ஓடும் ரயிலில் தாலி கட்டிய காதலன்! உணர்ச்சி வசப்பட்டு கட்டி பிடித்த காதலி! வைரலாகும் வீடியோ!
ஓடும் ரயிலில் இளம் காதல் ஜோடிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்னதான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணாலும் அதற்காக ஓடுகிற ரயிலிலேயே தாலி கட்டலாமா என நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது? என்ற விரிவான தகவலை தான் இங்கே நாம் காண போகிறோம்.
ரயில் என்பது ஒரு போக்குவரத்து வாகனமாகும். மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் அதே நேரம் வசதியுடனும் செல்ல ரயில் ஒரு சிறந்த போக்குவரத்து வாகனமாக இருக்கிறது. ஒரு பக்கம் ரயில் போக்குவரத்து வாகனம் என்றாலும் மறுபக்கம் ரயில் என்பது மனிதர்களின் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. மக்கள் பலர் தினம் தோறும் ரயில் பயணத்தை மேற்கொண்டு தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாகவே ரயிலை வைத்திருக்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க மறுபுறம் கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என சொல்லுவார்கள். ஒருவர் கல்யாணம் செய்யும் போது ஊரை எல்லாம் கூட்டி பத்திரிகை அடித்து விருந்து வைத்து மிகப்பெரிய அளவில் திருமணத்தை நடத்த நினைப்பார்கள். ஒரு சில காதல் ஜோடிகளுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாமல் அவர்கள் வீட்டை விட்டு ஓடி போய் நண்பர்கள் அல்லது தனக்கு சப்போர்ட் செய்யும் நபர்கள் மத்தியில் திருமணம் செய்யும் சூழ்நிலை இருக்கும்.
ஆனால் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில் நடந்த கதையே வேறு. ரயிலை பயணத்திற்கு தவிர மக்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்துவார்கள். சிலர் சினிமா ஷூட்டிங் பயன்படுத்துவார்கள். இப்படி பல பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தி வந்த நிலையில் ஒரு காதல் ஜோடி தங்கள் திருமண வாழ்க்கையை இந்த ரயிலிலேயே தொடங்கி உள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இந்தியா முழுவதும் வயிறுதானே வீடியோவாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ஒருவர் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போதே ரயில் பயணத்திலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோவில் புல்லிங்கோ ஹேர் ஸ்டைலில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் அவருடன் இளம் பெண் ஒருவரும் இருக்கிறார் இவர்கள் இருவரும் காதல் ஜோடி போல தெரிகிறது. இந்த வீடியோவின் துவக்கத்தில் அந்த இளைஞரை அந்த இளம் பெண் கட்டிப்பிடிக்கிறார்.
பின்பு அங்கு ஏதோ பேச்சு வார்த்தை நடக்கிறது. அந்த இளைஞரின் கையில் தாலி இருக்கிறது. அந்த இளைஞர் மற்றும் அந்த இளம் பெண்ணை சுற்றி ரயிலில் உள்ள சக பயணிகள் பல சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் செல்போனில் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அங்கிருந்த மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க அந்த இளைஞர் அந்த இளம் பெண் கழுத்தில் தாலியை கட்டி தன் மனைவியாக்கினார்.

அங்கிருந்த ஒருவர் தன்னிடம் இருந்த மலர் மாலையை எடுத்து அவர்கள் கையில் கொடுக்க இருவரும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள். தனக்கு தாலி கட்டிய கணவனை கட்டிப்பிடிக்கிறார். இத்துடன் இந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோவில் ஓடும் ரயிலில் இளம் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் பயணம் என்பது நம் வாழ்வில் மறக்க முடியாத விஷயமாக இருக்கும் ஆனால் இந்த காதல் ஜோடிகளுக்கு வாழ்நாள் முழுவதும் எந்த காலத்திலும் இந்த ரயில் பயணத்தையும் மறக்க முடியாத விஷயமாக மாறிவிட்டது. ஆனால் ரயில்களில் இது போன்ற திருமண சடங்குகள் செய்வது என்பது ரயில்வே சட்ட விதிப்படி தவறான விஷயமாகும்.
ரயில் உள்ளே எந்த விதமான சடங்கு சம்பிரதாயங்களையும் செய்யக்கூடாது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என தெரியவில்லை. பலர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சூல் பகுதியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாஸிஜித் என்ற பகுதிக்கு செல்லும் ரயிலில் நடந்ததாக கூறுகிறார்கள்.
ரயில் என்பது வெறும் போக்குவரத்திற்கான ஒரு வாகனம் தான். இதில் இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வது தவறான முன் உதாரணமாக மாறிவிடும். இந்த வீடியோ டிரெண்டாவது மூலம் இதை தொடர்ந்து மேலும் பல இளைஞர்கள் இப்படியாக ரயிலில் திருமணம் செய்ய கிளம்பி விடுவார்கள். இதனால் ரயிலில் திருமணம் செய்த இந்த காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் பயணம் என்பது மக்களுக்கு பிடித்தமான விஷயம்தான். ஆனால் அதை மக்கள் தவறான ரீதியில் பயன்படுத்தக் கூடாது. ரயிலை வெறும் பயணத்திற்கான வாகனமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் சடங்கு சம்பிரதாயங்களை செய்து ஒரு தவறான டிரெண்டை ஏற்படுத்துவது குற்றமாகும். நீங்கள் தயவு செய்து இதே போன்ற விஷயங்களில் ஈடுபடாதீர்கள்


Click it and Unblock the Notifications









