போலீஸ் ஜீப்பில் இளம் காதல் ஜோடி செய்த காரியத்தால் அதிர்ச்சி! போதைல என்ன பண்றோம்னே தெரியாம எல்லை மீறிட்டாங்க!
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், மது அருந்தும் பழக்கம் ஆழமாக வேரூன்றி விட்டது. இதனால் பலரின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. ஆண்கள், பெண்கள் என பாகுபாடுகள் இன்றி, இளம் தலைமுறையினர் பலரும் மது அருந்துகின்றனர். இதன் காரணமாக மது போதையில், என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், நடு ரோட்டில், முகம் சுழிக்க வைக்க கூடிய காரியங்களில் பலரும் ஈடுபடுகின்றனர்.
இந்த வரிசையில் ஒரு இளம் ஜோடி தற்போது பொது இடத்தில் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளது. சம்பவ இடத்தில் என்ன நிகழ்ந்தது? என்பதை காட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. நியூஸ் 24 யூடியூப் (YouTube) சேனலில் இந்த வைரல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், ஒரு இளைஞரும், இளம்பெண்ணும், போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று கொண்டு, கீழே இருந்தவர்களிடம் தகராறு செய்ததை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அந்த இளைஞர் மது அருந்தியிருந்தார். ஆனால் அந்த இளம்பெண் மது அருந்தியிருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
அந்த இளைஞர், போலீஸ் ஜீப்பின் மீது நின்று கொண்டே, காவல் துறை அதிகாரிகளை கடுமையான வார்த்தைகளால் வசை பாடினார். ஆனால் அந்த இளம்பெண்ணோ, இளைஞரை விட்டு விடும்படி, காவல் துறை அதிகாரிகளிடம் கெஞ்சி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர், இளம்பெண்ணை கட்டி பிடித்து கொண்டார்.

அப்போது இருவரும் தவறி கீழே விழ, காவல் துறை அதிகாரிகள், அவர்களை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நடந்தது என்னவென்றால், சம்பவத்தன்று அந்த இளைஞரும், இளம்பெண்ணும், சாலையில் சுற்றி கொண்டிருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. மாறாக போலீஸ் ஜீப் மீது ஏறி கொண்டு, பிரச்னை செய்துள்ளனர். அப்போதுதான் நாம் தற்போது காணும் வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அந்த இளைஞருக்கு 22 வயது ஆவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம் பெண் மைனர் என கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர்களின் காதலை வீட்டில் உள்ளவர்கள் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில், வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போதுதான் அவர்கள் காவல் துறை வசம் பிடிபட்டுள்ளனர். இதை தொடர்ந்துதான், போலீஸ் ஜீப் மீது ஏறி ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த இளைஞர் மற்றும் இளம்பெண்ணிடம் காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், பைக்கில் முகம் சுழிக்க வைக்கும் வகையில் பயணம் மேற்கொண்டனர். பொது இடம் என்றும் பாராமல், இளைஞர்களும், இளம்பெண்களும் கட்டுபிடித்து கொண்டும், முத்தமிட்டு கொண்டும் பைக்கில் பயணம் செய்யும் வைரல் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் மிக வேகமாக பரவின.
இந்த வரிசையில் தற்போது போலீஸ் ஜீப் மீதே ஏறி, அநாகரிகமான செயல்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபட தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்ற விழிப்புணர்களை, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி இந்த தவறை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications








