கான் நகரம்: உலகின் மிக சிறிய நாடு இது ஆகும். மேலும், ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகையையே இந்த நாடு கொண்டிருக்கின்றது. போதிய இட வசதி இல்லாததன் காரணத்தினால் இந்த நாட்டில் விமானம் நிலையம். அதேவேளையில், இதன் அண்டை நாடுகள் வத்திகான் நகருக்குள் நுழைவதற்கான போக்குவரத்து சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

Vatican city

ஆகையால், வத்திக்கான் செல்ல விரும்புவோர் அதன் அண்டை நாடுகளில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்தி அந்நாட்டுக்கு செல்கின்றனர். குறிப்பாக சியம்பினோ மற்றும் ஃபியூம்சினோ ஆகிய நாடுகளின் வாயிலாக அவர்கள் வத்திகானுக்கு சென்று வருகின்றனர். இங்கிருந்து ஓர் ரயிலை பிடித்தால் வெறும் 30 நிமிடங்களில் வத்திகானுக்கு சென்று விட முடியும்.

மேலும், சர்வதேச பயணிகள் இத்தாலியின் ரோமில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தி வத்திக்கான் செல்லலாம். இதுதவிர வேறு சில போக்குவரத்து சேவைகளும் அண்டை நாடுகளில் இருந்து வத்திக்கானுக்கு இயக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே வத்திகானுக்கு தனி விமான நிலையம் தேவைப்படாது என்கிற சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

Monaco

மொனாக்கோ: உலகின் இரண்டாவது மிக சிறிய நகரம் இது ஆகும். ஃபிரான்ஸ் நாட்டுடன் இது தன்னுடைய எல்லைப் பகுதிகளை பகிர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவை மூன்று பக்கமும் கடல் பரப்பு சூழ்ந்திருப்பதை போல இந்த நாட்டின் மூன்று பக்கமும் ஃபிரான்ஸின் எல்லை பகுதி சூழ்ந்திருக்கும்.

எனவே மொனாக்கோ நாட்டிற்கு செல்ல விரும்புவர்கள் ஃபிரான்ஸ் நாடுகளில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்தி அந்நாட்டிற்குச் செல்லலாம். இந்த நாட்டிற்கு என தனி எந்தவொரு விமான நிலையமும் இல்லை. ஏனெனில், இதன் சிறிய நிலப்பரப்பு தனி விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. மொனாக்கோவிற்கு செல்ல விரும்புபவர்கள் டாக்சி அல்லது படகு வாயிலாக ஃபிரான்ஸிந் நைஸ் கோட் டிஅசூர் விமான நிலையத்தில் இருந்து செல்ல முடியும்.

San marino

சேன் மரினோ: உலகின் மிகவும் பழைமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். முற்றிலும் இத்தாலியால் இந்நாடு சூழப்பட்டு இருக்கும். ஆகையால், இந்த நாட்டை கடல் மார்க்கமாக நாட முடியாது. மேலும், மிக மிக குட்டியான நாடு இது என்பதால் விமானம் நிலையமும் இல்லை.

ஆகையால், ஒரே வழியாக இத்தாலிக்கு சென்று அங்கிருந்தே சேன் மரினோவிற்கு செல்ல வேண்டும் என்கிற நிலை உள்ளது. இத்தாலியின் எந்த விமானத்திற்கு சென்றாலும் அங்கிருந்து சேன் மரினோவிற்கு போய்விட முடியும். சாலை கட்டமைப்பை மிகவும் வலுவானதாக சேன் மரினோ உருவாக்கி இருக்கின்றது.

Liechtenstein

லிச்சென்ஸ்டீன்: அதிக மலைகளைக் கொண்ட நாடு இதுவாகும். இந்த நிலையும், மிக சிறிய நிலப்பரப்பைக் கொண்டிருப்பதுமே இந்த நாட்டில் விமானம் நிலையம் இல்லாததற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒட்டுமொத்தமாகவே இந்த நாடு 75 கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டிருக்கின்றது. அதேவேளையில், இந்த நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது.

இருப்பினும், விமானம் நிலையம் ஒன்றைக்கூட அது கொண்டிருக்கவில்லை. ஆகையால், அண்டை நாடுகள் வாயிலாகவே இந்த நாட்டிற்கு செல்ல முடியும் என்கிற சூழல் உள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியே லிச்சென்ஸ்டீனுக்கு மிக நெருக்கமான நாடுகளாக உள்ளன. இங்கு வரை மட்டுமே விமானம் வாயிலாக செல்ல முடியும். இதன் பின்னர் தரை மார்க்கமாக லிச்சென்ஸ்டீனை சென்றடையலாம்.

Andorra

அன்டோரா: நாம் பார்க்க இருக்கும் கடைசி விமான நிலையாத நாடே இது ஆகும். இது மற்ற நாடுகளைப் போல மிக சிறிய நாடு அல்ல. இருப்பினும் இதில் விமான நிலையம் இல்லை. இதற்கு அந்த நாட்டின் நிலப்பரப்பே முக்கிய காரணமாக உள்ளது.

மிக மிக உயரமான மலைகள் இந்த நாட்டை விமான நிலையம் அமைக்க தகுதியற்ற நாடாக மாற்றி இருக்கின்றது. 3000 மீட்டர் உயரமான மலைக் குன்றுகள் நாடை ஆக்கிரமித்த வண்ணம் இருக்கின்றன. ஆகையால், இந்த நாடு ஃபிரான்ஸ் மர்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விமான நிலையங்கள் இல்லாத நாடுகள் அண்டை நாடுகளுடன் நட்புறவைக் கொண்டிருக்கின்ற வரையில் மட்டுமே அவற்றின் விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் எனில் உலக நாடுகளுடனான தொடர்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட நேரிடும். இதேபோல், சர்வதேச விமான நிலையங்கள் இல்லாத நாடுகளும் இந்த உலகில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 14, 2023, 9:03 [IST]
English summary
Countries that does not have single airports
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X